Just In
- 29 min ago
ஜீப் காம்பஸ் அறிமுகமாகி அதற்குள் 5 வருஷம் ஆயிடுச்சா!! புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!
- 1 hr ago
இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!
- 2 hrs ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 3 hrs ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
Don't Miss!
- Finance
ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு.. இனி மக்கள் நிம்மதியாக இருக்கலாம்..!!
- Movies
ஜெயிலர் படத்தில் இவங்க தான் ஹீரோயினா? இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கலையே.. முதல்முறையாக ரஜினியுடன்!
- News
தமிழக பொறியியல் கலந்தாய்வு.. கல்லூரிகளில் 7 நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் இடங்கள் காலி
- Sports
சிஎஸ்கே வீரர் அதிரடி.. 9 மாதத்திற்கு பிறகு டி20 விளையாடிய வில்லியம்சன்.. வெஸ்ட் இண்டீஸ்க்கு சோகம்
- Technology
நோ, நோ, தோற்ற இடத்திலேயே ஜெயிப்போம்., இது நல்ல பாடம்: ISRO வின் அடுத்த பிளான்!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கும் டிவிஎஸ் ரோனின் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலையே ரூ. 1.49 லட்சம்தான்!
டிவிஎஸ் நிறுவனம் அதன் புதுமுக 225 சிசி ரோனின் (TVS Ronin) பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் (TVS) நிறுவனம், இந்திய சந்தையில் அதிகரித்து வரும் போட்டியைச் சமாளிக்கும் விதமாக புதுமுக மோட்டார்சைக்கிள் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. ரோனின் (TVS Ronin) எனும் மோட்டார்சைக்கிளையே அது அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இது ஓர் ஸ்கிராம்ப்ளர் ரக மோட்டார்சைக்கிளாகும்.

இந்தியாவில் இந்த (ஸ்கிராம்ப்ளர்) பிரிவில் விற்கப்படும் இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. எனவேதான் தங்கள் நிறுவனம் சார்பாக ஓர் தயாரிப்பை இந்த பிரிவில் விற்பனைக்கு வழங்கும் பொருட்டு டிவிஎஸ் நிறுவனம் ரோனின் பைக்கை தற்போது (ஜூன் 6) வெளியீடு செய்திருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் ரோனின் விற்பனைக்குக் கிடைக்கும். இப்பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 1.49 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒற்றை நிற தேர்வு மற்றும் ஒற்றை சேனல் ஏபிஎஸ் உடன் விற்பனைக்குக் கிடைக்கக் கூடிய ரோனின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

இந்த பைக்கை ட்யூவல் டோன் நிறம் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடனும் டிவிஎஸ் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இந்த தேர்வின் விலை ரூ. 1,56,500 ஆகும். இதுவே, ரோனின் உடைய இரண்டாவது தேர்வாகும். இதன் மூன்றாவது, மூவண்ண அலங்கரிப்பு மற்றும் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதியுடன் கிடைக்கும். இந்த தேர்விற்கு டிவிஎஸ் நிறுவனம் ரூ. 1.68 லட்சம் விலையை நிர்ணயித்துள்ளது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

விலை விபரம் பட்டியலாக:
TVS Ronin | Price |
Single Tone Single Channel | ₹1,49,000 |
Dual Tone Single Channel | ₹1,56,500 |
Triple Tone Dual Channel | ₹1,68,750 |

ஒற்றை நிற தேர்வில் லைட்னிங் பிளாக் மற்றும் மக்மா ரெட் ஆகிய வண்ண தேர்வுகளும், இரட்டை நிற தேர்வில் டெல்டா ப்ளூ மற்றும் ஸ்டார்கசே பிளாக் ஆகிய வண்ண தேர்வுகளும், மூவண்ண தேர்வு கேலடிக் கிரே மற்றும் டான் ஆரஞ்சு ஆகிய வண்ண தேர்வுகளும் வழங்கப்படும் என ரோனின் பைக்கின் அறிமுக நிகழ்வில் டிவிஎஸ் அறிவித்திருக்கின்றது.

டிவிஎஸ் ரோனின் ஏற்கனவே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் ராயல் என்பீல்டு ஹன்டர் 350 மற்றும் யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் உள்ளிட்ட இருசக்கர வாகன மாடல்களுக்கு போட்டியளிக்கும் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் சிறப்பு வசதிகளாக வட்ட வடிவ ஹெட்லேம்ப், டியர் டிராப் ஃப்யூவல் டேங்க், அகலமான மட்குவார்ட், கோல்டன் வண்ண அப்சைடு டவுன் ஃபோர்க், ஸ்லிம்மான இருக்கை மற்றும் கன்வென்ஷனல் கைப்பிடி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுமட்டுமின்றி, பெல்லி பேன் மற்றும் சூப்பரான வெளியேற்றும் வசதிக் கொண்ட எக்சாஸ்ட் ஆகிய அம்சங்களும் இப்பைக்கில் இடம் பெற்றிருக்கின்றது. மேலும், பைக்கில் கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் விதமாக மல்டி ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல் இரு விதமான நிற பூச்சுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் சிலவற்றையும் இந்த ரோனின் பைக்கில் டிவிஎஸ் வழங்கியிருக்கின்றது. அந்தவகையில், பைக்கில் இடம் பெற்றிருக்கும் மிக முக்கியமான அம்சமாக ஸ்மார்ட்எக்ஸோன்னெக்ட் இணைப்பு வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் வாயிலாக எண்ணற்ற வசதிகளை பைக்கின் திரையின் வாயிலாக நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

திருப்பத்திற்கு திருப்பம் வழி பற்றிய தகவலை வழங்குதல், ரேஸ் டெலிமேட்ரி, குறைவான எரிபொருள் இருக்கும் எனில் அதுகுறித்து எச்சரிக்கும் தொழில்நுட்பம், கிராஷ் அலர்ட், அழைப்பு மற்றும் குறுஞ்செய்தியை அறியும் வசதி என பல சிறப்புகள் ரோனின் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கில் புதுமையாக 225 சிசி மோட்டாரை பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் 20 பிஎச்பி பவரையும், 20 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இந்த மோட்டார் இயங்கும். ரோனின் பைக்கின் உச்சபட்ச வேகம் மணிக்கு 120 கிமீ என டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

இந்த உச்சபட்ச வேகத்தைக் கட்டுப்டுத்தும் விதமாகவே இப்பைக்கை டிவிஎஸ் நிறுவனம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்யூவல் சேனல் ஏபிஸ் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவத்திருக்கின்றது. இதுமட்டுமின்றி, சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இரு வீல்களிலும் டிஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய பைக் நிச்சயம் இந்திய இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் என நம்பப்படுகின்றது.
-
உங்க காரின் கண்ணாடி திடீர்ன்னு உடைஞ்சு போச்சா அப்ப இந்த 5 விஷயங்கள் தான் காரணமா இருக்கும்...
-
விமானிகளாக தாய்-மகள்... ஒன்றாக விமானத்தை இயக்கி சாதனை!! அமெரிக்காவில் நடந்த ருசிகர சம்பவம்!
-
இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்... 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!