பிரபலமான ‘ரோட்கிங்’ பெயரில் இதனால்தான் யெஸ்டி பைக் அறிமுகமாகவில்லையா!! 650சிசி-யில் தயாராகிறதாம்

பிரபலமான 'ரோட்கிங்' (Roadking) என்கிற பெயரில் 650சிசி மோட்டார்சைக்கிள் யெஸ்டி பிராண்டில் இருந்து கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரபலமான ‘ரோட்கிங்’ பெயரில் இதனால்தான் யெஸ்டி பைக் அறிமுகமாகவில்லையா!! 650சிசி-யில் தயாராகிறதாம்

பழமையான யெஸ்டி பிராண்டிற்கு கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் மீண்டும் உயிர் கொடுத்துள்ளதை பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். யெஸ்டி பிராண்டில் இருந்து 3 புதிய மோட்டார்சைக்கிள்கள் அட்வென்ச்சர், ஸ்க்ராம்ப்ளர் & ரோட்ஸ்டர் என்கிற பெயரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

பிரபலமான ‘ரோட்கிங்’ பெயரில் இதனால்தான் யெஸ்டி பைக் அறிமுகமாகவில்லையா!! 650சிசி-யில் தயாராகிறதாம்

முன்னதாக இதில் ஒன்றின் பெயர், முந்தைய காலங்களில் பிரபலமான யெஸ்டி பைக்காக விளங்கிய ரோட்கிங்-இன் பெயராக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்காமல் போனது. எங்களுக்கு தெரிந்தவரையில், ‘ரோட்கிங்' பெயரை ஆற்றல்மிக்க யெஸ்டி மோட்டார்சைக்கிளிற்காக கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் தக்க வைத்து கொண்டுள்ளது என்றே நினைக்கிறோம்.

பிரபலமான ‘ரோட்கிங்’ பெயரில் இதனால்தான் யெஸ்டி பைக் அறிமுகமாகவில்லையா!! 650சிசி-யில் தயாராகிறதாம்

தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, யெஸ்டி ரோட்கிங் ஆனது 650சிசி மோட்டார்சைக்கிளாக இருக்கலாம். இதன் அறிமுகம் நடப்பு 2022ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்திலோ இருக்கலாம். தற்சமயம் இந்த யெஸ்டி மோட்டார்சைக்கிள் வடிவமைப்பு பணிகளில் உள்ளதாம். ஆனால் தற்போதுவரையில் இதன் எந்தவொரு சோதனை மாதிரியும் பொது சாலையில் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்படவில்லை.

பிரபலமான ‘ரோட்கிங்’ பெயரில் இதனால்தான் யெஸ்டி பைக் அறிமுகமாகவில்லையா!! 650சிசி-யில் தயாராகிறதாம்

கிளாசிக் லெஜண்ட்ஸின் தற்போதைய மோட்டார்சைக்கிள் எவை ஒன்றின் ப்ளாட்ஃபாரத்தையும் ரோட்கிங் பகிர்ந்து கொள்ளாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது சமீபத்தில் ஐரோப்பாவில் வெளியீடு செய்யப்பட்ட பிஎஸ்ஏ கோல்டுஸ்டாரின் என்ஜினை பகிர்ந்து கொள்ளும் என தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில் யெஸ்டி, ஜாவா மட்டுமின்றி பிஎஸ்ஏ பிராண்டையும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் தான் சொந்தமாக கொண்டுள்ளது.

பிரபலமான ‘ரோட்கிங்’ பெயரில் இதனால்தான் யெஸ்டி பைக் அறிமுகமாகவில்லையா!! 650சிசி-யில் தயாராகிறதாம்

பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் பைக்கில் 652சிசி, இரட்டை ஓவர்ஹெட் காம், சிங்கிள்-சிலிண்டர், 4-வால்வு என்ஜின் பொருத்தப்படுகிறது. லிக்யுடு கூலிங் அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த 652சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 45 எச்பி மற்றும் 55 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் ஸ்லிப்பர் க்ளட்ச்-ஐ கொண்ட 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

பிரபலமான ‘ரோட்கிங்’ பெயரில் இதனால்தான் யெஸ்டி பைக் அறிமுகமாகவில்லையா!! 650சிசி-யில் தயாராகிறதாம்

இதே என்ஜின் தான் பிஎம்டபிள்யூவின் எஃப்650 எண்டூரோ பைக்கிலும் பொருத்தப்படுகிறது. ரோடக்ஸ் நிறுவனம் முதன்முதலாக உருவாக்கிய இந்த என்ஜின் சற்று பழையதுதான். இருப்பினும் இதனை பிஎஸ்ஏ பிராண்ட் மாடர்னாக சற்று திருத்தியமைத்துள்ளது. இதன்படி ஃப்யுல் இன்ஜெக்‌ஷன் யூனிட்டை பெற்றுள்ள இந்த 652சிசி என்ஜின் யூரோ-5 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

பிரபலமான ‘ரோட்கிங்’ பெயரில் இதனால்தான் யெஸ்டி பைக் அறிமுகமாகவில்லையா!! 650சிசி-யில் தயாராகிறதாம்

இதுதவிர்த்து, விரைவில் அறிமுகமாகவுள்ள யெஸ்டி ரோட்கிங் பைக்கை பற்றிய மற்ற விபரங்கள் அனைத்தும் தற்போதைக்கு இல்லை. இருப்பினும் சில அம்சங்களை ரோட்கிங் பைக்கில் நாங்கள் எதிர்பார்க்கிறோம். பழைய யெஸ்டி ரோட்கிங் பைக்கை போன்று புதிய ரோட்கிங் மாடலும் ரெட்ரோ தோற்றத்தில் வடிவமைக்க கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் முயற்சிக்கும். இதனால் சதுரமான வடிவில் பெட்ரோல் டேங்க் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

பிரபலமான ‘ரோட்கிங்’ பெயரில் இதனால்தான் யெஸ்டி பைக் அறிமுகமாகவில்லையா!! 650சிசி-யில் தயாராகிறதாம்

தற்கால வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் பைக்கை போல், புதிய ரோட்கிங் பைக்கை சுற்றிலும் மாடர்ன் தொடுதல்கள் வழங்கப்படும். பைக்கை மொபைல் போன் உடன் இணைக்கும் வசதி தற்சமயம் அடிப்படை வசதியாக மாறி வருகிறது. அதிலிலும், இது 650சிசி என ஆற்றல்மிக்க பைக்காக உருவாக்கப்படுவதால், நிச்சயம் ப்ளூடூத் இணைப்பை எதிர்பார்க்கலாம்.

பிரபலமான ‘ரோட்கிங்’ பெயரில் இதனால்தான் யெஸ்டி பைக் அறிமுகமாகவில்லையா!! 650சிசி-யில் தயாராகிறதாம்

இதன் மூலமாக பயணத்திற்கான வழிக்காட்டுதல் பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வாயிலாக கிடைக்கும். இத்துடன் முழு-எல்இடி விளக்குகள், யுஎஸ்பி சார்ஜர் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் புதிய ரோட்கிங் பைக்கில் வழங்கப்படலாம். இந்தியாவில் விற்பனையில் யெஸ்டி ரோட்கிங் பைக்கிற்கு ராயல் என்பீல்டின் 650சிசி மோட்டார்சைக்கிள்கள் முக்கிய போட்டியாக விளங்கும்.

பிரபலமான ‘ரோட்கிங்’ பெயரில் இதனால்தான் யெஸ்டி பைக் அறிமுகமாகவில்லையா!! 650சிசி-யில் தயாராகிறதாம்

தற்போதைக்கு இண்டர்செப்டர் 650 & காண்டினெண்டல் ஜிடி650 என இரு 650சிசி பைக்குகளை மட்டுமே ராயல் என்பீல்டு சந்தைப்படுத்தி வருகிறது என்றாலும், விரைவில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்திருந்தன. ராயல் என்பீல்டின் 650சிசி பைக்குகளுக்கு இணையாக யெஸ்டி ரோட்கிங் பைக்கின் விலையினை ரூ.2.7 - 3 லட்சங்கள் என்கிற அளவில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

மேலும்... #யெஸ்டி #yezdi
English summary
Yezdi confirms Roadking launch in India; could get 650CC BSA Goldstar engine.
Story first published: Wednesday, January 26, 2022, 22:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X