சும்மா போட்டிருக்காங்கனு நினைச்சுடாதீங்க!.. பைக்கின் டிஸ்க் பிரேக்குகளில் துளைகள் போட்டிருப்பதற்கான காரணமே வேற

பைக்கின் டிஸ்க் பிரேக்குகளில் துளைகள் கொடுக்கப்படுவதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சும்மா போட்டிருக்காங்கனு நினைச்சுடாதீங்க!.. பைக்கின் டிஸ்க் பிரேக்குகளில் துளைகள் போட்டிருப்பதற்கான காரணமே வேற!..

பாதுகாப்பான இயக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் அவர்களின் தயாரிப்புகளில் (டூ-வீலர் மாடல்களில்) வழங்கும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றே இந்த டிஸ்க் பிரேக்குகள். இது மிகவும் ஷார்ப்பான நிறுத்தத்தை வழங்க உதவும். என்ன மாதிரியான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தாலும் நொடிப் பொழுதில் வேகத்தைக் கட்டுக்குள் கொண்டு வர டிஸ்க்குகள் பெரும் உதவியாக இருக்கின்றன.

சும்மா போட்டிருக்காங்கனு நினைச்சுடாதீங்க!.. பைக்கின் டிஸ்க் பிரேக்குகளில் துளைகள் போட்டிருப்பதற்கான காரணமே வேற!..

மேலும், டிரம் பிரேக்கைக் காட்டிலும் மேம்பட்ட நிறுத்தும் கருவியாகவும் அது காட்சியளிக்கின்றது. எனவேதான் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் டிஸ்க் பிரேக் கொண்ட இருசக்கர வாகன மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

சும்மா போட்டிருக்காங்கனு நினைச்சுடாதீங்க!.. பைக்கின் டிஸ்க் பிரேக்குகளில் துளைகள் போட்டிருப்பதற்கான காரணமே வேற!..

ஆனால், இந்த கருவியில் ஆங்காங்கே துளைகள் இடப்பட்டிருக்கும். என்றாவது ஏன் இதில் இவ்வாறு துளைகள் போட்டிருக்காங்க என நீங்கள் யோசிச்சது உண்டா?, இந்த துளைகளைச் சும்மா போட வேண்டும் என்பதற்காக இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் போடவில்லை. பல்வேறு காரணங்களுக்காக டிஸ்க்குகளில் துளைகளைப் போட்டிருக்கின்றனர். அந்த காரணங்கள் என்ன? இந்த துளைகளால் கிடைக்கும் நன்மைகள் என்ன?, என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

சும்மா போட்டிருக்காங்கனு நினைச்சுடாதீங்க!.. பைக்கின் டிஸ்க் பிரேக்குகளில் துளைகள் போட்டிருப்பதற்கான காரணமே வேற!..

கூலாக இருப்பதற்காக துளைகள் வழங்கப்படுகின்றன:

டிஸ்க் பிரேக்குகளில் துளைகள் வழங்கப்படுவதற்கான முதன்மையான காரணங்களில் இதுவும் ஒன்று. அதாவது, அதீத உராய்வினால் ஏற்படும் வெப்பத்தை வெளியேற்றும் விதமாக இந்த துளைகள் வழங்கப்படுகின்றன. வெப்பம் வெளியேற்றப்படுவதனால் டிஸ்க்கும், டிஸ்க் பிரேக் பேடும் அதிக உஷ்னமாவதை தவிர்க்க முடியும். குறிப்பாக, இந்த துளைகள் வாயிலாக காற்றோட்டம் உறுதிப்படுத்தப்படுவதனால், உடனுக்குடன் அவை கூலாகவும் மாறும்.

சும்மா போட்டிருக்காங்கனு நினைச்சுடாதீங்க!.. பைக்கின் டிஸ்க் பிரேக்குகளில் துளைகள் போட்டிருப்பதற்கான காரணமே வேற!..

ஒரு வேலை இந்த துளைகள் வழங்கப்படவில்லை என்றால் காலிபர்களினால் ஏற்படும் அதீத அழுத்தம் டிஸ்க்கை உடைய செய்யலாம். அதேநேரத்தில், உராய்வின் காரணத்தினால் ஏற்படும் அதீத வெப்பம் டிஸ்க்கை விரிசல் அடையவும் செய்யலாம். இவற்றால் பிரேக் ஃபெயிலியர் அசால்டாக ஏற்படும். இந்த இன்னல்களை குறைக்கும் பொருட்டே டிஸ்க்குகளில் துளைகளை வழங்கும் யுக்தியை நிறுவனங்கள் கையாளுகின்றன.

சும்மா போட்டிருக்காங்கனு நினைச்சுடாதீங்க!.. பைக்கின் டிஸ்க் பிரேக்குகளில் துளைகள் போட்டிருப்பதற்கான காரணமே வேற!..

எடை குறைப்பு:

டிஸ்க்குகள் உலோகத்தினால் ஆனவை. ஆகையால், இதன் எடை எப்படி இருக்கும் என நாங்கள்கூறி தெரிய வேண்டியதில்லை. இந்த பொருளை பயன்படுத்துவதனால் இருசக்கர வாகனத்தின் எடைக் கணிசமாக அதிகரிக்கக்கூடும். இந்த எடையைச் சற்றே குறைக்கும் பொருட்டே இந்த துளையிடும் யுக்தி அமைந்துள்ளது. டிஸ்க்குகளில் துளைகளிடப்படுவதனால் 300 முதல் 500 கிராம் வரை ஓர் வாகனத்தின் எடைக் குறைவதாக கூறப்படுகின்றது.

சும்மா போட்டிருக்காங்கனு நினைச்சுடாதீங்க!.. பைக்கின் டிஸ்க் பிரேக்குகளில் துளைகள் போட்டிருப்பதற்கான காரணமே வேற!..

இது நம்முடைய பார்வைக்கு குறைவாகத் தோன்றலாம். ஆனால், மோட்டாரின் அதீத செயல்திறனுக்கு இதுபோன்ற எடைக்குறைப்பு பணிகளே மிக முக்கியமானதாக இருக்கின்றது. ஒரு சில அதிக சிசி திறன் கொண்ட பைக் மாடல்களில் ஒவ்வொரு வீலிலும் இரட்டை டிஸ்க்குகள் பெரிய பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

சும்மா போட்டிருக்காங்கனு நினைச்சுடாதீங்க!.. பைக்கின் டிஸ்க் பிரேக்குகளில் துளைகள் போட்டிருப்பதற்கான காரணமே வேற!..

நீர் வடியவும் இவை உதவியாக இருக்கும்:

உங்கள் பகுதியில் கன மழை பொழிந்துக் கொண்டிருக்கின்றது என வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாதிரியான நேரத்தில் நாம் இருசக்கர வாகனத்தில் வெளியே செல்ல நேரிடும் எனில், அந்த நேரத்தில் நாமும், நம்முடைய டூ-வீலரும் சொட்ட சொட்ட நனைந்துவிடுவோம் என்பதில் எந்த சந்தேகமில்லை. டிஸ்க் பிரேக்குகளும் இதற்கு விதிவிளக்கல்ல. அதுவும் நீரால் ஈரமாகக் காணப்படும்.

சும்மா போட்டிருக்காங்கனு நினைச்சுடாதீங்க!.. பைக்கின் டிஸ்க் பிரேக்குகளில் துளைகள் போட்டிருப்பதற்கான காரணமே வேற!..

இந்த மாதிரியான சூழ்நிலைகள் டிஸ்க்குகளில் துளைகள் இல்லை எனில் என்ன நடக்கும் என உங்களால் யூகிக்க முடிகின்றது. நீர் வழியாமல் அப்படியே தேங்கி நிற்கும். இதனால் டிஸ்க்கில் வழவழப்பு தன்மை உருவாகும். இந்த மாதிரியான சூழ்நிலையில் பிரேக் பிடித்தாலும் வாகனத்தால் நிற்க முடியாது. இதன் விளைவு விபத்து போன்ற கசப்பான அனுபவங்கள் ஏற்படும்.

சும்மா போட்டிருக்காங்கனு நினைச்சுடாதீங்க!.. பைக்கின் டிஸ்க் பிரேக்குகளில் துளைகள் போட்டிருப்பதற்கான காரணமே வேற!..

இதுபோன்றவற்றைத் தவிர்க்கும் பொருட்டே துளைகள் வழங்கப்படுகின்றன. இந்த துளைகளால் பிரேக் பேட்கள் ஓர் கிரிப்பான பிடிப்பைப் பெற முடியும். ஆகையால், என்னதான் மழை பொழிந்தாலும் 100 சதவீதம் செயல் திறன்மிக்க பிரேக்கை டிஸ்க்குகள் வழங்கும். இதுபோன்று இன்னும் பல்வேறு நன்மைகள் டிஸ்க் பிரேக்குகளால் கிடைக்கின்றன. குறிப்பாக, பிரேக் பேடை சுத்தம் செய்யும் பொறிமுறையாகவும் அது காட்சியளிக்கின்றது.

Most Read Articles
English summary
Why many holes are given in two wheeler disc brakes
Story first published: Wednesday, September 21, 2022, 18:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X