டிவிஎஸ் எண்டார்க் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா!! புதியதாக என்னென்ன அப்டேட்கள்?

கவர்ச்சிக்கரமான ஸ்டைல் மற்றும் செயல்படுதிறன் மட்டுமின்றி, அட்டகாசமான தொழிற்நுட்பங்களினாலும் டிவிஎஸ் எண்டார்க் மற்ற மாடல்களில் இருந்து தனித்து தெரியக்கூடியதாக உள்ளது. ஸ்டாண்டர்ட் மாடல், ரேஸ் எடிசன், சூப்பர் ஸ்குவாட் எடிசன் மற்றும் ரேஸ் எக்ஸ்பி எடிசன் என மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் என்டார்க் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது.

டிவிஎஸ் எண்டார்க் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா!! புதியதாக என்னென்ன அப்டேட்கள்?

இவை ஒவ்வொன்றிலும் தனித்துவமான ஸ்டைல் மற்றும் நிறத்தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், எண்டார்க்கின் வேரியண்ட்களின் வரிசையை விரிவுப்படுத்துவதில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தீவிரமாக உள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படத்தின் மூலம் பார்க்கும்போது, எண்டார்க்கின் புதிய வேரியண்ட் எக்ஸ்டி என்ற பெயரில் அழைக்கப்பட உள்ளதை அறிய முடிகிறது.

டிவிஎஸ் எண்டார்க் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா!! புதியதாக என்னென்ன அப்டேட்கள்?

புதிய டிவிஎஸ் எண்டார்க் எக்ஸ்டி வேரியண்ட்டில் அப்டேட் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்பட சில புதிய தொழிற்நுட்ப வசதிகளை எதிர்பார்க்கிறோம். எண்டார்க்கின் தற்போதைய மற்ற வேரியண்ட்களை போல புதிய எக்ஸ்டி வேரியண்ட்டும் தனக்கான தனித்துவ ஸ்டைலையும், நிறத்தேர்வுகளையும் பெற்றுவரலாம். இவை தவிர்த்து புதியதாக வேறெந்த அப்டேட்டும் இந்த புதிய எண்டார்க் ஸ்கூட்டரில் கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்பில்லை.

டிவிஎஸ் எண்டார்க் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா!! புதியதாக என்னென்ன அப்டேட்கள்?

புதிய எக்ஸ்டி வேரியண்ட் ஆனது எண்டார்க்கின் டாப் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படலாம். இதனால் இதன் எக்ஸ்-ஷோரூம் விலையினை நிச்சயமாக ரூ.90 ஆயிரத்திற்கு மேல் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் தற்போதைய டாப்-வேரியண்ட்டான ரேஸ் எக்ஸ்பி-இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.89,211 ஆக உள்ளது. எண்டார்க்கின் முதல் 3 வேரியண்ட்களின் விலைகள் ரூ.77,106இல் இருந்து ரூ.87,661 வரையில் உள்ளன.

டிவிஎஸ் எண்டார்க் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா!! புதியதாக என்னென்ன அப்டேட்கள்?

எண்டார்க் ஸ்கூட்டரில் 124.8சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9.25 பிஎச்பி மற்றும் 10.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. எண்டார்க் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 95kmph ஆகும். இந்த ஸ்கூட்டரில் 0-வில் இருந்து 60kmph வேகத்தை 9 வினாடிகளிலேயே எட்டிவிடலாம். ஏற்கனவே கூறியதுபோல், தொழிற்நுட்ப அம்சங்களிலும் சிறந்ததாக எண்டார்க் விளங்குகிறது.

டிவிஎஸ் எண்டார்க் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா!! புதியதாக என்னென்ன அப்டேட்கள்?

இதன்படி, 60 வசதிகளை வழங்கக்கூடிய, ப்ளூடூத் உடன் இணைக்கக்கூடிய முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் எண்டார்க் ஸ்கூட்டரில் வழங்கப்படுகிறது. டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸொனெக்ட் ப்ளாட்ஃபாரத்தின் மூலம் செயல்படும் இந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலின் மூலம் மொபைல் போனிற்கு வரும் அழைப்புகள் & குறுஞ்செய்திகள், வழிக்காட்டுதல் வசதி மற்றும் போன் சிக்னல் & பேட்டரி சார்ஜின் நிலை உள்ளிட்டவற்றை பெறலாம்.

டிவிஎஸ் எண்டார்க் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா!! புதியதாக என்னென்ன அப்டேட்கள்?

இவற்றுடன், கடைசியாக ஸ்கூட்டரை பார்க் செய்த இடம் போன்றவற்றையும் ஓட்டுனர் அறிய முடியும். ரைடிங்கை மேம்படுத்த, எண்டார்க்கில் ஓட்டுனர் தனது ரைடிங்கை மதிப்பாய்வு செய்து பார்க்க முடியும். இதனை அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர முடியும். எண்டார்க்கில் வழங்கப்படுகின்ற மற்ற உதவிக்கரமான அம்சங்கள் என்று பார்த்தால், என்ஜின் கில் ஸ்விட்ச், பாஸ் பை ஸ்விட்ச், இருக்கைக்கு அடியில் 20 லிட்டர் கொள்ளளவில் சேமிப்பிடம் முதலியவை வழங்கப்படுகின்றன.

டிவிஎஸ் எண்டார்க் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா!! புதியதாக என்னென்ன அப்டேட்கள்?

இவை மட்டுமின்றி, யுஎஸ்பி சார்ஜர், வெளிப்புறத்தில் பெட்ரோல் நிரப்பும் பகுதி, பெட்ரோல் குறைவதை சுட்டிக்காட்டுவான், இரட்டை ஸ்டேரிங் லாக் மற்றும் அதிவேக எச்சரிப்பான் போன்றவற்றையும் டிவிஎஸ் எண்டார்க் மாடல் பெறுகிறது. பிரேக்கிங் பணியை இந்த ஸ்கூட்டரில் 220மிமீ ரோடோ பெடல் டிஸ்க் பிரேக்குகளுடன் பார்க்கிங் ப்ரேக் கவனித்து கொள்கிறது.

டிவிஎஸ் எண்டார்க் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா!! புதியதாக என்னென்ன அப்டேட்கள்?

புதிய வேரியண்ட்டின் வருகையால் ஒன்று மட்டும் நிச்சயம், எண்டார்க் ஸ்கூட்டரின் விற்பனை மேலும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். தற்போதைக்கு இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் முதல் 5 ஸ்கூட்டர்களுள் ஒன்றாக டிவிஎஸ் எண்டார்க் விளங்குகிறது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவுற்ற 2021-22 நிதியாண்டில் மட்டும் மொத்தம் 2,49,277 எண்டார்க் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிவிஎஸ் எண்டார்க் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா!! புதியதாக என்னென்ன அப்டேட்கள்?

இது அதற்கு முந்தைய 2020-21 நிதியாண்ட்டை காட்டிலும் 6.75% குறைவாகும். ஏனெனில் அந்த ஆண்டில் 2,51,491 எண்டார்க் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஏறக்குறைய 2 ஆயிரம் யூனிட்கள் மட்டுமே குறைந்துள்ளது என்றாலும், இது டிவிஎஸ் மோட்டாரின் மொத்த விற்பனையில் எதிரொலித்து இருக்கும். எண்டார்க் மட்டுமின்றி, கடந்த நிதியாண்டிலும் பல்வேறு முன்னணி பிராண்ட்களின் 125சிசி ஸ்கூட்டர்கள் 2020-21 நிதியாண்ட்டை காட்டிலும் குறைவான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன.

டிவிஎஸ் எண்டார்க் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா!! புதியதாக என்னென்ன அப்டேட்கள்?

இதற்கு கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவல் ஒரு காரணம் என்றாலும், குறைக்கடத்திகள் பற்றாக்குறை முக்கிய காரணமாக இருந்தது. இருப்பினும், சுஸுகி ஸ்கூட்டர்களான ஆக்ஸஸ் மற்றும் பர்க்மேன் மாடல்கள் மட்டுமே நேர்மறையான விற்பனையை கடந்த 2021-22 நிதியாண்டில் பதிவு செய்துள்ளன.

குறிப்பு: இருசக்கர வாகனங்களின் படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
Tvs ntorq new variant teased more features
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X