பயணத்தின்போது மொபைலை எடுக்க தேவையேயில்ல... வாய்ஸ் கண்ட்ரோல்ஸ் உடன் புதிய டிவிஎஸ் எண்டார்க்125 எக்ஸ்டி அறிமுகம்

புதிய டிவிஎஸ் எண்டார்க் 125 எக்ஸ்டி (TVS NTorq 125 XT) ஸ்கூட்டர் இந்திய சந்தையில் ரூ.1.03 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எண்டார்க் 125 ஸ்கூட்டரை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பயணத்தின்போது மொபைலை எடுக்க தேவையேயில்ல... வாய்ஸ் கண்ட்ரோல்ஸ் உடன் புதிய டிவிஎஸ் எண்டார்க்125 எக்ஸ்டி அறிமுகம்

இந்தியாவில் பிரபலமான ஸ்கூட்டர்களுள் டிவிஎஸ் எண்டார்க்கையும் ஒன்றாக சொல்லலாம். 125சிசி ஸ்கூட்டரான இது ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் வழக்கமான எண்டார்க் 125 ஸ்கூட்டரில் இருந்து வேறுப்படும் விதமாக இணைப்பு வசதிகளுடன் புதிய எண்டார்க் 125 எக்ஸ்டி மாடல் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பயணத்தின்போது மொபைலை எடுக்க தேவையேயில்ல... வாய்ஸ் கண்ட்ரோல்ஸ் உடன் புதிய டிவிஎஸ் எண்டார்க்125 எக்ஸ்டி அறிமுகம்

இதன்படி, டிஎஃப்டி & எல்சிடி பேனல்களுடன் புதிய ஹைப்ரிட் ஸ்மார்ட் எக்ஸொனெக்ட் திரையை டிவிஎஸ் எண்டார்க் மாடல் பெற்றுள்ளது. இதன் மூலமாக இரு முக்கியமான அப்டேட்கள் எண்டார்க் 125 எக்ஸ்டி ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்றான ஸ்மார்ட்-எக்ஸ்-டால்க் (SmartXTalk) மூலம் ஓட்டுனர் தனது குரலின் மூலமாகவே ரைட் மோட்களை மாற்றுவது, திரையின் வெளிச்சத்தை அட்ஜெஸ்ட் செய்வது, பயணத்திற்கான வழிக்காட்டுதல் உள்ளிட்டவற்றை கண்ட்ரோல் செய்யலாம்.

பயணத்தின்போது மொபைலை எடுக்க தேவையேயில்ல... வாய்ஸ் கண்ட்ரோல்ஸ் உடன் புதிய டிவிஎஸ் எண்டார்க்125 எக்ஸ்டி அறிமுகம்

இவ்வளவு ஏன், மொபைல் போன் பாடல்களை கூட இன்ஸ்ட்ரூமெண்ட் திரையின் வாயிலாக, குரல் கட்டளையின் மூலம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம். அதுமட்டுமின்றி, இந்த மென்பொருள் வசதியானது எரிபொருள் குறைந்தாலோ, எரிபொருள் தேவையில்லாமல் வீணாகினாலோ, மொபைல் போனின் சார்ஜ் குறைந்தாலோ அல்லது மழை பெய்ய துவங்கினாலோ அதுகுறித்து ஓட்டுனரை எச்சரிக்கும்.

பயணத்தின்போது மொபைலை எடுக்க தேவையேயில்ல... வாய்ஸ் கண்ட்ரோல்ஸ் உடன் புதிய டிவிஎஸ் எண்டார்க்125 எக்ஸ்டி அறிமுகம்

மேலும், ஓட்டுனரின் குரல் கட்டளைக்கு இணங்க வேறு சில எச்சரிக்கைகளையும் கூட பெற முடியும் என்கிறது டிவிஎஸ். இரண்டாவது முக்கியமான அப்டேட் ஸ்மார்ட்-எக்ஸ்-ட்ராக் (SmartXTrack) என்கிற பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளின் மூலம் இயக்கத்தில் இல்லாமல் டிராஃபிக்கில் நின்று கொண்டிருக்கும்போது கிரிக்கெட், கால்பந்து போட்டிகளின் ஸ்கோர்கள், சமூக வலைத்தள அப்டேட்கள், செய்திகள், கால வெப்பநிலை முதலியவற்றை இன்ஸ்ட்ரூமெண்ட் திரை வாயிலாக பெறலாம்.

பயணத்தின்போது மொபைலை எடுக்க தேவையேயில்ல... வாய்ஸ் கண்ட்ரோல்ஸ் உடன் புதிய டிவிஎஸ் எண்டார்க்125 எக்ஸ்டி அறிமுகம்

அதுமட்டுமில்லாமல், ஸ்மார்ட்-எக்ஸ்-ட்ராக் மூலமாக மொபைல் போனுக்கு அழைப்புவிடுக்கும் நபரின் புகைப்படத்தை அழைப்பின்போது இன்ஸ்ட்ரூமெண்ட் திரையில் காண்பிக்க வைக்கலாம். இந்த இரு முக்கியமான அப்டேட்களை தவிர்த்து புதிய டிவிஎஸ் எண்டார்க் 125 எக்ஸ்டி ஸ்கூட்டருக்கு புதியதாக நியான் பச்சை நிற பெயிண்ட் தேர்வும் வழங்கப்பட்டுள்ளது. இது வழக்கமான எண்டார்க் ஸ்கூட்டர்களில் இருந்து புதிய எண்டார்க் 125 எக்ஸ்டி ஸ்கூட்டரை வேறுப்படுத்தி காட்டும்.

பயணத்தின்போது மொபைலை எடுக்க தேவையேயில்ல... வாய்ஸ் கண்ட்ரோல்ஸ் உடன் புதிய டிவிஎஸ் எண்டார்க்125 எக்ஸ்டி அறிமுகம்

இந்த புதிய எண்டார்க் ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முதன்மை துணை தலைவர் அனிருதா ஹல்டர் கருத்து தெரிவிக்கையில், "டிவிஎஸ் எண்டார்க் 125 ஆனது, ஸ்டைல், செயல்திறன் மற்றும் தொழிற்நுட்பம் ஆகிய மூன்று முக்கிய தூண்களில் கட்டமைக்கப்பட்ட தனித்துவமான பண்புக்கூறுகளுடன் பலரது விருப்பமான, ஸ்போர்டியான 125சிசி ஸ்கூட்டராக மாறியுள்ளது.

பயணத்தின்போது மொபைலை எடுக்க தேவையேயில்ல... வாய்ஸ் கண்ட்ரோல்ஸ் உடன் புதிய டிவிஎஸ் எண்டார்க்125 எக்ஸ்டி அறிமுகம்

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் டிவிஎஸ் எண்டார்க் சூப்பர் ஸ்குவாட் எடிசன் மற்றும் எண்டார்க் ரேஸ் எடிசன் எக்ஸ்பி ஸ்மார்ட் எக்ஸொனெக்ட் ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க வெற்றிக் கதைக்கு பிறகு, இப்போது டிவிஎஸ் எண்டார்க் 125 எக்ஸ்டி மாடலை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது இணைப்பு மற்றும் தொழிற்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது.

பயணத்தின்போது மொபைலை எடுக்க தேவையேயில்ல... வாய்ஸ் கண்ட்ரோல்ஸ் உடன் புதிய டிவிஎஸ் எண்டார்க்125 எக்ஸ்டி அறிமுகம்

டிவிஎஸ் எண்டார்க் 125 எக்ஸ்டி ஆனது தொழிற்துறையின் முதல் ஹைப்ரிட் டிஎஃப்டி கன்சோல் மற்றும் ஸ்மார்ட்-எக்ஸ்-டால்க், ஸ்மார்ட்-எக்ஸ்-ட்ராக் & டிவிஎஸ் இண்டெல்லி-கோ உள்ளிட்டவற்றுடனான டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸொனெக்ட் போன்ற அதிநவீன வசதிகளுடன் இணைப்பு வசதி பெற்ற இருசக்கர வாகன இயக்கத்தில் புதிய மைல்கல்லை நிர்ணயித்துள்ளது" என்றார்.

பயணத்தின்போது மொபைலை எடுக்க தேவையேயில்ல... வாய்ஸ் கண்ட்ரோல்ஸ் உடன் புதிய டிவிஎஸ் எண்டார்க்125 எக்ஸ்டி அறிமுகம்

புதிய டிவிஎஸ் எண்டார்க் 125 எக்ஸ்டி ஸ்கூட்டரிலும் வழக்கமான 124.8சிசி, 3-வால்வு, காற்று-குளிர்விப்பு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜினே பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 7,000 ஆர்பிஎம்-இல் 9.25 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 10.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இதனுடன் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

பயணத்தின்போது மொபைலை எடுக்க தேவையேயில்ல... வாய்ஸ் கண்ட்ரோல்ஸ் உடன் புதிய டிவிஎஸ் எண்டார்க்125 எக்ஸ்டி அறிமுகம்

இது ஆற்றலை ஸ்கூட்டரின் பின் சக்கரத்திற்கு வழங்குகிறது. எண்டார்க் 125 ஸ்கூட்டரை தற்கால ஜென்ரேஷன் இசட் வாடிக்கையாளர்களுக்கான தயாரிப்பாக டிவிஎஸ் விளம்பரப்படுத்தி வருகிறது. இதற்கு ஏற்ப தற்போது, குரல் கட்டளைகள் மற்றும் சமூக வலைத்தள அப்டேட்கள் போன்றவை இந்த ஸ்கூட்டரில் களமிறக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
Tvs ntorq 125 xt launched in india at rs 1 02 823 details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X