Just In
- 11 hrs ago
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- 12 hrs ago
மாருதியின் இந்த 3 தயாரிப்புகளுக்குதான் இந்தியாவில் டிமாண்ட் மிக மிக அதிகம்... வேற லெவல்ல விற்பனையாகியிருக்கு!
- 23 hrs ago
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- 1 day ago
நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!
Don't Miss!
- News
காங்கிரசுக்கு அன்று அண்ணா! திமுகவுக்கு இன்று அண்ணாமலை! ஆட்சி மாற்றம் உறுதி! நயினார் பேச்சு!
- Movies
காலேஜ் படிக்கும் போது தான் எனக்கு கடைசி தங்கச்சி பிறந்தது.. ஆர்ஜே பாலாஜி சொன்ன குடும்ப ஸ்டோரி!
- Sports
ஒரே இன்னிங்ஸில் 2 முறை பேட்டிங்.. ஜடேஜா- ஸ்ரேயாஸ்க்கு வந்த வாய்ப்பு.. பயிற்சி ஆட்டத்தில் சுவாரஸ்யம்
- Finance
Elon Musk-ஐ புலம்பவிட்ட Tesla, SpaceX, Twitter ஊழியர்கள்..! - வீடியோ
- Technology
WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பை விளக்கும் வீடியோ வெளியீடு... இவ்ளோ சிறப்பு வசதிகள் இருக்கா!..
டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் (TVS iQube) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பை விளக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் நேற்று முன் தினம் (மே 20) 2022 ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மூன்று விதமான தேர்வுகளில் புதிய ஐக்யூப் இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் ஆரம்ப நிலை மாடலுக்கு ரூ. 1.14 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஃபேம்2 திட்டத்தின்கீழ் கிடைக்கும் ஆன்-ரோடு விலை இதுவாகும். இதன் அதிக விலைக்கேற்ப பன்மடங்கு சிறப்பு வசதிகளைக் கொண்டதாக 2022 டிவிஎஸ் ஐக்யூப் காட்சியளிக்கின்றது. அதாவது, பழைய ஐக்யூப் மாடலைக் காட்டிலும் பன்முக கூடுதல் சிறப்பு வசதிகளுடன் புதிய 2022 ஐக்யூப் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

அப்படி என்ன மாதிரியான அம்சங்களுடன் அது விற்பனைக்கு வந்திருக்கின்றது என்பதை விளக்கும் வீடியோவையே டிவிஎஸ் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. டிவிஎஸ் ஐக்யூப் இந்தியாவின் அனைத்து விதமான காலநிலைக்கும் ஏற்ப உருவாக்கப்பட்டிருப்பதையே அந்த வீடியோ முதலில் தெரிவிக்கின்றது. அதாவது, டிவிஎஸ் ஐக்யூப் ஐபி67 மற்றும் ஏஐஎஸ் 156 தர சான்று பெற்றது என்பதை தெரிவித்துள்ளது. இதற்கு பின்னரே ஸ்கூட்டரின் பிற அம்சங்களை அது ஒன்றன் பின் ஒன்றாக விவரிக்கின்றது.

அந்தவகையில், இந்தியாவின் அனைத்து விதமான சாலைகளிலும் மிக சிறப்பான பயண அனுபவத்தை வழங்கக் கூடிய ட்வின் அட்ஜஸ்டபிள் ஷாக் அப்சார்பர் மற்றும் அகலமான 90/90-12 டயர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருப்பதையும் இந்த வீடியோ உறுதிப்படுத்துகின்றது. இத்துடன், கூடுதல் அம்சங்களாக மிக சௌகரியமான இருக்கை, எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி உள்ளிட்ட சிறப்புகளையும் ஐக்யூப் பெற்றிருப்பதை வீடியோ தெரியப்படுத்துகின்றது.

140 கிமீ ரேஞ்ஜ் திறன், இருக்கைக்கு அடியில் 32 லிட்டர் அளவிலான பெரிய இட வசதி, ப்ளூடூத் இணைப்பு, கிளவுட் இணைப்பு, லைவ் டிராக்கிங், நோடிஃபிகேஷன், ஆன்டி தெஃப்ட் அலர்ட் உள்ளிட்ட அம்சங்களும் 2022 ஐக்யூபில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், கூடுதல் சிறப்பு வசதிகளாக 7 அங்குல தொடுதிரை, 5 வே ஜாய் ஸ்டிக், அலெக்ஸா உள்ளிட்ட சிறப்பு தொழில்நுட்ப வசதிகளும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.

இதனால்தான் பலரின் மனம் கவர்ந்த வாகனமாக அது தற்போது மாறியிருக்கின்றது. கூடுதல் மனங்களைக் கவரும் வகையிலேயே இந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஐக்யூப், ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப் எஸ்டி ஆகிய மூன்று விதமான வேரியண்டுகளிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும்.

அனைத்து வேரியண்டுகளுக்குமான புக்கிங் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் கோயம்பத்தூர் ஆகிய இரு நகரங்களில் மட்டுமே டிவிஎஸ் ஐக்யூப் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவ்விரு நகரங்களிலும்கூட தற்போது புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது. ரூ. 999 என்ற குறைவான முன் தொகையில் இ-ஸ்கூட்டரை புக் செய்து கொள்ளலாம்.

முன்னதாக 32 நகரங்களில் மட்டுமே இ-ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைத்து வந்தது. ஆனால், இப்போது 85 நகரங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் வகையில் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கின்றது. விரைவில் இதன் டெலிவரி பணிகளும் நாட்டில் தொடங்கப்பட இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரின் ஐக்யூப் வேரியண்டில் 5 அங்குல திரையும், மற்ற இரு வேரியண்டுகளில் 7 அங்குல திரையும் வழங்கப்பட்டிருக்கும்.

இது டிவிஎஸ்-இன் ஸ்மார்ட்எக்ஸோன்னக்ட் (SmartXonnect system) தொழில்நுட்பத்தைக் கொண்டது. இந்த அம்சத்தின் வாயிலாகவே நேவிகேஷன், மொபைல் இணைப்பு உள்ளிட்ட முக்கிய வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும். திரை விஷயத்தில் மட்டுமல்ல பேட்டரி பேக் விஷயத்திலும் இவை மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன.
அந்தவகையில், ஐக்யூப் எஸ்டி வேரியண்டை 4.56 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கிலும், ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப் ஆகிய இரு வேரியண்டுகளில் 3.04 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பேட்டரிகளும் ஐபி67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் தர சான்று பேட்டரிகள் ஆகும்.

இந்த பேட்டரிகளை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 4.30 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும். மின் மோட்டாரை பொருத்தவரை அனைத்த தேர்வுகளும் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன. அதாவது, 4.4 kW பிஎல்டிசி ஹப் மவுண்டட் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 3kW பவர் மற்றும் 140 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

டிவிஎஸ் ஐக்யூப்-இன் டாப் வேரியண்ட் ஓர் முழு சார்ஜில் 145 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. இத்தகைய சூப்பரான அம்சங்களுடனேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதை விளம்பரப்படுத்தும் பணியையும் அது தற்போது தீவிரப்படுத்தியிருக்கின்றது.
-
இந்தியாவில் ரீ-என்ட்ரீ கொடுக்க தயாரானது முன்னணி பைக் நிறுவனம்... மொத்தமா 4 டூ-வீலர்களை களமிறக்க போறாங்களாம்!
-
சூப்பரான புதுமுக எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை ரூ. 1.60 லட்சம் மட்டுமே!
-
அமெரிக்காவில் ரூ20 லட்சம் தான்... ஆனால் அதே கார் இந்தியாவில் ரூ50 லட்சம் ஏன் தெரியுமா?