கொச்சினில் அறிமுகமானது வான் எலெக்ட்ரிக் சைக்கிள்... ஆண்-பெண் இருபாலரும் ஓட்டலாம்! இதோட ரேட் எவ்ளே தெரியுமா?

முதல் கட்டமாக கேரள மாநிலம் கொச்சினில் வான் எலெக்ட்ரிக் மோட்டோ பிரைவேட் லிமிடெட் (VAAN Electric Moto Pvt Ltd) நிறுவனத்தின் எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கொச்சினில் அறிமுகமானது வான் எலெக்ட்ரிக் சைக்கிள்... ஆண்-பெண் இருபாலரும் ஓட்டலாம்! இதோட ரேட் எவ்ளே தெரியுமா?

வான் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் (VAAN Electric Moto Pvt Ltd) நிறுவனம், இந்தியர்களின் வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்ற எலெக்ட்ரிக் மிதிவண்டி ஒன்றை கொச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இரு விதமான வேரிண்டுகளில் இந்த இ-சைக்கிள் விற்பனைக்குக் கிடைக்கும்.

கொச்சினில் அறிமுகமானது வான் எலெக்ட்ரிக் சைக்கிள்... ஆண்-பெண் இருபாலரும் ஓட்டலாம்! இதோட ரேட் எவ்ளே தெரியுமா?

அர்பன் ஸ்போர்ட் (Urbansport) மற்றும் அர்பன் ஸ்போர்ட் ப்ரோ (Urbansport Pro) ஆகிய இரு விதமான தேர்வுகளிலேயே அது கிடைக்க இருக்கின்றது. இதில், முதலும் ஆரம்ப நிலை தேர்வுமாக காட்சியளிக்கும் அர்பன் ஸ்போர்ட் வேரியண்டிற்கு ரூ. 59,999 என்ற விலையும், உயர் நிலை வேரியண்டாக உள்ள அர்பன் ஸ்போர்ட் ப்ரோ தேர்விற்கு ரூ. 69,999 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொச்சினில் அறிமுகமானது வான் எலெக்ட்ரிக் சைக்கிள்... ஆண்-பெண் இருபாலரும் ஓட்டலாம்! இதோட ரேட் எவ்ளே தெரியுமா?

இதன் அதிக விலைக்கு அதிக பிரீமியம் தர சிறப்பு வசதிகளே காரணம் என கூறப்படுகின்றது. ஆம், வான் எலெக்ட்ரிக் மோட்டோ அறிமுகம் செய்திருக்கும் இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் அதிக அதிக தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது. இத்தகைய ஓர் வாகனத்தையே கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரள மாநிலத்தின் கொச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது வான் நிறுவனம்.

கொச்சினில் அறிமுகமானது வான் எலெக்ட்ரிக் சைக்கிள்... ஆண்-பெண் இருபாலரும் ஓட்டலாம்! இதோட ரேட் எவ்ளே தெரியுமா?

இந்த நகரத்தைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மிக விரைவில் கோவா, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களிலும் எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக வான் எலெக்ட்ரிக் மோட்டோ தெரிவித்துள்ளது. ஆகையால், மூன்ற கட்டத்தில் சென்னை நகரம் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொச்சினில் அறிமுகமானது வான் எலெக்ட்ரிக் சைக்கிள்... ஆண்-பெண் இருபாலரும் ஓட்டலாம்! இதோட ரேட் எவ்ளே தெரியுமா?

கொச்சியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துக் கொண்ட கேரள மாநிலத்தின் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்துக் கொண்டு, வான் எலக்ட்ரிக் மோட்டோ நிறுவனத்தின் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினார்.

கொச்சினில் அறிமுகமானது வான் எலெக்ட்ரிக் சைக்கிள்... ஆண்-பெண் இருபாலரும் ஓட்டலாம்! இதோட ரேட் எவ்ளே தெரியுமா?

இவ்விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் விடி சதீசன் மற்றும் ஆயில்மேக்ஸ் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கபில் கர்க் ஆகியோரும் கலந்துக் கொண்டனர். இவர்களுடன் இணைந்த ஹைபி ஈடன், எம்பி, வான் பிராண்டின் லோகோவை வெளியிட்டார்.

கொச்சினில் அறிமுகமானது வான் எலெக்ட்ரிக் சைக்கிள்... ஆண்-பெண் இருபாலரும் ஓட்டலாம்! இதோட ரேட் எவ்ளே தெரியுமா?

தற்போது கொச்சினில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அர்பன்ஸ்போர்ட் மற்றும் அர்பன் ஸ்போர்ட் ப்ரோ எலெக்ட்ரிக் மிதிவண்டில் முதன் முதலாக இஐசிஎம்ஏ 2021லேயே காட்சிப்படுத்தப்பட்டது. இத்தாலி நாட்டில் நடைபெற்ற மிக முக்கியமான வாகன கண்காட்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

கொச்சினில் அறிமுகமானது வான் எலெக்ட்ரிக் சைக்கிள்... ஆண்-பெண் இருபாலரும் ஓட்டலாம்! இதோட ரேட் எவ்ளே தெரியுமா?

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பெனெல்லி நிறுவனத்துடனான நெருங்கிய உறவின் கீழாகவே இரு அர்பன்ஸ்போர்ட் வாகனங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதன் அடிப்படையிலேயே இரு பாலினரும் பயன்படுத்தக் கூடிய வகையிலான ஃப்ரேம், சேடில், ரிம் மற்றும் ஹேண்டில் பார்கள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டிருக்கின்றன.

கொச்சினில் அறிமுகமானது வான் எலெக்ட்ரிக் சைக்கிள்... ஆண்-பெண் இருபாலரும் ஓட்டலாம்! இதோட ரேட் எவ்ளே தெரியுமா?

இந்த இ-சைக்கிள் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இதனை பெடல் அசிஸ்ட் வாயிலாக பயன்படுத்தினால் அதிகபட்சமாக 60 கிமீ வரை பயணிக்க முடியும். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை தேவைப்படும்.

கொச்சினில் அறிமுகமானது வான் எலெக்ட்ரிக் சைக்கிள்... ஆண்-பெண் இருபாலரும் ஓட்டலாம்! இதோட ரேட் எவ்ளே தெரியுமா?

மேலும், இ-சைக்கிளில் முக்கிய தகவல்களை வழங்கும் வகையில் சிறிய எல்சிடி திரை ஒன்று வழங்கப்பட்டிருக்கின்றது. ஆண்டிற்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மின்சார வாகனங்கள் விற்பனை எனும் நோக்குடன் தங்கள் நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்திருப்பதாக வான் எலெக்ட்ரிக் மோட்டோ தெரிவித்துள்ளது. இத்துடன், அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் இந்தியாவில் இன்னும் இரு புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Vaan electric moto launches all new electric bicycle urbansport and urbansport pro in kochi
Story first published: Saturday, January 22, 2022, 15:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X