ஹைட்ரஜனால் இயங்கும் ஸ்கூட்டரை உருவாக்கும் பணியில் டிவிஎஸ்... எந்தவொரு இந்திய நிறுவனமும் முன்னெடுக்காத முயற்சி!

எந்தவொரு இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளரும் முன்னெடுக்காத முயற்சியில் டிவிஎஸ் (TVS) நிறுவனம் களமிறங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லால் இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தியையே கையில் எடுத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் கூடுதல் முக்கிய விபரங்களை இந்தப் பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஹைட்ரஜனால் இயங்கும் ஸ்கூட்டரை உருவாக்கும் பணியில் டிவிஎஸ்... ஒட்டுமொத்த இந்தியர்களும் ஹேப்பி அண்ணாச்சி!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் வெகு விரைவில் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் (hydrogen fuel cell)-லால் இயங்கும் இருசக்கர வாகனங்களை உருவாக்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது. அண்மையில் நிறுவனம் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லால் இயங்கக் கூடிய ஸ்கூட்டர் ரக வாகனத்திற்கு பேடண்ட் உரிமையை பெற்றதாக ஓர் தகவல் தற்போது கசிந்திருக்கின்றது.

ஹைட்ரஜனால் இயங்கும் ஸ்கூட்டரை உருவாக்கும் பணியில் டிவிஎஸ்... ஒட்டுமொத்த இந்தியர்களும் ஹேப்பி அண்ணாச்சி!

இந்த தகவலின் வாயிலாகவே தமிழகத்தின் ஓசூரை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனம் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இயங்கக் கூடிய இருசக்கர வாகன உற்பத்தியில் களமிறங்கியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த தகவல் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஹைட்ரஜனால் இயங்கும் ஸ்கூட்டரை உருவாக்கும் பணியில் டிவிஎஸ்... ஒட்டுமொத்த இந்தியர்களும் ஹேப்பி அண்ணாச்சி!

குறிப்பாக, இந்தியாவின் எந்தவொரு இருசக்கர வாகன உற்பத்தியாளரும் முன்னெடுக்காத ஓர் செயலை டிவிஎஸ் கையில் எடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும், நிறுவனத்தின் இந்த தயாரிப்பை நோக்கி அனைவரின் எதிர்பார்ப்பும் திசை திரும்பத் தொடங்கியிருக்கின்றது. மிக முக்கியமாக மின்சார இருசக்கர வாகனத்தை விரும்புவோரின் கவனத்தை இந்த தகவல் வெகுவாகவே ஈர்த்துள்ளது.

ஹைட்ரஜனால் இயங்கும் ஸ்கூட்டரை உருவாக்கும் பணியில் டிவிஎஸ்... ஒட்டுமொத்த இந்தியர்களும் ஹேப்பி அண்ணாச்சி!

டிவிஎஸ் நிறுவனத்தின் பிரபலமான ஸ்கூட்டர் மாடல்களில் ஐ-க்யூப் (TVS iQube)-ம் ஒன்று. இந்த இருசக்கர வாகனத்தை நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வெர்ஷனில் மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த வாகனத்தையே நிறுவனம் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் வெர்ஷனிலும் விற்பனைக்கு வழங்க இருப்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது.

ஹைட்ரஜனால் இயங்கும் ஸ்கூட்டரை உருவாக்கும் பணியில் டிவிஎஸ்... ஒட்டுமொத்த இந்தியர்களும் ஹேப்பி அண்ணாச்சி!

நிறுவனம் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் ஐ-க்யூப் ஸ்கூட்டரின் வரை படத்தையும் வெளியிட்டிருக்கின்றது. இந்த வரைபடம் என்ன மாதிரியான முக்கிய கூறுகளுடன் இருசக்கர வாகனம் உருவாக்கப்பட உள்ளது என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் வாயுவை நிரப்புவதற்கான சிலிண்டர் எந்த இடத்தில் இடம் பெற இருக்கின்றது, வாயுவை மின்சாரமாக கன்வெர்ட் செய்யும் கருவி மற்றும் பேட்டரி போன்ற பிற முக்கிய அம்சங்கள் எந்த இடத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளன என்பதை வெளிக் காட்டும் வகையிலேயே இந்த படம் உள்ளது.

ஹைட்ரஜனால் இயங்கும் ஸ்கூட்டரை உருவாக்கும் பணியில் டிவிஎஸ்... ஒட்டுமொத்த இந்தியர்களும் ஹேப்பி அண்ணாச்சி!

இவற்றை வைத்து பார்க்கையில் இந்த ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக உயரிய தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்டு வருவது தெரிய வந்திருக்கின்றது. இதனால்தான், இப்போதே இவ்வாகனம் பலரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றது.

ஹைட்ரஜனால் இயங்கும் ஸ்கூட்டரை உருவாக்கும் பணியில் டிவிஎஸ்... ஒட்டுமொத்த இந்தியர்களும் ஹேப்பி அண்ணாச்சி!

ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் எலெக்ட்ரிக் வாகனங்கள் வழக்கமான மின்சார வாகனத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றன. ஏனெனில் இந்த வாகனத்தில் உள்ள சார்ஜ் செய்யும் வேலையை ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்களே பார்த்துக் கொள்ளும். அதாவது, ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை வேதி வினை மாற்றம் செய்வதன் வாயிலாக அதனை மின்சாரமாக மாற்றிக் கொள்ள முடியும். இந்த செயலின்போது வெறும் சூடான நீராவி மட்டுமே வெளியேறும்.

ஹைட்ரஜனால் இயங்கும் ஸ்கூட்டரை உருவாக்கும் பணியில் டிவிஎஸ்... ஒட்டுமொத்த இந்தியர்களும் ஹேப்பி அண்ணாச்சி!

ஆகையால், சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஹைட்ரஜன் ஃப்யூவல் வாகனங்கள் ஏற்படுத்தாது. அதேவேலையில், ஒரு முறை ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை நிரப்புவதனால் பல நூறு கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதை நிரப்ப பெரியளவில் நேரமும் தேவைப்படாது. வழக்கமான சிஎன்ஜி ஆட்டோக்களில் வாயுவை நிரப்புவதைப் போலவே மிகவும் குறைவான நேரமே தேவைப்படும்.

ஹைட்ரஜனால் இயங்கும் ஸ்கூட்டரை உருவாக்கும் பணியில் டிவிஎஸ்... ஒட்டுமொத்த இந்தியர்களும் ஹேப்பி அண்ணாச்சி!

இதனால்தான் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் வாகனங்கள் வழக்கமான மின்சார வாகனங்களைக் காட்டிலும் மிக சிறந்தவை என கூறப்படுகின்றது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும், நேரத்தை மிச்சப்படுத்துவதிலும் அதிக பங்களிப்பை இவை வழங்கும். ஆனால், இந்த ரக இருசக்கர வாகனம் என்ன விலையில் விற்பனைக்கு வரும் என்பதுதான் இப்போது வரை கேள்விக்குறியாக உள்ளது.

ஹைட்ரஜனால் இயங்கும் ஸ்கூட்டரை உருவாக்கும் பணியில் டிவிஎஸ்... ஒட்டுமொத்த இந்தியர்களும் ஹேப்பி அண்ணாச்சி!

இருப்பினும் தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைக் காட்டிலும் சற்று காஸ்ட்லியான வாகனமாகவே அவை விற்பனைக்கு வரலாம் என யூகிக்க முடிகின்றது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளின் காரணமாக சற்று அதிக விலையில் அவை எதிர்பார்க்கப்படுகின்றன.

Source: motorcycle news

குறிப்பு: படங்கள் சில உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Tvs patent hydrogen fuel cell powered electric scooter
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X