ஸ்கூல் பசங்களையே மிஞ்சிட்டாங்க... காப்பியடித்து உருவாக்கப்பட்ட 50 சிசி ஸ்கூட்டர்... சீன நிறுவனத்தின் அடாவடி!

சீனாவைச் சேர்ந்த இருக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று வெஸ்பாவின் பிரபல ஸ்கூட்டர் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஸ்கூல் பசங்களையே மிஞ்சிட்டாங்க சீனாக்காரங்க... காப்பியடித்து உருவாக்கப்பட்ட 50 சிசி ஸ்கூட்டர்... பேருகூட இன்னும் வைக்கல!

காப்பி வெர்ஷன்களை உருவாக்குவதில் மாஸ்டர் பட்டம் பெற்றவர்கள் போன சீன நிறுவனங்கள் சில செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நம்ம ஊரு ஸ்கூல் பசங்களையே மிஞ்சும் அளவிற்கு அவர்களின் காப்பியடிப்பு திறன் அபாரமானதாக உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், சீனாவைச் சேர்ந்த யமசகி மோட்டார் (Yamasaki Motor) எனும் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று வெஸ்பா இசட்எக்ஸ் 125 (Vespa ZX 125) ஸ்கூட்டரின் காப்பி வெர்ஷனை உருவாக்கியிருக்கின்றது.

ஸ்கூல் பசங்களையே மிஞ்சிட்டாங்க சீனாக்காரங்க... காப்பியடித்து உருவாக்கப்பட்ட 50 சிசி ஸ்கூட்டர்... பேருகூட இன்னும் வைக்கல!

யமசகி, இந்த பெயரே ஓர் சர்ச்சையான பெயர்தான். யமஹாவின் 'யம' மற்றும் கவாசகியின் 'சகி' இந்த இரு பெயர் கலவையே அது தன்னுடைய முழு பெயர் கலவையாக வைத்திருக்கின்றது. இந்த மாதிரியான ஓர் நிறுவனமே தற்போது வெஸ்பா இசட்எக்ஸ் 125 ஸ்கூட்டரின் காப்பி வெர்ஷனை தற்போது வெளியீடு செய்திருக்கின்றது.

ஸ்கூல் பசங்களையே மிஞ்சிட்டாங்க சீனாக்காரங்க... காப்பியடித்து உருவாக்கப்பட்ட 50 சிசி ஸ்கூட்டர்... பேருகூட இன்னும் வைக்கல!

அது உருவாக்கியிருக்கும் ஸ்கூட்டர் 'கேசோலின் ஸ்கூட்டர் 50சிசி' (Gasoline scooter 50cc) என்று அழைக்கப்படுகின்றது. ஆனால், இது அதிகாரப்பூர்வ பெயர் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலை தள பக்கத்தில் வெறும் கேசோலின் ஸ்கூட்டர் 50சிசி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஸ்கூட்டரை அடையாளப்படுத்தும் வகையில் மட்டும் அது பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்கூல் பசங்களையே மிஞ்சிட்டாங்க சீனாக்காரங்க... காப்பியடித்து உருவாக்கப்பட்ட 50 சிசி ஸ்கூட்டர்... பேருகூட இன்னும் வைக்கல!

இருசக்கர வாகனத்தில் 50 சிசி மோட்டாரை பயன்படுத்தியிருக்கின்ற காரணத்தினால் இந்த பெயர் கொண்டு இருசக்கர வாகனத்தை யமசகி குறிப்பிடுகின்றது. இந்த 50 சிசி மோட்டார் 3.39 சிசி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. அதேவேலையில், வெஸ்பா இசட்எக்ஸ் 125 ஸ்கூட்டரில் 124.5 சிசி மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஸ்கூல் பசங்களையே மிஞ்சிட்டாங்க சீனாக்காரங்க... காப்பியடித்து உருவாக்கப்பட்ட 50 சிசி ஸ்கூட்டர்... பேருகூட இன்னும் வைக்கல!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 9.92 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதுபோன்று கணிசமான மாற்றங்களை மட்டுமே தனது வாகனத்தில் யமசகி வழங்கியிருக்கின்றது. இதேபோல், தனது வாகனத்தை புதிய தோற்றம் கொண்டதைப் போல் காண்பிப்பதற்கான வேலைகளையும் அது செய்திருக்கின்றது.

ஸ்கூல் பசங்களையே மிஞ்சிட்டாங்க சீனாக்காரங்க... காப்பியடித்து உருவாக்கப்பட்ட 50 சிசி ஸ்கூட்டர்... பேருகூட இன்னும் வைக்கல!

இதற்காக சற்று கொழுகொழுவென்ற தோற்றத்தை வழங்கக் கூடிய பாடி பேனல்களை அது பயன்படுத்தியிருக்கின்றது. ஆனால், ஸ்டைல் மற்றும் உருவ தோற்றத்தை உற்று பார்க்கும்போது இரண்டும் ஒரே மாதிரி இருப்பதை நம்மால் அறிய முடியும். வெஸ்பா ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் வழங்கப்பட்டிருப்பதைப் போலவே இன்டிகேட்டர், இரு இன்டிகேட்டர்களுக்கு இடையில் இருக்கும் ஏர் வெண்ட் துளைகள், முன் பக்க மட்குவார்ட் மற்றும் அதன் மீதிருக்கும் குரோம் இன்செர்ட் உள்ளிட்டவை யமசகி ஸ்கூட்டரிலும் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஸ்கூல் பசங்களையே மிஞ்சிட்டாங்க சீனாக்காரங்க... காப்பியடித்து உருவாக்கப்பட்ட 50 சிசி ஸ்கூட்டர்... பேருகூட இன்னும் வைக்கல!

அதேவேலையில், சற்று வித்தியாசமான எக்ஸ் வடிவ ஹெட்லைட், முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலிலான டெயில் லைட், பின் பக்க பயணிக்கான கிராப் ரெயில், குரோம் அணிகலன், சூப்பரான அலாய் வீல்கள் மற்றும் பிரீமியம் தர இருக்கை உள்ளிட்டவற்றை யமசகி நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

ஸ்கூல் பசங்களையே மிஞ்சிட்டாங்க சீனாக்காரங்க... காப்பியடித்து உருவாக்கப்பட்ட 50 சிசி ஸ்கூட்டர்... பேருகூட இன்னும் வைக்கல!

யமசகி நிறுவனம் ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கையும், பின் பக்கத்தில் ஸ்விங்கர்ம் மோனோஷாக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவையிரண்டும் ரைடை அனுபவித்து மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். இதுமட்டுமின்றி, ஸ்கூட்டரில் சிறந்த பிரேக்கிற்காக முன் பக்கத்தில் டிஸ்க்கும், பின் பக்கத்தில் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், வட்ட வடிவ முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும் இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஸ்கூல் பசங்களையே மிஞ்சிட்டாங்க சீனாக்காரங்க... காப்பியடித்து உருவாக்கப்பட்ட 50 சிசி ஸ்கூட்டர்... பேருகூட இன்னும் வைக்கல!

சீன நிறுவனங்கள் இதுபோன்று காப்பி வெர்ஷன் வாகனங்களை உருவாக்குவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக பலதரப்பட்ட இதுபோன்ற காப்பி வெர்ஷன்களை சீன நிறுவனங்கள் உருவாக்கியிருக்கின்றன. ஏன், பெயர்களைகூட அவை காப்பியடித்து வைத்திருக்கின்றன. இந்த நிலையிலேயே வெஸ்பா இசட்எக்ஸ் 125 ஸ்கூட்டரின் காப்பி வெர்ஷனை சீன நிறுவனம் யமசகி மோட்டார் வெளியீடு செய்திருக்கின்றது.

Most Read Articles
English summary
Yamasaki motor unveils copycat version of vespa zx 125
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X