வீலிங், சேஸிங்னு எதுவுமே பண்ண வேண்டாம்... இத ஓட்டிட்டு போனாலே உங்கள வச்ச கண்ணு வாங்காம பாப்பாங்க!

பென்டா நிறுவனம் அதன் அட்டகாசமான மோட்டார்சைக்கிளான டார்க்ஃப்ளாக் (Benda Darkflag)-கை ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தியது. இந்த பைக்கை வெகு விரைவில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் முதல் ஏர் சஸ்பென்ஷன் வசதிக் கொண்ட மோட்டார்சைக்கிளாக வெகு விரைவில் பென்டா நிறுவனத்தின் டார்க் ஃப்ளாக் (Benda Darkflag) விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பென்டா நிறுவனம் தனது இந்திய வருகையை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அதன் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியது. அதில், ஒன்றே பென்டா நிறுவனத்தின் டார்க் ஃப்ளாக் ஆகும்.

பென்டா

பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த பைக்

பலரின் கவனத்தை ஈர்த்த இருசக்கர வாகன மாடல்களிலும் இதுவும் ஒன்று என கூறலாம். மிகவும் அழகான தோற்றம், மனம் கவரும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றைத் தாங்கிய வாகனமாக இது காட்சிப்படுத்தப்பட்டது. இந்த வாகனத்தையே நிறுவனம் விரைவில் இந்தியா இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆதிஸ்வர் ஆட்டோ குழுமத்தின் வாயிலாக நிறுவனம் அதன் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

அட்டகாசமான க்ரூஸர் பைக்

இந்த நிறுவனத்தின் வாயிலாகவே பன்னாட்டு வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் டூ-வீலர்களை நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். பெனெல்லி, கீவே, மோட்டோ மோரினி மற்றும் ஜோன்டஸ் ஆகிய நிறுவனங்களே ஆதிஸ்வர் ஆட்டோ உடன் இணைந்து தங்களது டூ-வீலர்களை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். பென்டாவின் டார்க் ஃப்ளாக் ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த மோட்டார்சைக்கிளாகும். இது ஓர் க்ரூஸர் பைக் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பென்டா

கட்டுமஸ்தான தோற்றம்

பைக்கின் முன் பக்கத்தில் அதிக கவர்ச்சியான தோற்றத்திற்காக எல்இடி டிஆர்எல்களும், கட்டுமஸ்தான பாடி பேனல்கள் பக்கவாட்டிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இவையே இதுவரை இந்தியாவில் விற்பனைக்கு வராத ஓர் மாடலாக பென்டா டார்க் ஃப்ளாகை காட்சியளிக்கச் செய்கின்றது. இத்துடன், மல்டி ஸ்போக்குகள் கொண்ட கருப்பு நிற அலாய் வீல்கள், தாழ்வாக நிலை நிறுத்தப்பட்ட இருக்கைகள் உள்ளிட்டவையும் இந்த பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன.

இந்தியாவின் முதல் ஏர் சஸ்பென்ஷன் பைக்

மேலும், நாம் ஏற்கனவே கூறியதைப் போல் பைக்கின் ஏர் சஸ்பென்ஷன் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. பைக்கின் பின் பக்கத்திலேயே அது பயன்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டில் விற்பனையில் இருக்கும் வேறு எந்த பைக்கிலும் இந்த வகை சஸ்பென்ஷனை நம்மால் காண முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், டேங்கின்மீது ஓர் லைட் வழங்கப்பட்டிருக்கும். இது சஸ்பென்ஷனில் உள்ள பிரஷ்ஷரின் அளவைக் காண்பிக்கும்.

பென்டா

ரைடிங் மோட் விபரம்

இத்துடன், டூர் மற்றும் ஸ்போர்ட் என இரு விதமான மோட்களும் இதில் வழங்கப்பட்டு உள்ளன. இது எஞ்ஜின் பவர் அவுட் புட்டையும், சஸ்பென்ஷனையும் அட்ஜெஸ்ட் செய்யும் என்பது குறிப்பிடத்தகுந்தது. டூர் மோடில் சஸ்பென்ஷன் லோவாகவும், ஸ்போர்ட் மோடில் சஸ்பென்ஷன் சற்று உயர்ந்து இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த இரு மோடும் அலாதியான பயண அனுபவத்தை வழங்கக் கூடியவை ஆகும்.

எஞ்ஜின் விபரம்

இத்தகைய அட்டகாசமான அம்சம் கொண்ட பைக்கையே பென்டா விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த மோட்டார்சைக்கிளில் 496 சிசி திறன் கொண்ட வி4 எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 53.6 பிஎஸ் பவரையும், 42 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த பைக்கில் டெயில் லைட்டுகள் பில்லியன் ரைடருக்கான இருக்கைக்குக் கீழே அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இதன் எக்சாஸ்ட் சிஸ்டம் இதுவரை எந்த பைக்கிலும் இல்லாத சூப்பரான ஸ்டைலில் உள்ளது. இதனை பிரத்யேகமான ஓர் கவர் கொண்ட பென்டா போர்த்தி இருக்கின்றது. இந்த யுக்தியே எக்சாஸ்டிற்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றது. இவற்றுடன் சேர்த்து பென்டா டார்க் ஃப்ளாக் பைக்கில் சிங்கிள்-பாட் அனலாக், சிறிய டிஜிட்டல் திரை உடன் வழங்கப்பட்டு உள்ளது. இதுவே இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராக வேலை செய்யும்.

Most Read Articles
English summary
Benda darkflag launch soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X