பெட்ரோல்-எத்தனாலில் இயங்கும் பைக்கை இந்தியா கொண்டு வரும் ஹோண்டா! இவைதான் பிராண்டின் எதிர்காலத்திற்கான திட்டம்!

ஃப்ளக்ஸ் ஃப்யூவல் (flex fuel technology) எனப்படும் பெட்ரோல் மற்றும் எத்தனாலில் இயங்கக் கூடிய இருசக்கர வாகனத்தை இந்தியாவிற்கு ஹோண்டா கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெட்ரோல்-எத்தனாலில் இயங்கும் பைக்கை இந்தியா கொண்டு வரும் ஹோண்டா... இதோ இவைதான் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கான திட்டங்கள்!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India) நிறுவனம் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்வாயிலாக, நிறுவனம் எதிர்காலத்தில் என்ன மாதிரியான இருசக்கர வாகனங்களை தயாரிக்க இருக்கிறது மற்றும் என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் கொண்ட டூ-வீலர்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் தெரிய வந்துள்ளன.

பெட்ரோல்-எத்தனாலில் இயங்கும் பைக்கை இந்தியா கொண்டு வரும் ஹோண்டா... இதோ இவைதான் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கான திட்டங்கள்!

ஆச்சரியமாக நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் கவனத்தைச் செலுத்த இருப்பது தெரிய வந்துள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல பன்முக எலெக்ட்ரிக் வாகனங்களை அது வரும் வருடங்களில் உற்பத்தி செய்ய இருக்கின்றது. ஆனால், எப்போது இந்த பணியில் களமிறங்கும், எப்போது முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வரும் என்பது போன்ற முக்கிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

பெட்ரோல்-எத்தனாலில் இயங்கும் பைக்கை இந்தியா கொண்டு வரும் ஹோண்டா... இதோ இவைதான் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கான திட்டங்கள்!

இந்திய சந்தையில் மின்சார வாகனங்களுக்கு நாளுக்கு டிமாண்ட் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையை உணர்ந்து முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருவதில் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றன.

பெட்ரோல்-எத்தனாலில் இயங்கும் பைக்கை இந்தியா கொண்டு வரும் ஹோண்டா... இதோ இவைதான் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கான திட்டங்கள்!

புதிய பிராண்டின் வாயிலாக ஹீரோ நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அண்மையில் தகவல் வெளியிட்டது. இந்த மாதிரியான சூழ்நிலையில் தற்போது ஹோண்டாவும் அதன் வரும்கால ரோட்மேப் பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றது.

பெட்ரோல்-எத்தனாலில் இயங்கும் பைக்கை இந்தியா கொண்டு வரும் ஹோண்டா... இதோ இவைதான் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கான திட்டங்கள்!

எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி ஃப்ளக்ஸ்-ஃப்யூவல் டெக்னாலஜி (flex fuel technology) கொண்ட இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதிலும் தங்கள் நிறுவனத்திற்கு ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது, பெட்ரோல் மற்றும் எத்தனால் ஆகிய இரண்டிலும் இயங்கும் வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வருவதிலும் அது ஆர்வம் காட்டுகின்றது.

பெட்ரோல்-எத்தனாலில் இயங்கும் பைக்கை இந்தியா கொண்டு வரும் ஹோண்டா... இதோ இவைதான் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கான திட்டங்கள்!

நிறுவனம் ஏற்கனவே சிஜி 160 டைட்டன் எனும் பைக்கை விற்பனைச் செய்து வருகின்றது. இது பிரேசிலில் தற்போது விற்பனையில் இருக்கின்றது. இது பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டிலும் இயங்கும். இதுவே உலகின் முதல் எத்தனால் எரிபொருளில் இயங்கும் மோட்டார்சைக்கிள் என்பதுக குறிப்பிடத்தகுந்தது.

பெட்ரோல்-எத்தனாலில் இயங்கும் பைக்கை இந்தியா கொண்டு வரும் ஹோண்டா... இதோ இவைதான் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கான திட்டங்கள்!

இதுமட்டுமின்றி, நிறுவனம் குறைவான விலைக் கொண்ட கம்யூட்டர் (தினசரி பயன்பாட்டு வசதிக் கொண்ட) பைக்கையும் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் குறைந்த விலை பைக்குகளுக்கு எல்லாம் போட்டியளிக்கும் வகையில் அதன் வருகை இருக்கும் என கூறப்படுகின்றது.

பெட்ரோல்-எத்தனாலில் இயங்கும் பைக்கை இந்தியா கொண்டு வரும் ஹோண்டா... இதோ இவைதான் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கான திட்டங்கள்!

தனது மிக பெரிய போட்டியளராக ஹோண்டா கருதும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் மற்றும் எச்எஃப்100 உள்ளிட்ட பைக்குகளுக்கு மிக தரமான சவாலை வழங்கும். எச்எஃப்100 இந்தியாவின் மலிவு விலை பைக் மாடலாகும். இது ரூ. 51,450 என்ற மிக குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

பெட்ரோல்-எத்தனாலில் இயங்கும் பைக்கை இந்தியா கொண்டு வரும் ஹோண்டா... இதோ இவைதான் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கான திட்டங்கள்!

இவையே ஹோண்டாவின் எதிர்கால திட்டம் ஆகும். இந்த திட்டம் நிறுவனத்தை மேலும் வலுவான உற்பத்தியாளராக இந்திய இருசக்கர வாகன சந்தையில் மாற்றும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இத்துடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் செயல்பாட்டையும் அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை ஆகும்.

Most Read Articles
English summary
Twowheeler maker honda reveals roadmap for india for the coming years
Story first published: Thursday, April 21, 2022, 19:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X