இந்தியாவில் கால் தடம் பதிக்கும் சீன நிறுவனம்... சூப்பர் சூப்பரான டூ-வீலர்களை களமிறக்க போவதாக அறிவிப்பு!

இந்திய இருசக்கர வாகன சந்தையில் சீன நிறுவனம் ஜோன்டெஸ் (Zontes) கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் கால் தடம் பதிக்கும் சீன நிறுவனம்... சூப்பர் சூப்பரான டூ-வீலர்களை களமிறக்க போவதாக அறிவிப்பு!

புதுமுக வெளிநாட்டு இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று இந்திய சந்தையில் விரைவில் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோன்டெஸ் (Zontes) எனும் நிறுவனமே நாட்டின் இருசக்கர வாகன சந்தையில் புதிதாக களமிறங்க இருக்கின்றது. இந்நிறுவனம் அதன் வருகையை முன்னிட்டு இந்தியாவில் ஐந்து புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இந்தியாவில் கால் தடம் பதிக்கும் சீன நிறுவனம்... சூப்பர் சூப்பரான டூ-வீலர்களை களமிறக்க போவதாக அறிவிப்பு!

ஜோன்டெஸ் இந்திய நுழைவிற்காக ஐதராபாத்தைச் சேர்ந்த ஆரி எனப்படும் ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா பிரைவேட் லிமிடெட் (Adishwar Auto Ride India Pvt Ltd (AARI)) உடன் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. இந்நிறுவனத்துடனான கூட்டணியிலேயே பெனெல்லி மற்றும் கீவே ஆகிய இரு நிறுவனங்களும் இந்தியாவில் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் கால் தடம் பதிக்கும் சீன நிறுவனம்... சூப்பர் சூப்பரான டூ-வீலர்களை களமிறக்க போவதாக அறிவிப்பு!

இந்த நிறுவனங்களின் வரிசையிலேயே வெகு விரைவில் ஜோன்டெஸும் இணைய இருக்கின்றது. இதுமட்டுமின்றி, விரைவில் சந்தையில் நுழைய இருக்கும் மோட்டோ மோரினி நிறுவனமும் ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா உடன் இணைந்தே அதன் இருசக்கர வாகனங்களையும் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

இந்தியாவில் கால் தடம் பதிக்கும் சீன நிறுவனம்... சூப்பர் சூப்பரான டூ-வீலர்களை களமிறக்க போவதாக அறிவிப்பு!

ஜோன்டெஸ் ஓர் சீன நிறுவனத்திற்கு சொந்தமான கம்பெனி ஆகும். குவாங்டோங் டயோ மோட்டார்சைக்கிள் டெக்னாலஜி (Guangdong Tayo Motorcycle Technology Co Ltd)-க்கு சொந்தமானதே இந்த நிறுவனம். 2003ம் ஆண்டே இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம், அதன் வாகனங்களுக்கு தேவையான பெரும்பாலான பாகங்களை அதுவே தயாரித்துக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் கால் தடம் பதிக்கும் சீன நிறுவனம்... சூப்பர் சூப்பரான டூ-வீலர்களை களமிறக்க போவதாக அறிவிப்பு!

அதாவது, நிறுவனம் 80 சதவீதக் கூறுகளை அதன் உற்பத்தி ஆலையில் வைத்தே உற்பத்தி செய்கின்றது. ஜோன்டெஸ் நிறுவனம் ஏற்கனவே 55க்கும் அதிகமான நாடுகளில் அதன் வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஃபிரான்ஸ், பெல்ஜியம், பிரேசில், மலேசியா மற்றம் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் ஜோன்டெஸ் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்தியாவில் கால் தடம் பதிக்கும் சீன நிறுவனம்... சூப்பர் சூப்பரான டூ-வீலர்களை களமிறக்க போவதாக அறிவிப்பு!

இந்த நிலையிலேயே இந்தியாவிலும் கால் தடம் பதிக்கும் முயற்சியை நிறுவனம் கையில் எடுத்திருக்கின்றது. ஜோன்டெஸ் தற்போது 10 பைக் மாடல்கள், 2 மேக்ஸி ஸ்கூட்டர் மாடல்கள் மற்றும் எலெக்ட்ரிக் பை-சைக்கிள் உள்ளிட்டவற்றை உலக சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் கால் தடம் பதிக்கும் சீன நிறுவனம்... சூப்பர் சூப்பரான டூ-வீலர்களை களமிறக்க போவதாக அறிவிப்பு!

அவ்வாறு நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருப்பதிலேயே மிக முக்கியமான மாடல்களாக ஜிகே 350 ஸ்போர்ட்ஸ் கஃபே (GK 350 Sports Cafe), 350 வி க்ரூஸ் (350V cruiser), 350 டி மேக்ஸி ஸ்கூட்டர் (350D maxi scooter), 350 டி அட்வென்சர் பைக் (350T adventure bike) மற்றும் 350 ஆர் ஸ்ட்ரீஃபைட்டர் (350R streetfighter) ஆகியவை இருக்கின்றன. இவற்றையே ஒன்றன் பின் ஒன்றாக இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது, ஜோன்டெஸ்.

இந்தியாவில் கால் தடம் பதிக்கும் சீன நிறுவனம்... சூப்பர் சூப்பரான டூ-வீலர்களை களமிறக்க போவதாக அறிவிப்பு!

இதில், முதலில் ஜிகே 350 ஸ்போர்ட்ஸ் கஃபே மோட்டார்சைக்கிளே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இதன் இந்திய வருகையை ஏற்கனவே சீன நிறுவனம் உறுதிப்படுத்திவிட்டது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் 350 சிசி பைக்காகும். இப்பைக்கில், 350 சிசி சிங்கிள் சிலிணடர், லிக்யூடு-கூல்டு ஃப்யூவல் இன்ஜெக்ட் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கால் தடம் பதிக்கும் சீன நிறுவனம்... சூப்பர் சூப்பரான டூ-வீலர்களை களமிறக்க போவதாக அறிவிப்பு!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 39 எச்பி பவரை 9,500 ஆர்பிஎம்மிலும், 33 என்எம் டார்க்கை 7,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த திறன்கள் கேடிஎம் 390 எஸ் மற்றும் கவாஸாகி நிஞ்ஜா 300 ஆகிய பைக்குகளுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஷார்ட் ஸ்ட்ரோக் மோட்டார் 12.3:1 எனும் உயர் கம்பிரஷன் ஸ்ட்ரோக்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இத்தகைய சூப்பரான திறன் வெளியேற்றத்துடனேயே நிறுவனத்தின் மேக்ஸி ஸ்கூட்டரும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதுவும் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், கணிசமான ட்யூன் அப்புடன் அது விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் கால் தடம் பதிக்கும் சீன நிறுவனம்... சூப்பர் சூப்பரான டூ-வீலர்களை களமிறக்க போவதாக அறிவிப்பு!

அதி-வேகத்தை வெளியேற்றும் மோட்டார் மட்டுமின்றி இருசக்கர வாகனத்தில் பன்முக தொழில்நுட்ப வசதிகளும் இடம் பெற இருக்கின்றன. அவை அனைத்தும் இருசக்கர வாகன விரும்பிகளை சுண்டியிழுக்கும் வகையில் வழங்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. சாவியே இல்லாமல் இக்னிஷனை கன்ட்ரோல் செய்தல், ஃப்யூவல் லிட்டை திறத்தல், இருக்கை அன்லாக் செய்தல் போன்ற வசதிகளை அதன் தயாரிப்பில் வழங்கியிருக்கின்றது.

இந்தியாவில் கால் தடம் பதிக்கும் சீன நிறுவனம்... சூப்பர் சூப்பரான டூ-வீலர்களை களமிறக்க போவதாக அறிவிப்பு!

இந்த அம்சத்துடன் கூடுதல் ஈர்ப்பை பெறும் வகையில் பன்முக ரைடிங் மோட்கள், வட்ட வடிவ எல்இடி லைட்டுகள், ட்யூவல் ஃபாஸ்ட் சார்ஜிங் யுஎஸ்பி போர்ட், ட்யூவல் சேனல் ஏபிஎஸ், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களை வழங்கியிருக்கின்றது. இதுபோன்ற எக்கசக்க அம்சங்களைக் கொண்ட வாகனமாக ஜோன்டெஸ் இருசக்கர வாகனம் இருப்பதால் அதன் விலை சற்று அதிகமான இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 3 லட்சம் தொடங்கி ரூ. 3.5 லட்சம் வரையிலான விலையில் அது விற்பனைக்கு வரலாம் யூகிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Zontes joins hand with adishwar auto for entering indian market
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X