2022இல் எதிர்பார்க்கப்படும் 3 அதி-வேகமான எலக்ட்ரிக் பைக்குகள்!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்துல இருக்கு!

இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான தேவையும், விற்பனையும் கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. அதிலிலும் குறிப்பாக குறைவான வேகத்தில் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றடைந்துள்ளன.

2022இல் எதிர்பார்க்கப்படும் 3 அதி-வேகமான எலக்ட்ரிக் பைக்குகள்!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்துல இருக்கு!

இதனாலேயே பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதியதாக சந்தையில் களமிறங்கியுள்ளன. அதேநேரம் நம் நாட்டில் அதி செயல்திறன்மிக்க சில எலக்ட்ரிக் பைக்குகளும் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன. இந்த வகையில் அடுத்ததாக அறிமுகப்படுத்தப்பட உள்ள 3 அதி-செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் பைக்குகளை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022இல் எதிர்பார்க்கப்படும் 3 அதி-வேகமான எலக்ட்ரிக் பைக்குகள்!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்துல இருக்கு!

அல்ட்ராவயலெட் எஃப்77 (Ultraviolette F77)

தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் உதவியுடன் செயல்படும் இவி ஸ்டார்ட்அப் நிறுவனம் அல்ட்ராவயலெட் ஆகும். இந்த பிராண்டில் இருந்து அல்ட்ராவயலெட் எஃப்77 என்கிற பெயரில் அதி-செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன் தோற்றத்தை பார்க்கும்போதே தெரிந்திருக்கும், இது பக்கா ஸ்போர்ட்ஸ் பைக் என்று.

2022இல் எதிர்பார்க்கப்படும் 3 அதி-வேகமான எலக்ட்ரிக் பைக்குகள்!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்துல இருக்கு!

0-வில் இருந்து 60kmph வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடியதாக வடிவமைக்கப்படும் இந்த எஃப்77 பைக்கின் டாப் ஸ்பீடு 140kmph ஆக கொண்டுவரப்பட உள்ளது. அல்ட்ராவயலெட் எஃப்77 எலக்ட்ரிக் பைக்கிற்கான இயக்க ஆற்றலை வழங்க 3 மாடுலர் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட உள்ளது.

2022இல் எதிர்பார்க்கப்படும் 3 அதி-வேகமான எலக்ட்ரிக் பைக்குகள்!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்துல இருக்கு!

இதனை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 150கிமீ தொலைவிற்கு செல்லலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கில் எல்இடி விளக்கு தொகுப்பு, டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை, பல்வேறு ரைடிங் மோட்கள், ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங், பைக்கில் ஏற்பட்டுள்ள பழுதை கண்டறியும் வசதி உள்ளிட்டவை தொழிற்நுட்ப அம்சங்களாக வழங்கப்பட உள்ளன.

2022இல் எதிர்பார்க்கப்படும் 3 அதி-வேகமான எலக்ட்ரிக் பைக்குகள்!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்துல இருக்கு!

எம்ஃப்ளக்ஸ் ஒன் (Emflux One)

எம்ஃப்ளக்ஸ் நிறுவனம் அதன் அதிவேக எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கினை நடப்பாண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுவதும் பேனல்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் சூப்பர் பைக்கில் லிக்யுடு-கூல்டு மாறுதிசை மின்தூண்டல் மோட்டார் பொருத்தப்பட உள்ளது.

2022இல் எதிர்பார்க்கப்படும் 3 அதி-வேகமான எலக்ட்ரிக் பைக்குகள்!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்துல இருக்கு!

இது அதிகப்பட்சமாக 50 கிலோவாட்ஸ் இயக்க ஆற்றலை வழங்கக்கூடியதாக இருக்கும். இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்படும் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 200கிமீ தொலைவிற்கு பயணிக்கலாமாம். இதன் டாப்-ஸ்பீடு மணிக்கு 200கிமீ ஆக இருக்கும் என்கிறது தயாரிப்பு நிறுவனம். அத்துடன், இந்த எலக்ட்ரிக் பைக் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடுமாம்.

2022இல் எதிர்பார்க்கப்படும் 3 அதி-வேகமான எலக்ட்ரிக் பைக்குகள்!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்துல இருக்கு!

கவர்ச்சியான தோற்றத்தை கொண்ட இந்த எலக்ட்ரிக் பைக்கில் எல்இடி விளக்கு தொகுப்பு, டிஎஃப்டி திரை, ஜிபிஎஸ் நாவிகேஷன், வாகனத்தில் உள்ள பழுதை கண்டறியும் வசதி, செயற்கை நுண்ணறிவு பெற்ற அமைப்பு, இரட்டை-சேனல் ஏபிஎஸ் உடன் ப்ரெம்போ ப்ரேக்குகள், ஹோலின்ஸ் சஸ்பென்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.

2022இல் எதிர்பார்க்கப்படும் 3 அதி-வேகமான எலக்ட்ரிக் பைக்குகள்!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்துல இருக்கு!

ஹோப் ஓஸோ (Hop Oxo)

ஹோப் எலக்ட்ரிக் நிறுவனம் அதன் முதல் அதி வேகமான எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது எம்ஃப்ளக்ஸ் ஒன் மற்றும் அல்ட்ராவயலெட் எஃப்77 எலக்ட்ரிக் பைக்குகளை காட்டிலும் மலிவானதாக இருக்கும்.

2022இல் எதிர்பார்க்கப்படும் 3 அதி-வேகமான எலக்ட்ரிக் பைக்குகள்!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்துல இருக்கு!

ஹோப் எலக்ட்ரிக்கின் அடுத்த தலைமுறை லைஃப் 2.0 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உடன் இந்த ஓஸோ அதி செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் பைக் வடிவமைக்கப்பட்டு வருகிறது. பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக பைக் இயங்கும் தொலைவை 150கிமீ ஆக இந்த எலக்ட்ரிக் பைக்கில் எதிர்பார்க்கிறோம்.ஓஸோ எலக்ட்ரிக் பைக் 0-வில் இருந்து 90கிமீ வேகத்தை 10 வினாடிகளில் எட்டலாம்.

Most Read Articles
English summary
Top three upcoming high-performance electric bikes in India.
Story first published: Thursday, February 24, 2022, 2:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X