ரேஸ் பைக் ஓட்டுற ஃபீல் கிடைக்கும்... சூப்பரான அலங்காரங்களுடன் ஏரோக்ஸ் 155 மோட்டோஜிபி எடிசன் அறிமுகம்!

யமஹா (Yamaha) நிறுவனம் அதன் ஏரோக்ஸ் 155 (Aerox 155) ஸ்கூட்டரில் மோட்டோஜிபி எடிசன் (MotoGP Edition)-ஐ விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரேஸ் பைக் ஓட்டுற ஃபீல் கிடைக்கும்... சூப்பரான அலங்காரங்களுடன் ஏரோக்ஸ் 155 மோட்டோஜிபி எடிசன் அறிமுகம்!

ரேஸ் பைக்குகளை பிரதிபலிக்கக் கூடிய ஸ்கூட்டர் ஒன்றை பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா (Yamaha) இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் மாடலையே மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி எடிசன் (Monster Energy MotoGP Edition)-ஆக நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

ரேஸ் பைக் ஓட்டுற ஃபீல் கிடைக்கும்... சூப்பரான அலங்காரங்களுடன் ஏரோக்ஸ் 155 மோட்டோஜிபி எடிசன் அறிமுகம்!

ஏரோக்ஸ் 155 ஓர் மேக்ஸி ரக ஸ்கூட்டர் ஆகும். இதற்கே கூடுதல் கூடுதல் கவர்ச்சி, குறிப்பாக, ஸ்போர்ட்டி தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் யமஹா நிறுவனம் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி எடிசனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த அப்கிரேட் காரணமாக லேசாக இருசக்கர வாகனத்தின் விலை உயர்ந்து காணப்படுகின்றது.

ரேஸ் பைக் ஓட்டுற ஃபீல் கிடைக்கும்... சூப்பரான அலங்காரங்களுடன் ஏரோக்ஸ் 155 மோட்டோஜிபி எடிசன் அறிமுகம்!

வழக்கமான ஏரோக்ஸ் ரூ. 1.39 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றநிலையில், புதிய மான்ஸ்டர் எனர்ஜி எடிசன் ஏரோக்ஸ் ஸ்கூட்டருக்கு ரூ. 1.41 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. கணிசமாக காஸ்மெட்டிக் அப்டேட் கொடுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் இந்த லேசான விலையுயர்வை ஏரோக்ஸ் 155 மோட்டோ ஜிபி எடிசன் பெற்றிருக்கின்றது.

ரேஸ் பைக் ஓட்டுற ஃபீல் கிடைக்கும்... சூப்பரான அலங்காரங்களுடன் ஏரோக்ஸ் 155 மோட்டோஜிபி எடிசன் அறிமுகம்!

காஸ்மெட்டிக் மாற்றங்களாக புதிய நிறம், புதிய ஸ்டிக்கரிங் வேலை செய்யப்பட்டுள்ளது. புதிய அட்டகாசமான ஸ்டிக்கர்களை முன் பக்க அப்ரான், மட்டுகுவார்ட், சைடு பேனல் மற்றும் ரியர் பேனல் ஆகியவற்றில் நம்மால் காண முடிகின்றது. இவை உண்மையில் ஏரோக்ஸ் 155-க்கு சூப்பரான தோற்றத்தை வழங்கும் வகையில் உள்ளன.

ரேஸ் பைக் ஓட்டுற ஃபீல் கிடைக்கும்... சூப்பரான அலங்காரங்களுடன் ஏரோக்ஸ் 155 மோட்டோஜிபி எடிசன் அறிமுகம்!

இந்த பகுதிகளில் எல்லாம் மான்ஸ்டர் எடிசன் என்பதை பிரதிபலிக்கின்ற வகையிலான கிராஃபிக்குகளே ஒட்டப்பட்டுள்ளன. இவற்றின் காரணத்தினாலேயே ஏரோக்ஸ் 155 முற்றிலுமான ஸ்போர்ட்ஸ் இருசக்கர வாகனத்தைபோல் காட்சியளிக்கத் தொடங்கியிருக்கின்றது. ஏற்கனவே, ஸ்போர்ட்டி லுக்கிற்கு பெயர்போன ஓர் தயாரிப்பாக யமஹாவின் இந்த ஸ்கூட்டர் இருக்கின்றது.

ரேஸ் பைக் ஓட்டுற ஃபீல் கிடைக்கும்... சூப்பரான அலங்காரங்களுடன் ஏரோக்ஸ் 155 மோட்டோஜிபி எடிசன் அறிமுகம்!

இதை இரட்டிப்பாக்கும் வகையிலேயே மோட்டோ ஜிபி எடிசன் அலங்காரம் அமைந்துள்ளது. இந்த பைக்கின் கூடுதல் கவர்ச்சி தோற்றத்திற்கு கருப்பு நிறத்தையே நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இத்துடன், முன் பக்கத்தில் மோட்டோ ஜிபி பிராண்டுடைய விஷர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த இருசக்கர வாகனத்தை நிறுவனத்தின் 'The Call of the Blue' கேம்பைனின்கீழ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

ரேஸ் பைக் ஓட்டுற ஃபீல் கிடைக்கும்... சூப்பரான அலங்காரங்களுடன் ஏரோக்ஸ் 155 மோட்டோஜிபி எடிசன் அறிமுகம்!

இதற்கு முன்னதாக இதே கேம்பைனின்கீழ் நிறுவனம் ஆர்15 வி4 மோட்டோ ஜிபி மான்ஸ்டர் எடிசன் பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்தே தற்போது யமஹா நிறுவனம் ஏரோக்ஸ் 155 மான்ஸ்டர் எடிசன் பைக்கை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

ரேஸ் பைக் ஓட்டுற ஃபீல் கிடைக்கும்... சூப்பரான அலங்காரங்களுடன் ஏரோக்ஸ் 155 மோட்டோஜிபி எடிசன் அறிமுகம்!

காஸ்மெட்டிக் அலங்கார மாற்றத்தைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் யமஹா நிறுவனம் இந்த இருசக்கர வாகனத்தில் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, வழக்கமான ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றதோ, அதே சிறப்பம்சங்களுடனேயே ஏரோக்ஸ் 155 விற்பனைக்கு வந்திருக்கின்றது.

ரேஸ் பைக் ஓட்டுற ஃபீல் கிடைக்கும்... சூப்பரான அலங்காரங்களுடன் ஏரோக்ஸ் 155 மோட்டோஜிபி எடிசன் அறிமுகம்!

உதாரணமாக வழக்கமான ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 155 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு பெட்ரோல் மோட்டாரே ஏரோக்ஸ் 155 மோட்டோ ஜிபி மான்ஸ்டர் எடிசனிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 14.75 பிஎச்பி பவரையும், 13.9 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

ரேஸ் பைக் ஓட்டுற ஃபீல் கிடைக்கும்... சூப்பரான அலங்காரங்களுடன் ஏரோக்ஸ் 155 மோட்டோஜிபி எடிசன் அறிமுகம்!

இம்மோட்டாரின் சிறந்த இயக்கத்திற்காக சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதே மாதிரியான செட்-அப்புகளே யமஹா ஆர்15 பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், ஏரோக்ஸ் 155 இயக்கத்தில் அப்படியே ஆர்15 ரைடிங் அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ரேஸ் பைக் ஓட்டுற ஃபீல் கிடைக்கும்... சூப்பரான அலங்காரங்களுடன் ஏரோக்ஸ் 155 மோட்டோஜிபி எடிசன் அறிமுகம்!

வரும் விஜயதசமி மற்றும் தீபாவளி பண்டிகளை முன்னிட்டு யமஹா நிறுவனம் இந்த சூப்பரான மற்றும் ஸ்டைலான இருசக்கர வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. குறிப்பாக, ரேஸ் ரக இருசக்கர வாகனங்களை விரும்பக் கூடிய இளைஞர்களைக் கவரும் பொருட்டு இவ்வாகனத்தை அது விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha launches aerox 155 monster energy motogp edition edition in india at rs 1 41 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X