எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு (Electric Scooters) வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை பொறுத்தவரையில், ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.

தற்போதைய நிலையில் ஓலா எஸ்1 ஏர் (Ola S1 Air), ஓலா எஸ்1 (Ola S1) மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) என 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 84,999 ரூபாய் ஆகவும், ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1,09,999 ரூபாய் ஆகவும், ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1,39,999 ரூபாய் ஆகவும் உள்ளது.

எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!

விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வருதா?

இந்த சூழலில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திடம் இருந்து முக்கியமான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான பாவிஷ் அகர்வால் (Bhavish Aggarwal) இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அவரது அறிவிப்பின்படி, வரும் பிப்ரவரி 9ம் தேதி மதியம் 2 மணிக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய தயாரிப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளது.

ஆனால் அது என்ன அறிவிப்பு? என்ன தயாரிப்பு? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் இந்த ட்வீட் உடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புகைப்படம் ஒன்றை பாவிஷ் அகர்வால் பதிவிட்டுள்ளதை வைத்து பார்க்கையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை வரும் பிப்ரவரி 9ம் தேதி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தால், அது மிகவும் விலை குறைவானதாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!

பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு நெருக்கடி!

தற்போதைய நிலையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான் மிகவும் விலை குறைவானதாக உள்ளது. இதைக்காட்டிலும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் மூலம் பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முயற்சி செய்யலாம்.

தற்போதைய நிலையில் ஒரு பிரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும், பெட்ரோல் ஸ்கூட்டரையும் ஒப்பீட்டிற்கு எடுத்து கொண்டால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைதான் அதிகமாக உள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் பிப்ரவரி 9ம் தேதி மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் களமிறக்கலாம். எனவே வரும் பிப்ரவரி 9ம் தேதி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் என்ன அறிவிப்பை வெளியிட போகிறது? என்ன தயாரிப்பை களத்தில் இறக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒரு கை பாக்க போறாங்க!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் பைக் (Electric Bike), எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வதன் மூலம் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையை ஒரு கை பார்த்து விடும் முடிவில் இருக்கிறது. முன்பெல்லாம் இந்திய சாலைகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காண்பது என்பதே அபூர்வமான ஒரு விஷயம்தான். ஆனால் தற்போது ஏராளமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சர்வ சாதாரணமாக காண முடிகிறது.

அதிலும் குறிப்பாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிகமாக தென்படுகின்றன. எனவே இந்தியாவின் எலெக்ட்ரிக் பைக் மற்றும் எலெக்ட்ரிக் கார் சந்தையிலும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கிறது என்பதே ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Most Read Articles
English summary
Ola electric new product launch february 9
Story first published: Thursday, February 2, 2023, 14:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X