கோமகி வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விண்ட் ஸ்கிரீன், தனி-தனியான சீட் அமைப்புடன் வேற லெவல்ல இருக்கு!

கோமகி வெனிஸ் (Komaki Venice) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெஸ்பா தோற்றம் கொண்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வெஸ்பா உருவம் கொண்ட கோமகி வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விண்ட் ஸ்கிரீன், தனி-தனியான சீட் அமைப்புடன் வேற லெவல்ல இருக்கு!

கோமகி எலெக்ட்ரிக் (Komaki Electric Vehicles) நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மின்சார இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மிக சமீபத்தில், அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் வெனிஸ் (Venice), மின்சார பைக் பிரிவில் ரேஞ்ஜர் (Ranger) ஆகிய இரு புதுமுக வாகனங்களையே விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது.

வெஸ்பா உருவம் கொண்ட கோமகி வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விண்ட் ஸ்கிரீன், தனி-தனியான சீட் அமைப்புடன் வேற லெவல்ல இருக்கு!

தன்னுடைய இந்த வாக்குறுதியை உறுதிப்படுத்தும் வகையில் கோமகி நிறுவனம் இரு எலெக்ட்ரிக் வாகனங்களை வாகனங்களையும் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஏற்கனவே ரேஞ்ஜர் எலெக்ட்ரிக் பைக்கின் தகவலை பார்த்துவிட்ட நிலையில் இந்த பதிவில் நாம் வெனிஸ் மின்சார ஸ்கூட்டர் பற்றிய தகவலையே பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

வெஸ்பா உருவம் கொண்ட கோமகி வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விண்ட் ஸ்கிரீன், தனி-தனியான சீட் அமைப்புடன் வேற லெவல்ல இருக்கு!

கோமகி வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 kWh எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 2.9 kWh பேட்டரி பேக்கையே பயன்படுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் அதன் விற்பனையாளர்களிடத்தில் நாளை (ஜனவரி 26) முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. குடியரசு தினத்தை சிறப்பிக்கும் விதமாக நாளை முதல் விற்பனைக்கு கிடைக்க செய்ய இருக்கின்றது கோமகி ஏற்பாடு செய்திருக்கின்றது.

வெஸ்பா உருவம் கொண்ட கோமகி வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விண்ட் ஸ்கிரீன், தனி-தனியான சீட் அமைப்புடன் வேற லெவல்ல இருக்கு!

இருசக்கர வாகனத்தின் இயக்கத்தை சிறப்பானதாக மாற்ற வேண்டும் என்பதற்காக சில சிறப்பு அக்சஸெரீஸ்களையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றுடன் பார்க்கையில் வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக தரமானதாக காட்சியளிக்கின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் வெஸ்பா ஸ்கூட்டரின் சகோதரனைப் போன்று வெனிஸ் காட்சியளிக்கின்றது.

வெஸ்பா உருவம் கொண்ட கோமகி வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விண்ட் ஸ்கிரீன், தனி-தனியான சீட் அமைப்புடன் வேற லெவல்ல இருக்கு!

கோமகி வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரெட்ரோ ஸ்டைலில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. வட்ட வடிவ ஹெட்லேம்ப், பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடி மற்றும் உடல் தோற்றம் ஆகியவை ரெட்ரோ ஸ்டைலிலேயே உள்ளன. இவையே வெனிஸை, வெஸ்பா ஸ்கூட்டரை போல் காட்சியளிக்க செய்கின்றன.

வெஸ்பா உருவம் கொண்ட கோமகி வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விண்ட் ஸ்கிரீன், தனி-தனியான சீட் அமைப்புடன் வேற லெவல்ல இருக்கு!

கிளாசிக் ரக வாகன விரும்பிகளை கவரும் நோக்கில் இந்த உருவ தோற்றம் வெனிஸுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதற்கேற்ப, ஸ்பிளிட் செய்யப்பட்ட இருக்கை அமைப்பு, பேக் ரெஸ்ட், செல்ஃப் டயக்னாஸிஸ் சிஸ்டம், ரிவர்ஸ் அசிஸ்ட், கூடுதல் ஸ்டோரேஜ் பெட்டி, ஃபுல் பாடி மட்குவார்ட் உள்ளிட்டவை வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.

வெஸ்பா உருவம் கொண்ட கோமகி வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விண்ட் ஸ்கிரீன், தனி-தனியான சீட் அமைப்புடன் வேற லெவல்ல இருக்கு!

மேலும், பெரிய விண்ட்ஷீல்டு, முழு டிஜிட்டல் திரை, முன் பக்கத்தில் ஸ்டோரேஜ் வசதி, செல்போன் சார்ஜர் உள்ளிட்ட நவீன கால தொழில்நுட்ப அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, ஆன்டி-தெஃப்ட் லாக் சிஸ்டம் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.

வெஸ்பா உருவம் கொண்ட கோமகி வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விண்ட் ஸ்கிரீன், தனி-தனியான சீட் அமைப்புடன் வேற லெவல்ல இருக்கு!

கோமகி நிறுவனம் ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் ஏற்கனவே நான்கு மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைச் செய்து வருகின்றது. அவற்றின் வரிசையில் ஐந்தாவது தேர்வாக தற்போது வெனிஸ் இணைந்திருக்கின்றது. இதற்கு ரூ. 1.15 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெஸ்பா உருவம் கொண்ட கோமகி வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விண்ட் ஸ்கிரீன், தனி-தனியான சீட் அமைப்புடன் வேற லெவல்ல இருக்கு!

ஒட்டுமொத்தமாக 9 விதமான நிற தேர்வுகளில் வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், இன்னும் பல சிறப்பு வசதிகளும் வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதன் ரேஞ்ஜ் திறன் பற்றிய தகவலை கோமகி நிறுவனம் வெளியிடவில்லை. இதுகுறித்த தகவல் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Vespa styled komaki venice e scooter Launched in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X