யெஸ்டி ரோட்ஸ்டர் vs ராயல் என்பீல்டு மீட்டியோர் 350!! எந்த க்ரூஸர் பைக்கை தேர்வு செய்யலாம்?

கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் சமீபத்தில் மீண்டும் யெஸ்டி பிராண்டை செயல்பாட்டிற்கு கொண்டுவந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு புத்துயிர் பெற்ற இந்த பழமையான பிராண்டில் இருந்து அட்வென்ச்சர், ஸ்க்ராம்ப்ளர் மற்றும் ரோட்ஸ்டர் என்கிற 3 மோட்டார்சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

யெஸ்டி ரோட்ஸ்டர் vs ராயல் என்பீல்டு மீட்டியோர் 350!! எந்த க்ரூஸர் பைக்கை தேர்வு செய்யலாம்?

இவை மூன்றும் தங்களுக்கென தனித்தனி அடையாளங்களை கொண்டுள்ளன. யெஸ்டி பிராண்டினை முக்கியமாக ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு போட்டியளிக்கும் விதத்தில் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இந்த வகையில் யெஸ்டி அட்வென்ச்சர் பைக் ராயல் என்பீல்டு ஹிமாலயனுக்கும், ஸ்க்ராம்ப்ளர் மாடல் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கிற்கும் போட்டியாக விளங்கவுள்ளன.

யெஸ்டி ரோட்ஸ்டர் vs ராயல் என்பீல்டு மீட்டியோர் 350!! எந்த க்ரூஸர் பைக்கை தேர்வு செய்யலாம்?

இருப்பதிலேயே மலிவான யெஸ்டி பைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரோட்ஸ்டர் மாடலுக்கு, ராயல் என்பீல்டின் சமீபத்திய அறிமுகங்களுள் ஒன்றான மீட்டியோர் 350 நேரெதிர் போட்டியாக விளங்குகிறது. இவை இரண்டும் எந்தெந்த விஷயங்களில் வேறுப்படுகின்றன மற்றும் எந்தெந்த விஷயங்களில் ஒத்து போகின்றன என்பதை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

யெஸ்டி ரோட்ஸ்டர் vs ராயல் என்பீல்டு மீட்டியோர் 350!! எந்த க்ரூஸர் பைக்கை தேர்வு செய்யலாம்?

தோற்றத்தை பொறுத்தவரையில், இந்த இரு பைக்குகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தாழ்வாக க்ரூஸர்-போன்றதான நிலைப்பாட்டை கொண்டுள்ளன. அதேநேரம் இவை இரண்டும் புதிய ரெட்ரோ டிசைன் தீம்-ஐ பெற்றுள்ளன. ஆனால் உண்மையில் இவை இரண்டும் முழு க்ரூஸர் பைக்குகள் கிடையாது. ரோட்ஸ்டர் ரக பைக்குகள் சவுகரியான பயணத்திற்காக க்ரூஸராக சற்று மாற்றப்பட்டுள்ளன, அவ்வளவுதான்.

யெஸ்டி ரோட்ஸ்டர் vs ராயல் என்பீல்டு மீட்டியோர் 350!! எந்த க்ரூஸர் பைக்கை தேர்வு செய்யலாம்?

மீட்டியோர் 350 பைக்கில் அகலமான மற்றும் உயரமான ஹேண்டில்பார் வழங்கப்படுகிறது. இதனால் இந்த ராயல் என்பீல்டு பைக்கில் கூடுதலாக க்ரூஸர் உணர்வு ஏற்படலாம். ஆனால் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கில் சிறிது தாழ்வான ஹேண்டில்பார் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவை இரண்டும் சரியாக பைக்கிற்கு மத்தியில் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதியினை கொண்டுள்ளன.

யெஸ்டி ரோட்ஸ்டர் vs ராயல் என்பீல்டு மீட்டியோர் 350!! எந்த க்ரூஸர் பைக்கை தேர்வு செய்யலாம்?

இதனால் இவை இரண்டிலும் சவுகரியான & பாரம்பரியமான க்ரூஸர் பயணத்திற்கு எந்தவொரு குறையும் இருக்காது. நியோ-ரெட்ரோ ஸ்டைலில் உள்ள இவை இரண்டிலும் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்கள், கண்ணீர்த்துளி வடிவிலான பெட்ரோல் டேங்குகள் மற்றும் வட்ட வடிவிலான டெயில்லைட்கள், டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் உள்ளிட்டவை பொதுவான அம்சங்களாக உள்ளன.

யெஸ்டி ரோட்ஸ்டர் vs ராயல் என்பீல்டு மீட்டியோர் 350!! எந்த க்ரூஸர் பைக்கை தேர்வு செய்யலாம்?

அகலமான ஃபெண்டர்களினால் யெஸ்டி ரோட்ஸ்டர், மீட்டியோர் மாடலை காட்டிலும் சற்று அகலமானது காட்சியளிக்கிறது. மீட்டியோர் 350 பைக்கில் 349சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு SOHC என்ஜின் பொருத்தப்படுகிறது. அதுவே சமீபத்திய அறிமுகமான யெஸ்டி ரோட்ஸ்டரில் 334சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு DOHC என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் யெஸ்டி மாடல் கூடுதல் இயக்க ஆற்றலை பெறக்கூடியதாக உள்ளது.

யெஸ்டி ரோட்ஸ்டர் vs ராயல் என்பீல்டு மீட்டியோர் 350!! எந்த க்ரூஸர் பைக்கை தேர்வு செய்யலாம்?

மீட்டியோரின் 349சிசி என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. அதுவே புதிய யெஸ்டி ரோட்ஸ்டரில் 29.7 பிஎச்பி மற்றும் 29 என்எம் டார்க் திறன் வரையில் பெறலாம். இந்த இரு க்ரூஸர் ரக பைக்குகளுக்கு இடையேயுள்ள மற்றொரு பொதுவாக அம்சம் என்னவென்றால், இவை இரண்டும் ஒரே மாதிரியான இரட்டை-தொட்டில் சட்டகத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.

யெஸ்டி ரோட்ஸ்டர் vs ராயல் என்பீல்டு மீட்டியோர் 350!! எந்த க்ரூஸர் பைக்கை தேர்வு செய்யலாம்?

இவை இரண்டின் சேசிஸிலும் சஸ்பென்ஷன் யூனிட்களாக முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் ப்ரேக்கிங் பணியையும் இவை இரண்டில் டிஸ்க் ப்ரேக்குகள் கவனித்து கொள்கின்றன. இரட்டை-சேனல் ஏபிஎஸ் இந்த இரு பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் யெஸ்டி பைக்கில் முன்பக்கத்தில் சற்று பெரிய 320மிமீ டிஸ்க்கும், ராயல் என்பீல்டு மாடலில் பின்பக்கத்தில் சற்று பெரியதாக 270மிமீ-இல் ரோட்டாரும் கொடுக்கப்படுகின்றன.

யெஸ்டி ரோட்ஸ்டர் vs ராயல் என்பீல்டு மீட்டியோர் 350!! எந்த க்ரூஸர் பைக்கை தேர்வு செய்யலாம்?

தொழிற்நுட்ப வசதிகளை பொறுத்தவரையில், யெஸ்டி ரோட்ஸ்டரில் முழு-எல்இடி விளக்குகள் மற்றும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்படுகிறது. ஆனால் மீட்டியோர் 350 பைக்கில் ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கும் ப்ளூடூத் இணைப்பு மற்றும் ஒவ்வொரு திருப்பலுக்கும் வழிகாட்டுதல் வசதியினை ரோட்ஸ்டர் பெறவில்லை. மேலும் மீட்டியோர் மாடல் எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில்லைட் மற்றும் யுஎஸ்பி சார்ஜரையும் பெறுகிறது.

யெஸ்டி ரோட்ஸ்டர் vs ராயல் என்பீல்டு மீட்டியோர் 350!! எந்த க்ரூஸர் பைக்கை தேர்வு செய்யலாம்?

இவ்வாறு ஒன்றுக்கொன்று சளைத்ததாக இல்லாமல் விளங்கும் இவை இரண்டும் விலையிலும் மிக நெருக்கமாக உள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், ஆரம்ப நிலை மலிவான யெஸ்டி பைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரோட்ஸ்டர் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.98 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே மீட்டியோர் 350 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.01 லட்சமாக தற்சமயம் உள்ளது.

Most Read Articles
English summary
Yezdi Roadster Vs Royal Enfield Meteor 350 .
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X