சுவிஸ் நாட்டு நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கியது டிவிஎஸ்... இது ஒட்டுமொத்த நாட்டிற்குமே பெருமிதமான தருணம்!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor Company) நிறுவனம் சுவிஸ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் முன்னணி நிறுவனத்தின் பெரும் பங்கினை கையகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சுவிஸ் நாட்டு நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கியது தமிழகத்தை சேர்ந்த நிறுவனம்... இது ஒட்டுமொத்த நாட்டிற்குமே பெருமிதமான தருணம்!

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி (TVS Motor Company), சுவிஸ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனத்தின் 75 சதவீத பங்கை வெற்றிகரமாக கையகப்படுத்தியிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

சுவிஸ் நாட்டு நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கியது தமிழகத்தை சேர்ந்த நிறுவனம்... இது ஒட்டுமொத்த நாட்டிற்குமே பெருமிதமான தருணம்!

சுவிஸ் இ-மொபிலிட்டி குழுமம் (Swiss e-Mobility Group) எனும் நிறுவனத்தின் பங்குகளையே டிவிஎஸ் தற்போது கையகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் இந்த செயல் ஐரோப்பிய நாடுகளில் மிக ஆழமாக காலூன்ற செய்யும் வகையில் அமைந்துள்ளது.

சுவிஸ் நாட்டு நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கியது தமிழகத்தை சேர்ந்த நிறுவனம்... இது ஒட்டுமொத்த நாட்டிற்குமே பெருமிதமான தருணம்!

மிக சமீபத்தில் இந்நிறுவனம் நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் (Norton Motorcycles) மற்றும் இஜிஓ மூவ்மெண்ட் (EGO Movement) ஆகிய நிறுவனங்களைக் கையகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. இதனைத் தொடர்ந்தே தற்போது சுவிஸ் இ-மொபிலிட்டி குழுமத்தின் பெரும் பங்கினை டிவிஎஸ் கையகப்படுத்தியுள்ளது. இதுவும் சுவிஸ் நாட்டில் இயங்கி வந்த முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும்.

சுவிஸ் நாட்டு நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கியது தமிழகத்தை சேர்ந்த நிறுவனம்... இது ஒட்டுமொத்த நாட்டிற்குமே பெருமிதமான தருணம்!

மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால் அந்நாட்டில் இயங்கி வந்த மிகப் பெரிய இ-வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வந்த நிறுவனத்தையே டிவிஎஸ் தற்போது வாங்கியிருக்கின்றது. டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த செயல் ஒட்டுமொத்த நாட்டிற்குமே பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. முன்னதாக கையகப்படுத்தப்பட்ட இரு நிறுவனங்களும் தரமான மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பிரீமியம் தர வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும்.

சுவிஸ் நாட்டு நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கியது தமிழகத்தை சேர்ந்த நிறுவனம்... இது ஒட்டுமொத்த நாட்டிற்குமே பெருமிதமான தருணம்!

இதை போலவே சுவிஸ் இ-மொபிலிட்டியும் பிரீமியம் தர இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. இது முக்கியமாக மின்சாரத்தால் இயங்கும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியிலேயே முழு கவனத்துடன் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளை 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் டிவிஎஸ் தற்போது கொள்முதல் செய்திருக்கின்றது.

சுவிஸ் நாட்டு நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கியது தமிழகத்தை சேர்ந்த நிறுவனம்... இது ஒட்டுமொத்த நாட்டிற்குமே பெருமிதமான தருணம்!

மீதமுள்ள 25 சதவீத பங்குகளை பின்னர் (சிறிய இடைவெளியில்) டிவிஎஸ் நிறுவனமே வாங்கிக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், மிக விரைவில் சுவிஸ் இ-மொபிலிட்டியின் முழு பங்குகளுக்கு உரிமையாளராக டிவிஎஸ் மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுவிஸ் நாட்டு நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கியது தமிழகத்தை சேர்ந்த நிறுவனம்... இது ஒட்டுமொத்த நாட்டிற்குமே பெருமிதமான தருணம்!

கையகப்படுத்துதலைத் தொடர்ந்து நிறுவனத்தின் இ-பைக்குகளை சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் வர்த்தகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா பக்கம் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவிஸ் நாட்டு நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கியது தமிழகத்தை சேர்ந்த நிறுவனம்... இது ஒட்டுமொத்த நாட்டிற்குமே பெருமிதமான தருணம்!

சுவிஸ் இ-மொபிலிட்டி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு டிஏசிஎச் பிராந்தியத்தில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. ஆண்டுக்கு 100 மில்லியன் வருவாயுடன் இந்நிறுவனம் பெரும் சந்தையைக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, நிறுவனத்தின் சிலோ (Cilo), சிம்பெள் (Simpel), அல்லெக்ரோ (Allegro) மற்றும் ஜெனித் (Zenith) ஆகிய தயாரிப்புகளுக்கே நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

சுவிஸ் நாட்டு நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கியது தமிழகத்தை சேர்ந்த நிறுவனம்... இது ஒட்டுமொத்த நாட்டிற்குமே பெருமிதமான தருணம்!

இவற்றில் ஏதேனும் ஒன்றே மிக விரைவில் நமது இந்திய சந்தையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், நிறுவனத்திற்கு சொந்தமாக 31 விற்பனையகங்கள் மற்றும் 2 ஆன்லைன் தளங்கள் உள்ளன. இவற்றின் வாயிலாக அனல் பறக்கும் வகையில் புதிய தயாரிப்புகளை டிவிஎஸ் விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கையகப்படுத்துதல் நிகழ்வு நிறுவனத்தின் துணை நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் சிங்கப்பூர் பிடிஇ லிமிடெட் வாயிலாக, முழு பண பரிமாற்றமாக செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs acquires switzerland s largest e bike maker swiss e mobility group ag
Story first published: Thursday, January 27, 2022, 20:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X