யமஹாவின் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - இ.எம்.எஃப்!! தைவானில் அறிமுகம், விலையை மட்டும் கேட்காதீங்க!

யமஹா உருவாக்கி கொண்டிருக்கும் இரண்டாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹாவின் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - இ.எம்.எஃப்!! தைவானில் அறிமுகம், விலையை மட்டும் கேட்காதீங்க!

2019ஆம் ஆண்டில் பிரபல ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இசி-05 என்கிற பெயரில் வெளியீடு செய்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் யமஹா - கோகோரோ நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டணியில் உருவாகி வருகிறது. இதன் பெயர் இஎம்எஃப் ஆகும்.

யமஹாவின் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - இ.எம்.எஃப்!! தைவானில் அறிமுகம், விலையை மட்டும் கேட்காதீங்க!

கோகோரோ நிறுவனத்திடம் ஏகப்பட்ட பேட்டரி பரிமாற்ற நிலையங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி கொள்ளும் பொருட்டு யமஹா இந்த கூட்டணியை ஏற்படுத்தி கொண்டுள்ளது. இந்தியாவில் இதே கோகோரோ நிறுவனத்துடன், புதியதாக உருவாக்கப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான பேட்டரி பரிமாற்ற கட்டமைப்பிற்காக ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

யமஹாவின் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - இ.எம்.எஃப்!! தைவானில் அறிமுகம், விலையை மட்டும் கேட்காதீங்க!

தற்சமயம் உள்ள யமஹா ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடுகையில் இஎம்எஃப் முற்றிலும் மாறுப்பட்டதாகும். இது ஸ்கூட்டர் உலகில் புதிய ட்ரெண்டையே உருவாக்கலாம் என்பது படத்தில் இஎம்எஃப் -இன் தோற்றத்தை பார்க்கும்போதே உங்களுக்கு தெரிந்திருக்கும். நிச்சயமாக இது எதிர்கால எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான வடிவம் ஆகும். இதற்கேற்ப ஆற்றல்மிக்கதாக இதனை யமஹா உருவாக்கியுள்ளது.

யமஹாவின் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - இ.எம்.எஃப்!! தைவானில் அறிமுகம், விலையை மட்டும் கேட்காதீங்க!

யமஹா அதன் இந்த இரண்டாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அடர் கருப்பு, அடர் பச்சை மற்றும் இளம் நீலம் என 3 நிறத்தேர்வுகளை வழங்கியுள்ளது. இந்த ஸ்கூட்டரில் தட்டையான முன்பக்கத்தில் இரட்டை எல்இடி ஹெட்லேம்ப்கள், ட்ரெண்டியான பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஒற்றை துண்டு இருக்கை மற்றும் எரியும்-பர்னர் ஸ்டைலில் இரட்டை எல்இடி டெயில்லைட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

யமஹாவின் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - இ.எம்.எஃப்!! தைவானில் அறிமுகம், விலையை மட்டும் கேட்காதீங்க!

அத்துடன், தரை போர்டின் மத்தியில் சிறியதாக பொருட்களை வைக்கும்பகுதி என சில தனித்துவமான அம்சங்களையும் ஏற்றுள்ளது. இதில் கப், பாட்டில் உள்ளிட்டவற்றை வைத்து கொள்ளலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்/ஆஃப் செய்ய சாவி கிடையாது. அதற்கு பதிலாக என்.எஃப்.சி கார்ட் என்ற ஒன்றை யமஹா வழங்கியுள்ளது. சாவியை காட்டிலும் இதனை எடுத்து செல்வது இன்னும் ஈஸியானதாக இருக்கும்.

யமஹாவின் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - இ.எம்.எஃப்!! தைவானில் அறிமுகம், விலையை மட்டும் கேட்காதீங்க!

மொபைல் உடன் வாகனத்தை இணைக்கும் வசதி தற்போது உள்ள யமஹா ஸ்கூட்டர்களிலேயே வந்துவிட்டன. ஆதலால் கடைசியாக ஸ்கூட்டர் பார்க் செய்யப்பட்ட இடம், வழிக்காட்டி மற்றும் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்கான நிர்வாக அமைப்பு போன்ற இணைப்பு வசதிகளை நிச்சயமாக இஎம்எஃப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கலாம். இந்த ஸ்கூட்டரின் மத்தியில் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதாக யமஹா தெரிவித்துள்ளது.

யமஹாவின் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - இ.எம்.எஃப்!! தைவானில் அறிமுகம், விலையை மட்டும் கேட்காதீங்க!

மேலும் இது அதிகப்பட்சமாக 3,000 ஆர்பிஎம்-இல் 10.30 பிஎஸ் மற்றும் 2,500 ஆர்பிஎம்-இல் 26 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த இயக்க ஆற்றலின் உதவியுடன் 0-வில் இருந்து 50kmph வேகத்தை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடலாம். அதிகப்பட்சமாக இந்த ஸ்கூட்டரில் மணிக்கு எத்தனை கிமீ வேகத்தில் செல்லலாம் என்பதை யமஹா இன்னும் தெரிவிக்கவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில் இதன் டாப் ஸ்பீடு 100kmph ஆக இருக்கலாம்.

யமஹாவின் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - இ.எம்.எஃப்!! தைவானில் அறிமுகம், விலையை மட்டும் கேட்காதீங்க!

அதேபோல் இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் ஸ்கூட்டர் அதிகப்பட்சமாக செல்லும் தொலைவு குறித்த விபரமும் இப்போதைக்கு இல்லை. ஆனால் உண்மையில் தைவான் நாட்டில் எத்தகைய ரேஞ்ச் உடன் யமஹா இஎம்எஃப் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதன் விற்பனைக்கு பெரியதாக எந்த பிரச்சனையும் இருக்காது என்றே நினைக்கிறோம். ஏனெனில் தைவானில் கோகோரோ நிறுவனத்திற்கு சொந்தமாக நிறைய பேட்டரி பரிமாற்ற நிலையங்கள் உள்ளன.

யமஹாவின் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - இ.எம்.எஃப்!! தைவானில் அறிமுகம், விலையை மட்டும் கேட்காதீங்க!

அந்த நாட்டில் கிட்டத்தட்ட 97% எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் கோகோரோவின் பேட்டரி பரிமாற்ற நிலையங்களைதான் பயன்படுத்தி வருகின்றனவாம். வீட்டில் காலியாகும் சமையல் எரிவாயு சிலிண்டரை மாற்றுவது போலதான், இஎம்எஃப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துப்போனால் அருகில் உள்ள கோகோரோ பேட்டரி பரிமாற்ற நிலையத்திற்கு சென்று சார்ஜ் காலியான பேட்டரியை கொடுத்து, சார்ஜ் நிரம்பிய பேட்டரியை பெற்று கொள்ளலாம்.

யமஹாவின் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - இ.எம்.எஃப்!! தைவானில் அறிமுகம், விலையை மட்டும் கேட்காதீங்க!

யமஹா இஎம்எஃப் இ-ஸ்கூட்டர் தைவான் நாட்டு சந்தையில் 102,800 நியூ தைவான் டாலர் என்கிற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.2.77 லட்சமாகும். இந்தியாவில் இன்னமும் யமஹா அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரையே அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் இ01 மற்றும் இசி-05 என்ற பெயர்களை அதன் எதிர்கால எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்காக நம் நாட்டில் பதிவு செய்து கொண்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
New Yamaha EMF Electric Scooter Debuts With Swappable Battery.
Story first published: Thursday, January 20, 2022, 15:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X