ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!

ஒகாயா நிறுவனம் அதன் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி இந்தியாவில் வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் டீசர் படத்தையும் அது வெளியிட்டு உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் மின்வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒகாயா-வும் ஒன்று. இந்த நிறுவனம் இந்திய சந்தையில் ஐந்து விதமான எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அவை ஐந்துமே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும். ஃபாஸ்ட் எஃப்4, ஃபாஸ்ட் எஃப்2பி, ஃபாஸ்ட் எஃப்2டி, ஃப்ரீடம் மற்றும் கிளாசிக் பிளஸ் ஆகியவையே அவை ஆகும்.

ஒகாயா

இவற்றின் வரிசையிலேயே புதிதாக மற்றுமொரு புதுமுக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை ஒகாயா இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் புதிதாக இணைக்க திட்டமிட்டு இருப்பதும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே ஆகும். இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் ஓர் டீசர் படத்தை வெளியிட்டு இருக்கின்றது. டீசர் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒகாயா நிறுவனம், வருகின்ற 10 தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவலை நிறுவனம் அதன் சமூக வலைதள பக்க பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றது. மேலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபாஸ்ட் எஃப்3 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதையும் அது உறுதி செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக 1 லட்சத்து 13 ஆயிரத்து 999 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல முக்கிய விபரங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி வெளியீடு செய்யப்பட்டு உள்ளது.

ஒகாயா

வருகைக்கு முன்னரே அதன் மின் வாகன பிரியர்களை ஈர்க்கும் பொருட்டு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் மின் வாகன பிரியர்கள் அல்லாதோரையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது என்றே கூறலாம். காரணம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிக திறன் வெளிப்பாடாகும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 1200 வாட் மின் மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது. இது 2500 வாட் வரையில் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது.

இதுதவிர டூயல் பேட்டரி ஆப்ஷனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்படும். 3.5 kWh லித்தியம் அயன் எல்எஃப்பி பேட்டரிகளே வழங்கப்பட்டிருக்கும். பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஸ்விட்சிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்ற சிறப்பு வசதிகளைக் கொண்டதாகவே ஒகாயா ஃபாஸ்ட் எஃப்3 உருவாகி இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் ஃபுல் சார்ஜில் 140 கிமீ முதல் 160 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒகாயா

நிறுவனத்தின் மற்றுமொரு டூயல் பேட்டரி செட்-அப் கொண்ட வாகனமான ஃபாஸ்ட் எஃப்4 இதே ரேஞ்ஜைய வழங்குகின்றது. இதில், 72V 30Ah எல்எஃப்பி பேட்டரி பேக்கையே நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது. இதனுடன் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் இ-ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சம் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தவிர ஆன்டி தெஃப்ட் அலாரம், திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட அம்சங்களும் புதுமுக ஒகாயா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம் அதன் மின் வாகன தயாரிப்புகளின் பக்கம் மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பிற நிதி நிறுவனங்களுடன் இணைந்து தன்னுடைய எலெக்ட்ரிக் வாகனங்களைக் குறைவான விலையிலும், வட்டி விகிதத்திலும் அது விற்பனைச் செய்து வருகின்றது.

பஜாஜ் பின்சர்வ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் போன்ற முன்னணி வங்கிகளுடன் இதற்காக ஒகாயா கூட்டணியை வைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி இன்னும் சில வங்கிகளுடன் ஒகாயா இணைந்த வண்ணம் உள்ளது. தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எளிதில் நிதியுதவி கிடைக்கம் விதமாக இந்த இணைப்பை அது மேற்கொண்டு வருகின்றது. நிறுவனம் தற்போது விற்பனையகங்களின் எண்ணிக்கையை பல மடங்கு உயர்த்தியிருக்கின்றது.

2021 வரை 225க்கும் குறைவாக இருந்த விற்பனை மையங்களின் எண்ணிக்கை தற்போது 5500-க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை உயர்த்தும் பணியையும் ஒகாயா மேற்கொண்டு வருகின்றது. வாடிக்கையாளர்களைக் கவர புதுமுக வாகனங்கள் மட்டுமே போதாது, புதிய ஷோரூம்களும் தேவை என்பதை உணர்ந்து அது விற்பனையகங்களை விரிவாக்கம் செய்வதில் அதிக வேகத்தில் செயல்பட்டு வருகின்றது.

Most Read Articles
English summary
Okaya ev launches new electric scooter feb 10
Story first published: Saturday, February 4, 2023, 13:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X