சூப்பரான வண்ணத்தில் Yamaha R15M World GP Edition விற்பனைக்கு அறிமுகம்... விலை ரொம்ப அதிகம் எல்லாம் இல்லைங்க!

யமஹா நிறுவனம் புதிய ஆர்15எம் வேர்ல்டு ஜிபி எடிசன் (Yamaha R15M World GP Edition) எனும் சிறப்பு பதிப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த இருசக்கர வாகனத்தின் விலை மற்றும் பிற முக்கிய தகவல்களைக் கீழே பார்க்கலாம், வாங்க.

சூப்பரான நிற தேர்வில் Yamaha R15M World GP Edition விற்பனைக்கு அறிமுகம்... விலை ரொம்ப அதிகம் எல்லாம் இல்லைங்க!

யமஹா நிறுவனம் அதன் புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடலான ஆர்15எம்-இல் புதிய சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அது யமஹா ஆர்15எம் வேர்ல்டு ஜிபி எடிசன் (Yamaha R15M World GP Edition) எனும் பெயரில் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

சூப்பரான நிற தேர்வில் Yamaha R15M World GP Edition விற்பனைக்கு அறிமுகம்... விலை ரொம்ப அதிகம் எல்லாம் இல்லைங்க!

60ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டே இந்த வாகனம் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு இருசக்கர வாகனத்திற்கு அறிமுக விலையாக ரூ. 1.88 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1961ம் ஆண்டுகளில் நிறுவனம் உருவாக்கிய இருசக்கர வாகனம் ஒன்றை நினைவுப்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

சூப்பரான நிற தேர்வில் Yamaha R15M World GP Edition விற்பனைக்கு அறிமுகம்... விலை ரொம்ப அதிகம் எல்லாம் இல்லைங்க!

ஒய்இசட்ஆர்-எம்1 மாடலை தழுவியே புதிய ஆர்15எம் வேர்ல்டு ஜிபி எடிசன் உருவாக்கப்பட்டுள்ளது. பைக்கை அலங்கரிக்கும் விதமாக வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களை யமஹா பயன்படுத்தியிருக்கின்றது. இத்துடன், தங்க நிறத்தாலான அலாய் வீல்கள், ரேஸ் பைக்குகளைப் போன்ற கோல்டு ட்யூனிங் ஃபோர்க் எம்பளங்கள், கருப்பு நிற லிவர்கள் மற்றும் சிறப்பு பேட்ஜ்கள் கொண்ட ஃப்யூவல் டேங்க் உள்ளிட்டவற்றையும் ஸ்பெஷல் அலங்காரப் பொருட்களாக ஆர்15எம் வேர்ல்டு ஜிபி எடிசன் பைக்கில் யமஹா பயன்படுத்தியுள்ளது.

சூப்பரான நிற தேர்வில் Yamaha R15M World GP Edition விற்பனைக்கு அறிமுகம்... விலை ரொம்ப அதிகம் எல்லாம் இல்லைங்க!

இருசக்கர வாகனத்தில் 155 சிசி லிக்யூடு கூல்டு எஸ்ஓஎச்சி, 4 வால்வுகள் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 18.4 பிஎஸ் பவரையும், 14.2 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டார் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும். வழக்கமான யமஹா ஆர்15எம் மாடலிலும் இதே மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

சூப்பரான நிற தேர்வில் Yamaha R15M World GP Edition விற்பனைக்கு அறிமுகம்... விலை ரொம்ப அதிகம் எல்லாம் இல்லைங்க!

யமஹா நிறுவனம் இந்த பைக்கில் கூடுதல் சிறப்பு வசதிகளாக அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச், குயிக் ஷிஃப்டர், எல்சிடி டிஜிட்டல் டேஷ், ப்ளூடூத் வசதிக் கொண்ட டிஜிட்டல் திரை (இதன் வாயிலாக செல்போனை இணைத்துக் கொள்ளலாம்), டிராக்சன் கன்ட்ரோல், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

சூப்பரான நிற தேர்வில் Yamaha R15M World GP Edition விற்பனைக்கு அறிமுகம்... விலை ரொம்ப அதிகம் எல்லாம் இல்லைங்க!

புதிய சிறப்பு பதிப்பின் அறிமுகத்தால் யமஹா ஆர்15எம் பைக் மூன்று விதமான தேர்வில் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோஜிபி எடிசன் மற்றும் மெட்டலிக் கிரே ஆகிய தேர்வுகள் விற்பனைக்குக் கிடைத்து வந்த நிலையில் தற்போது புதிதாக வேர்ல்டு ஜிபி எடிசனும் சேர்க்கப்பட்டுள்ளது.

சூப்பரான நிற தேர்வில் Yamaha R15M World GP Edition விற்பனைக்கு அறிமுகம்... விலை ரொம்ப அதிகம் எல்லாம் இல்லைங்க!

யமஹா நிறுவனம் ஆண்டின் தொடக்கத்தில் ஆர்15 வி4 மாடலின் விலையை உயர்த்தியது. இதன் புதிய தலைமுறை வெர்ஷனை நிறுவனம் கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அறிமுகத்தின்போது ரூ. 1.68 லட்சம் என்ற விலை மெட்டாலிக் ரெட்டிற்கும், ரூ. 1.69 லட்சம் டார்க் க்நைட்டிற்கும், ரூ. 1.73 லட்சம் ரேசிங் ப்ளூவிற்கும் நிர்ணயிக்கப்பட்டது.

சூப்பரான நிற தேர்வில் Yamaha R15M World GP Edition விற்பனைக்கு அறிமுகம்... விலை ரொம்ப அதிகம் எல்லாம் இல்லைங்க!

ஆனால், இப்போது இவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. விலை உயர்வினால் இந்த பைக் மாடலின் ஆரம்ப விலையே ரூ. 1.76 லட்சமாக மாறியுள்ளது. அதாவது, முன்னதாக இதன் ஆரம்ப நிலை மாடல் ரூ. 1.69 லட்சத்திற்கே கிடைத்து வந்த நிலையில் தற்போது அதன் விலையில் 7 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்திருக்கின்றது.

சூப்பரான நிற தேர்வில் Yamaha R15M World GP Edition விற்பனைக்கு அறிமுகம்... விலை ரொம்ப அதிகம் எல்லாம் இல்லைங்க!

இதேபோல் இதன் உயர்நிலை வேரியண்டின் விலையும் உயர்த்தப்பட்டு, அது ரூ. 1.86 லட்சத்திற்கு விற்பனைச் செய்யப்படுகின்றது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த நிலையிலேயே இவை அனைத்தைக் காட்டிலும் அதிக விலைக் கொண்ட உயர்நிலை தேர்வாக ஆர்15எம் வேர்ல்டு ஜிபி எடிசன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

சூப்பரான நிற தேர்வில் Yamaha R15M World GP Edition விற்பனைக்கு அறிமுகம்... விலை ரொம்ப அதிகம் எல்லாம் இல்லைங்க!

இத்துடன் சேர்த்து யமஹா நிறுவனம் புதிய எம்டி15 வி2.0 பைக்கையும் இன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.6 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த வாகனம் கடந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே புக்கிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha launches yzf r15m wgp 60th anniversary edition in india at inr 1 88 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X