அந்த காலத்துல ஓட்டுனது... Yezdi பைக்குகள் மீண்டும் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

இந்தியாவில் மிக நீண்ட இடைவெளிக்கு பின் யெஸ்டி பைக்குகள் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அந்த காலத்துல ஓட்டுனது... Yezdi பைக்குகள் மீண்டும் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் யெஸ்டி ரோட்ஸ்டர் (Yezdi Roadster) பைக் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யெஸ்டி பிராண்டு மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கியுள்ளது. யெஸ்டி பைக் ரசிகர்கள் மத்தியில் இது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த காலத்துல ஓட்டுனது... Yezdi பைக்குகள் மீண்டும் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

யெஸ்டி லைன்-அப்பின் எண்ட்ரி-வெலல் மாடலாக ரோட்ஸ்டர் உள்ளது. 1980 மற்றும் 1990களில் மிகவும் பிரபலமாக இருந்த யெஸ்டி ரோட்கிங் (Yezdi Roadking) பைக்கை இது நினைவுபடுத்துகிறது. பழைய யெஸ்டி ரோட்கிங் பைக்கின் ஒரு சில டிசைன் அம்சங்களை தற்போதைய யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கிலும் காண முடிகிறது.

அந்த காலத்துல ஓட்டுனது... Yezdi பைக்குகள் மீண்டும் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த பைக்கின் முன் பகுதியில் வட்ட வடிவ ஹெட்லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது. பழைய ரோட்கிங் பைக்கின் ரைடிங் பொஷிஷனை புதிய ரோட்ஸ்டர் பைக்கில் கொண்டு வருவதற்கும் டிசைனர்கள் முயற்சி செய்துள்ளனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அந்தக்கால ரெட்ரோ லுக்கும், தற்போதைய காலத்திற்கு ஏற்ற மாடர்ன் லுக்கும் கலந்த கலவையாக யெஸ்டி ரோட்ஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

அந்த காலத்துல ஓட்டுனது... Yezdi பைக்குகள் மீண்டும் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கின் ஹெட்லேம்ப் சிறியதாக தெரிகிறது. அதே நேரத்தில் இன்ஜினின் லிக்யூட்-கூலிங்கிற்கான ரேடியேட்டர் மிகவும் பெரிதாக காட்சியளிக்கிறது. அந்தக்கால பழைய 2-ஸ்ட்ரோக் இன்ஜின்களை நினைவுபடுத்தும் வகையில், தற்போதைய யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கின் இன்ஜினை வடிவமைத்துள்ளனர்.

அந்த காலத்துல ஓட்டுனது... Yezdi பைக்குகள் மீண்டும் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

இது லிக்யூட்-கூல்டு இன்ஜின்தான் என்றாலும் கூட, சிலிண்டரில் கூலிங் ஃபின்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிக ரெட்ரோ லுக் கிடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் பேக் ரெஸ்ட் உடன் கூடிய சிங்கிள் பீஸ் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இது உங்களது சௌகரியமான பயணத்தை உறுதி செய்யும்.

அந்த காலத்துல ஓட்டுனது... Yezdi பைக்குகள் மீண்டும் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

அதே சமயம் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இது வட்ட வடிவ எல்சிடி யூனிட் ஆகும். இது கவர்ச்சிகரமாக இருப்பதுடன், நிறைய தகவல்களையும் நமக்கு தருகிறது. இதில், ட்ரிப் மீட்டர், கியர் இன்டிகேட்டர், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் மற்றும் டேக்கோமீட்டர் ஆகியவை அடங்கும்.

அந்த காலத்துல ஓட்டுனது... Yezdi பைக்குகள் மீண்டும் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த பைக்கில் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதி ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. யூஎஸ்பி டைப்-ஏ மற்றும் டைப்-சி சார்ஜிங் சாக்கெட் வசதியையும் இந்த பைக் பெற்றுள்ளது. யெஸ்டி ரோட்ஸ்டர் மட்டுமின்றி, ஸ்கிராம்ப்ளர் மற்றும் அட்வென்ஜர் என மேலும் இரண்டு பைக்குகளும் தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அந்த காலத்துல ஓட்டுனது... Yezdi பைக்குகள் மீண்டும் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

ஜாவா பெராக் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள அதே இன்ஜின்தான் இந்த மூன்று பைக்குகளிலும் வழங்கப்பட்டுள்ளது. இது லிக்யூட்-கூல்டு, 334 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் ஆகும். யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 29.3 பிஹெச்பி பவரையும், 29 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் 'ட்யூன்' செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அந்த காலத்துல ஓட்டுனது... Yezdi பைக்குகள் மீண்டும் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கின் முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் இந்த பைக்கின் முன் பகுதியில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் முன் பகுதியில் 100/90 செக்ஸன் ட்யூப்லெஸ் டயருடன் 18 இன்ச் வீல் வழங்கப்பட்டுள்ளது.

அந்த காலத்துல ஓட்டுனது... Yezdi பைக்குகள் மீண்டும் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

பின் பகுதியில் 130/80 செக்ஸன் டயருடன் 17 இன்ச் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எடை 184 கிலோ. இந்த பைக்கின் எரிபொருள் டேங்க் 12.5 லிட்டர் கொள்ளளவு கொண்டது. யெஸ்டி ரோட்ஸ்டர் பைக் டார்க் மற்றும் க்ரோம் என மொத்தம் 2 வேரியண்ட்களில் கிடைக்கும். வேரியண்ட் மற்றும் வண்ண தேர்வை பொறுத்து இந்த பைக்கின் விலை மாறுபடும். விரிவான விலை பின்வருமாறு:

அந்த காலத்துல ஓட்டுனது... Yezdi பைக்குகள் மீண்டும் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!
  • யெஸ்டி ரோட்ஸ்டர் டார்க் - ஸ்மோக் க்ரே: 1,98,142 ரூபாய்
  • யெஸ்டி ரோட்ஸ்டர் டார்க் - ஸ்டீல் ப்ளூ: 2,02,142 ரூபாய்
  • யெஸ்டி ரோட்ஸ்டர் டார்க் - ஹண்டர் க்ரீன்: 2,02,142 ரூபாய்
  • யெஸ்டி ரோட்ஸ்டர் க்ரோம் - கேலண்ட் க்ரே: 2,06,142 ரூபாய்
  • யெஸ்டி ரோட்ஸ்டர் க்ரோம் - சின் சில்வர்: 2,06,142 ரூபாய்
  • அந்த காலத்துல ஓட்டுனது... Yezdi பைக்குகள் மீண்டும் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

    இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் யெஸ்டி பைக்குகள் மீண்டும் விற்பனைக்கு வந்திருப்பது நமது உற்சாகத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது. உங்களை போலவே யெஸ்டி பைக்குகளை மீண்டும் ஓட்டுவதற்கு நாங்களும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளோம்!

Most Read Articles
மேலும்... #யெஸ்டி #yezdi #pongal 2022
English summary
Yezdi roadster launched in india here s everything you need to know
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X