10 லட்சமாவது கேடிஎம் பைக்கை தயாரித்து சாதனை படைத்த பஜாஜ்! அடுத்து வரப்போறது தான் செம ட்விஸ்ட்!

கேடிஎம் பிராண்டில் 10 லட்சமாவது பைக்கை தயாரித்து பஜாஜ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இது மட்டுமல்ல இந்நிறுவனம் கேடிஎம் பிராண்டில் எலெக்ட்ரிக் பைக்குகளையும் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

சர்வதேச அளவில் மிக முக்கியமான பைக் பிராண்ட் நிறுவனம் கேடிஎம். இந்நிறுவனம் இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. பஜாஜ் நிறுவனத்திற்குச் சொந்தமான மகாராஷ்டிரா மாநிலத்தின் சக்கன் ஆலையில் கேடிஎம் பைக் தயாரிக்கப்படுகிறது. இதற்காக இந்த இரு நிறுவனங்களிடையே கடந்த 2008ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2012ம் ஆண்டு தனது முதல் கேடிஎம் பைக் ஆலையில் தயாரானது.

10 லட்சமாவது கேடிஎம் பைக்கை தயாரித்து சாதனை படைத்த பஜாஜ்! அடுத்து வரப்போறது தான் செம ட்விஸ்ட்!

முதல் பைக்காக கேடிஎம் 200 டியூக் பைக் தயாரானது தற்போது 10 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் கேடிஎம் நிறுவனத்தின் 125 -373 சிசி லைன் அப்களுக்கு உலகளவில் இந்தியாவைத்தான் அந்நிறுவனம் ஹப்பாக வைத்துள்ளது. தற்போது 10 ஆண்டுகளில் கேடிஎம் நிறுவனம் பஜாஜ் ஆலையில் தனது 10 லட்சமாவது மைக்கை தயாரித்து புதிய மைல் கல்லைப் படைத்துள்ளது.

கேடிஎம் நிறுவனத்தின் 10 லட்சமாவது பைக்குடன் பஜாஜ் நிறுவனத்தின் சிஇஓ ராஜீவ் பஜாஜ், பையரர் மொபிலிட்டி ஏஜி நிறுவனத்தின் சிஇஓ ஸ்டிஃபன் பையரர், கிஸ்கா ஜிஎம்பிஎச் நிறுவனத்தின் சேர்மன் கெரால்டு கிஸ்கா ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கேடிஎம் பிராண்டில் 10 லட்சமாவது பைக்கை பஜாஜ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த 10 லட்சம் என்பது முதல் 5 லட்சம் தயாரிக்கத் தேவையான நேரத்தில் பாதியை விடக் குறைவான நேரத்தில் இரண்டாம் 5 லட்சம் பைக் தயாராகிறது.

இதற்கு காரணம் மக்கள் சமீபகாலமாக கேடிஎம் பைக்குகளை அதிகம் வாங்க துவங்கிவிட்டனர். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் இந்த பைக் மீது மோகம் அதிகமாகியுள்ளது. இது குறித்து பஜாஜ் நிறுவனத்தின் சிஇஓ ராஜீவ் பஜாஜ் கூறும் போது : "மோட்டார் சைக்கிள் தான் எங்கள் பலம் கேடிஎம்மின் 10 லட்சமாவது பைக்கை பொருத்தவரை 2007 இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இன்று உலகம் முழுவதும் இங்கிருந்து பைக்குளை தயாரித்து விற்பனை செய்கிறோம். இந்த 15 ஆண்டுகளில் நாம் வெற்றியை மட்டும் பெறவில்லை. எங்கள் உறவையும் மேம்படுத்தியுள்ளோம்" எனக் கூறினார்.

இது குறித்து பைரயர் மொபிலிட்டி ஏஜி நிறுவனத்தின் சிஇஓ ஸ்டீஃபன் பைரயர் கூறும் போது: "எங்கள் சர்வதேச அளவிலான ஒப்பந்தம் எங்களைச் சரியான பார்ட்னரை தேர்வு செய்ய வைத்துள்ளார். நாங்கள் தொடர்ந்து புதுமையையும் எங்கள் பிராண்டின் வலிமையையும் வளர்ந்து வருகிறது. எங்கள் பார்னர்ஷிப் எதிர்காலத்திற்கான பிரகாசமாக ஒளியைக் காட்டுகிறது. எங்கள் பார்ட்னர் ஷிப்பை அடுத்தது எலெக்ட்ரிக் பிரிவிலும் தொடரவுள்ளோம். அதிலும் எங்களுக்கான சிறப்பான இடம் கிடைக்கும்" எனக் கூறினார்.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm #bajaj auto
English summary
Bajaj rolls out 10 lakhth ktm motorcycle in their plant
Story first published: Friday, January 20, 2023, 17:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X