இவ்ளோ கம்மியான விலைக்கு இப்படி ஒரு ஸ்கூட்டரா! ஹோண்டா ஆக்டிவாவின் ஆட்டத்தை முடிக்க போகும் ஹீரோ தயாரிப்பு!

இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம், ஷூம் (Xoom) என்ற புதிய ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் டாப் வேரியண்ட்டின் விலை (Price), ஹோண்டா ஆக்டிவா ஹெச்-ஸ்மார்ட் (Honda Activa H-Smart) ஸ்கூட்டரை விட சுமார் 4 ஆயிரம் ரூபாய் குறைவாகும்.

மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட ஹீரோ ஷூம் ஸ்கூட்டரில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏராளமான வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. எனவே ஹீரோ ஷூம் ஸ்கூட்டர், விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இந்த புதிய ஸ்கூட்டர் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களை எல்லாம் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்வோம்.

இவ்ளோ கம்மியான விலைக்கு இப்படி ஒரு ஸ்கூட்டரா! ஹோண்டா ஆக்டிவாவின் ஆட்டத்தை முடிக்க போகும் ஹீரோ தயாரிப்பு!

அனுமார் வால் போல் நீளும் வசதிகள்!

ஹீரோ ஷூம் ஸ்கூட்டரில், செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக கார்னரிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள மிக முக்கியமான வசதிகளில் (Features) இதுவும் ஒன்று என சந்தேகத்திற்கிடமின்றி கூற முடியும். இதுதவிர ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதியும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரிலேயே எஸ்எம்எஸ் அலர்ட்கள் மற்றும் நோட்டிஃபிகேஷன்களை பார்த்து கொள்ளலாம். சூப்பர்ல!

இதுதவிர i3s ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்ப வசதியும் ஹீரோ ஷூம் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. எரிபொருளை சேமிப்பதற்கு இந்த தொழில்நுட்பம் உங்களுக்கு உதவி செய்யும். எனவே ஹீரோ ஷூம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நல்ல மைலேஜ் (Mileage) வழங்கும் எனவும் நீங்கள் எதிர்பார்க்கலாம். தற்போதைய பெட்ரோல் விலையை (Petrol Price) பார்க்கும்போது, இது போன்ற தொழில்நுட்ப வசதிகள் உள்ள ஸ்கூட்டர்தான் தினசரி பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

இவ்ளோ கம்மியான விலைக்கு இப்படி ஒரு ஸ்கூட்டரா! ஹோண்டா ஆக்டிவாவின் ஆட்டத்தை முடிக்க போகும் ஹீரோ தயாரிப்பு!

இது ஃபேமஸான இன்ஜின் ஆச்சே!

ஹீரோ ஷூம் ஸ்கூட்டரில் மிகவும் பிரபலமான 110.9 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் (Engine) பொருத்தப்பட்டுள்ளது. இதை ஏன் மிகவும் பிரபலமான இன்ஜின் என கூறுகிறோம் என்றால், ஹீரோ ப்ளஷர் ப்ளஸ் (Hero Pleasure Plus) மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் (Hero Maestro Edge) ஆகிய ஸ்கூட்டர்களிலும் இதே இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,250 ஆர்பிஎம்மில் 8 ஹெச்பி பவரையும், 5,750 ஆர்பிஎம்மில் 8.7 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

விலை இவ்ளோதானா!

ஹீரோ ஷூம் ஸ்கூட்டர் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அவை LX, VX மற்றும் ZX ஆகும். அவற்றின் விலை (Price) விபரம் பின்வருமாறு:

  • LX - 68,599 ரூபாய்.
  • VX - 71,799 ரூபாய்.
  • ZX - 76,699 ரூபாய்.

இவை அனைத்துமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஹோண்டா ஆக்டிவா ஹெச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரின் விலை 80,537 ரூபாய் ஆகும். இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான்.

ஹோண்டா ஆக்டிவா ஹெச்-ஸ்மார்ட் ஸ்கூட்டருடன் ஒப்பிடும்போது, ஹீரோ ஷூம் ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டின் விலை சுமார் 4 ஆயிரம் ரூபாய் குறைவு. இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. ஷூம் ஸ்கூட்டருக்கு ஹீரோ நிறுவனம் தற்போது அறிவித்திருப்பது எல்லாம் அறிமுக சலுகை விலையாகும். எனவே வரும் மாதங்களில் ஹீரோ நிறுவனம் இந்த புதிய ஸ்கூட்டரின் விலையை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

எத்தனை கலர்களில் கிடைக்கும்?

ஹீரோ ஷூம் ஸ்கூட்டரானது மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். அவை பின்வருமாறு:

  • மேட் ஆப்ரக்ஸ் ஆரஞ்ச்
  • பிளாக்
  • ஸ்போர்ட்ஸ் ரெட்
  • போல்ஸ்டர் ப்ளூ
  • பேர்ல் சில்வர் ஒயிட்

சிறப்பான வசதிகள் மற்றும் பிரபலமான இன்ஜின் ஆகியவை எல்லாம் வழங்கப்பட்டிருப்பதுடன் விலையும் சரியாக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால், ஹீரோ ஷூம் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hero xoom 110cc scooter here s everything you need to know
Story first published: Tuesday, January 31, 2023, 18:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X