"மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு..." என ஓலாவை ஓரங்கட்டப் போகும் ஏத்தர்... ஒரே ஆண்டில் 330 சதவீத வளர்ச்சியா!

ஓலா நிறுவனத்திற்குப் போட்டியாக ஏத்தர் நிறுவனமும் தனது தயாரிப்புகளை அதிகப்படுத்திய நிலையில் இதுவரை இல்லாத விற்பனையைக் கடந்த ஜனவரி மாதம் இந்நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் 1 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரித்து மைல் கல்லைப் பதித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஏத்தர் நிறுவனம் தனது புதுமையான தனித்துவமான தயாரிப்புகள் மூலம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து தனது விற்பனையில் முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. மக்கள் மத்தியில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிறுவனத்தின் கடந்த ஜனவரி மாத விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது.

மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு... என ஓலாவை ஓரங்கட்டப் போகும் ஏத்தர்... ஒரே ஆண்டில் 330 சதவீத வளர்ச்சியா!

ஏத்தர் நிறுவனம் தனது 1 லட்சமாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்துக் கடந்த ஜனவரி மாதம் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக ஏத்தர் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தி ட்ரூ ரெட் ஏத்தர் 450எக்ஸ் என்ற கலர் ஆப்ஷனை காட்சிப்படுத்தியது. தற்போது இந்த கலரில் ஸ்கூட்டர்கள் தயாராகத் துவங்கிவிட்டன.

ஏத்தர் நிறுவனத்தின் வளர்ச்சி படிப்படியாக மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் தனது முதல் 10 ஆயிரம் ஸ்கூட்டர்களை தயாரிக்க 35 மாதங்களை எடுத்துக்கொண்டது. அதன் தனது தயாரிப்பை அதிகப்படுத்திய நிலையில் அடுத்த 5 மாதத்தில் 20 ஆயிரம் என்ற மைல் கல்லையும், அடுத்த 5 மாதத்தில் 30 ஆயிரம் என்ற மைல் கல்லையும் எப்படிப் பிடித்தது.

இந்த நேரத்தில் ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டிமாண்ட் அதிகமாகிவிட்டது. இதனால் அந்நிறுவனம் உற்பத்தித் திறனை அதிகரித்தது. அடுத்த 3 மாதத்திலேயே10 ஆயிரம் ஸ்கூட்டர்களை தயாரித்து 40 ஆயிரம் என்ற மைல் கல்லையும் அடுத்த 2 மாதத்தில் அடுத்த 10 ஆயிரம் ஸ்கூட்டர்களை தயாரித்து 50 ஆயிரம் என்ற மைல் கல்லையும் எட்டி பிடித்து தனது தயாரிப்பைத் தீவிரப்படுத்தியது.

இந்த 50 ஆயிரம் என்ற மைல் கல்லை ஏத்தர் நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி தான் எட்டி பிடித்தது. தற்போது 6 மாதங்கள் கூட ஆகவில்லை அதற்குள் அடுத்த 50 ஆயிரம் இல்லை எட்டி பிடித்து 1 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரித்துவிட்டது. இது இந்நிறுவனத்தின் மிகப்பெரிய வளர்ச்சியை காட்டுகிறது. புதிய ஆலையில் அதிக உற்பத்தித் திறன் காரணமாக இவ்வளவு பெரிய வளர்ச்சியை எட்டி பிடித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதன் முறையாக ஏத்தர் நிறுவனம் ஒரே மாதத்தில் 12 ஆயிரம் ஸ்கூட்டர்களையும் தாண்டி தயாரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 12,149 ஸ்கூட்டர்களை தயாரித்துள்ளது. இவே கடந்தாண்டு ஜனவரி மாதம் வெறும் 2825 ஸ்கூட்டர்களை தான் தயாரித்திருந்ததது. ஒரே ஆண்டில் 9324 ஸ்கூட்டர்களை அதிகம் தயாரித்து 330.05 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

இதுவே கடந்த டிசம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது கடந்த டிசம்பர் மாதம் 9187 ஸ்கூட்டர்களை தான் இந்நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது அதை விடக் கூடுதலாக 2962 ஸ்கூட்டர்களை தயாரித்துள்ளது. இது 32.24 சதவீத வளர்ச்சியாகும். ஏத்தர் நிறுவனத்திற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.

2022ம் ஆண்டு இறுதியில் ஏத்தர் நிறுவனம் 70 நகரங்களில், 89 ஷோரூம்களை அனுபவ மையங்களாகத் திறந்துள்ளது. இந்நிறுவனம் துவங்கப்பட்டதிலிருந்தே கடந்த ஜனவரி மாதம் தான் இந்நிறுவனம் மிகப்பெரிய அளவிலான விற்பனையைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பிப்1ம் தேதி ஆட்டோ ஹோல்டு வசதியைத் தனது ஜென்3 ஸ்கூட்டர்களில் அப்டேட் செய்தது. இது சரிவான பகுதிகளில் ஸ்கூட்டரை நிறுத்தும்போது சரியாமல் இருக்கும்.

ஏத்தர் நிறுவனத்தின் இந்த அபார வளர்ச்சிக்குக் காரணம் இந்நிறுவனம் தமிழ்நாட்டில் ஓசூர் மாவட்டத்தில் துவங்கிய ஆலை தான். தற்போது இந்த ஆலையில் மொத்தம் 4.2 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு ஆண்டிற்குத் தயாரிக்க முடியும். இந்நிலையில் இந்நிறுவனம் தனது 3வது ஆலையைக் கட்டமைக்க முடிவு செய்துள்ளது. இது தயாரானால் அந்த ஆலையில் 10 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்க முடியும் அத்துடன் தற்போது உள்ள 4.2 லட்சம் ஆலையையும் சேர்த்து மொத்தம் மாதம் 14.2 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அடுத்த 2-3 ஆண்டுகளில் ஏத்தர் நிறுவனம் தனது தயாரிப்புகளை விரிவுபடுத்தவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. உள்நாட்டில் தனது விற்பனையை அதிகரிக்க 250 நகரங்களில் 350 அனுபவ மையங்களைத் திறக்க முடிவு செய்துள்ளனர். மேலும் ஏத்தர் கிரிட் சார்ஜிங் மையங்களை 1400 இடங்களில் செயல்பாட்டிற்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதையெல்லாம் அடுத்த நிதியாண்டில் செய்து முடிக்க முடிவு செய்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஏத்தர் #ather energy
English summary
Ather electric scooter sales record in Jan 2023 marked 1 lakh production
Story first published: Thursday, February 2, 2023, 9:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X