ஓட்டி ரொம்ப வருஷம் ஆச்சு... இந்தியாவில் யெஸ்டி பைக்குகளின் டெலிவரி தொடங்கியது... ரசிகர்கள் உற்சாகம்!

இந்தியாவில் யெஸ்டி மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஓட்டி ரொம்ப வருஷம் ஆச்சு... இந்தியாவில் யெஸ்டி பைக்குகளின் டெலிவரி தொடங்கியது... ரசிகர்கள் உற்சாகம்!

பாரம்பரியம் மிக்க யெஸ்டி பிராண்டு இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கியுள்ளது. அதன் மூன்று புதிய மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அட்வென்ஜர், ஸ்க்ராம்ப்ளர் மற்றும் ரோட்ஸ்டர் என மொத்தம் மூன்று புதிய யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

ஓட்டி ரொம்ப வருஷம் ஆச்சு... இந்தியாவில் யெஸ்டி பைக்குகளின் டெலிவரி தொடங்கியது... ரசிகர்கள் உற்சாகம்!

அவற்றின் டெலிவரி பணிகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. யெஸ்டி ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெட்ரோ லுக்கில் தற்போதைய அதிநவீன வசதிகள் கலந்த கலவையாக இந்த மூன்று மோட்டார்சைக்கிள்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பழைய யெஸ்டி மோட்டார்சைக்கிள்களின் வசீகரம் இந்த மோட்டார்சைக்கிள்களிலும் இருக்கிறது.

ஓட்டி ரொம்ப வருஷம் ஆச்சு... இந்தியாவில் யெஸ்டி பைக்குகளின் டெலிவரி தொடங்கியது... ரசிகர்கள் உற்சாகம்!

இந்திய சந்தையில் பல்வேறு தரப்பட்ட வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த மூன்று மோட்டார்சைக்கிள்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில், யெஸ்டி அட்வென்ஜர் மோட்டார்சைக்கிளானது, அட்வென்ஜர் டூரர் ரகத்தை சேர்ந்தது. ஆஃப் ரோடு சாகச பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.

ஓட்டி ரொம்ப வருஷம் ஆச்சு... இந்தியாவில் யெஸ்டி பைக்குகளின் டெலிவரி தொடங்கியது... ரசிகர்கள் உற்சாகம்!

யெஸ்டி அட்வென்ஜர் பைக்கை வழக்கமான சாலைகளிலும் கூட ஓட்ட முடியும். அதே நேரத்தில் யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் மோட்டார்சைக்கிளானது, ஹார்டுகோர் ஆஃப் ரோடு பயணங்களை விரும்புபவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதே சமயம் யெஸ்டி ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிளானது, ரிலாக்ஸான முறையில் தொலை தூர க்ரூஸிங்கை விரும்புபவர்களுக்கு உகந்ததாக இருக்கும்.

ஓட்டி ரொம்ப வருஷம் ஆச்சு... இந்தியாவில் யெஸ்டி பைக்குகளின் டெலிவரி தொடங்கியது... ரசிகர்கள் உற்சாகம்!

இந்தியாவில் ஜாவா ஷோரூம்கள் வாயிலாக யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. புதிய பிராண்டு மற்றும் மோட்டார்சைக்கிள்களுக்காக ஜாவா ஷோரூம்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த மூன்று மோட்டார்சைக்கிள்களும் தோற்றத்தில் வெவ்வேறாக இருந்தாலும் பல பாகங்களை பகிர்ந்து கொண்டுள்ளன.

ஓட்டி ரொம்ப வருஷம் ஆச்சு... இந்தியாவில் யெஸ்டி பைக்குகளின் டெலிவரி தொடங்கியது... ரசிகர்கள் உற்சாகம்!

இதன்படி பிளாட்பார்ம், இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆகிய மூன்று முக்கியமான அம்சங்களையும் இந்த மூன்று மோட்டார்சைக்கிள்களும் பகிர்ந்து கொண்டுள்ளன. யெஸ்டி பிராண்டின் இந்த மூன்று மோட்டார்சைக்கிள்களிலும் 334 சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூட்-கூல்டு, நான்கு-ஸ்ட்ரோக், டிஓஹெச்சி இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

ஓட்டி ரொம்ப வருஷம் ஆச்சு... இந்தியாவில் யெஸ்டி பைக்குகளின் டெலிவரி தொடங்கியது... ரசிகர்கள் உற்சாகம்!

இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஒரே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது என்றாலும், இந்த 3 மோட்டார்சைக்கிள்களும் வெளிப்படுத்தும் பவர் மற்றும் டார்க் அவுட்புட் வெவ்வேறானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். வெவ்வேறு பவர் அவுட்புட்டை வெளிப்படுத்தும் வகையில் இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

ஓட்டி ரொம்ப வருஷம் ஆச்சு... இந்தியாவில் யெஸ்டி பைக்குகளின் டெலிவரி தொடங்கியது... ரசிகர்கள் உற்சாகம்!

இதன்படி யெஸ்டி அட்வென்ஜர் மோட்டார்சைக்கிளில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 30.2 பிஎஸ் பவரையும், 29.9 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். அதே நேரத்தில் யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் மோட்டார்சைக்கிளில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 29.1 பிஎஸ் பவரையும், 28.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக இருக்கிறது.

ஓட்டி ரொம்ப வருஷம் ஆச்சு... இந்தியாவில் யெஸ்டி பைக்குகளின் டெலிவரி தொடங்கியது... ரசிகர்கள் உற்சாகம்!

அதே சமயத்தில் யெஸ்டி ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிளில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 29.7 பிஎஸ் பவரையும், 29 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டதாக வந்துள்ள யெஸ்டி மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டிருப்பது அதன் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டி ரொம்ப வருஷம் ஆச்சு... இந்தியாவில் யெஸ்டி பைக்குகளின் டெலிவரி தொடங்கியது... ரசிகர்கள் உற்சாகம்!

ஆனால் டெலிவரி பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெறுவது மிகவும் அவசியம். ஏனெனில் ஜாவா மோட்டார்சைக்கிள் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜாவா பைக்குகள் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டன.

ஓட்டி ரொம்ப வருஷம் ஆச்சு... இந்தியாவில் யெஸ்டி பைக்குகளின் டெலிவரி தொடங்கியது... ரசிகர்கள் உற்சாகம்!

ஆனால் டெலிவரி பணிகள் எதிர்பார்த்த வகையில் நடைபெறவில்லை. டெலிவிரி பணிகளில் மிக நீண்ட காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ஜாவா பைக்குகளை முன்பதிவு செய்திருந்தவர்களும், வாங்கலாம் என்ற ஆவலுடன் காத்திருந்தவர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் தற்போது முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

ஓட்டி ரொம்ப வருஷம் ஆச்சு... இந்தியாவில் யெஸ்டி பைக்குகளின் டெலிவரி தொடங்கியது... ரசிகர்கள் உற்சாகம்!

ஜாவா மோட்டார்சைக்கிள்கள் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டபோது, ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு மிக கடுமையான நெருக்கடி மற்றும் போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு எதுவுமே நடக்கவில்லை. டெலிவரியில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக ஜாவா மோட்டார்சைக்கிள்களை முன்பதிவு செய்திருந்த பலர் அதனை ரத்து செய்தனர்.

ஓட்டி ரொம்ப வருஷம் ஆச்சு... இந்தியாவில் யெஸ்டி பைக்குகளின் டெலிவரி தொடங்கியது... ரசிகர்கள் உற்சாகம்!

ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு பதிலாக அவர்கள் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களையே தொடர்ந்து வாங்கினர். யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் விஷயத்தில் அவ்வாறு எதுவும் நடக்காமல் இருந்தால், முன்பு போலவே தற்போதும் இந்த மோட்டார்சைக்கிள்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் பெரும் வரவேற்புகளை வாரி வழங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles
மேலும்... #யெஸ்டி #yezdi
English summary
Yezdi starts deliveries of all 3 bikes here are all the details
Story first published: Monday, January 17, 2022, 17:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X