சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல.. ரொம்ப கம்மி!

ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை ஃபர்ஸ்ட் சர்வீஸ் செய்த பில் வெளியாகி உள்ளது. இதன் வாயிலாக முதல் சர்வீசுக்கு ஆகிய செலவு எவ்வளவு என்பது தெரிய வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் லேட்டஸ்ட் வருகையாக சூப்பர் மீட்டியோர் 650 உள்ளது. இந்த பைக்கை கடந்த சில தினங்களுக்கு முன்னரே இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக ராயல் என்பீல்டு விற்பனைக்குக் கொண்டு வந்தது. அதேவேளையில், ஊடக பயன்பாட்டிற்காக, அதாவது, ரைடு ரிவியூ செய்வதற்காக இந்த பைக்கை அந்நிறுவனம் பல தினங்களுக்கு முன்னரில் இருந்து வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், ஆட்டோகார் இந்தியாவிடம் லாங்-டெர்ம் டெஸ்ட் டிரைவிற்காக ராயல் என்பீல்டு மீட்டியோர் 650 கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

மீட்டியோர் 650

ஃபர்ஸ்ட் சர்வீஸ்

இந்த பைக் அண்மையில் ஃப்ர்ஸ்ட் சர்வீசுக்காக விடப்பட்டு இருக்கின்றது. 1000 கிமீ பயத்தை எட்டியதன் அடிப்படையில் சூப்பர் மீட்டியோர் 650 சர்வீசுக்காக விடப்பட்டு இருக்கின்றது. இந்த சர்வீஸின்போது ஆன செலவு பற்றிய விபரமே தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கிற்கு முதல் சர்வீஸுக்கான பில் எவ்வளவு வந்தது என்கிற தகவல் ஆதாரத்துடன் வெளியாகி உள்ளது.

இவ்ளோ வேலை பாத்திருக்காங்களா!!

பல தரப்பட்ட முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் அந்த பைக்கிற்கு 2 ஆயிரத்து 720 ரூபாய் மட்டுமே செலவாகி இருக்கின்றது. இதே தொகையே நிறுவனத்தின் அதிகம் பிரீமியம் வசதிகள் நிறைந்த இன்டர்செப்டார் 650க்கும் ஆகும் என்பது குறிப்பிடத்தகுந்தது. முதல் சர்வீசின்கீழ் சர்வீஸ் மைய ஊழியர்கள் சூப்பர் மீட்டியோர் 650-இல் பல்வேறு பணிகளைச் செய்திருக்கின்றனர். ஆயிலை மாற்றுவது, ஆயில் ஃபில்டரை மாற்றுவது என பல முக்கிய பணிகளை அவர்கள் செய்திருக்கின்றனர்.

மீட்டியோர் 650

Source: autocarindia

3.1 லிட்டர் ஃப்ரெஷ்ஷான 10W-50 முழு சிந்தட்டிக் ஆயிலே எஞ்ஜினில் நிரப்பப்பட்டு இருக்கின்றது. இதை அடுத்து சர்வீஸ் மைய ஊழியர்கள் இருசக்கர வாகனத்தின் பிரேக் பேட் போன்றவற்றை சுத்தம் செய்திருக்கின்றனர். இதைத்தொடர்ந்து, ஏர் ஃபில்டர் மற்றும் செயின் ஆகியவற்றையும் அவர்கள் சுத்தம் செய்திருக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக செயினின் டென்ஷனையும் அவர்கள் மேம்படுத்தி இருக்கின்றனர். இதுபோன்ற பணிகளுக்கே சர்வீஸ் மையம் ரூ. 2,720 ஐ கட்டணமாக வசூலித்து இருக்கின்றது.

லேபர் சார்ஜ் பூஜ்ஜியம்

இவை அனைத்திற்குமான லேபர் சார்ஜ் பூஜ்ஜியம் ஆகும். முதல் சர்வீஸ் இலவசம் என்பதால் இதற்கான கட்டணம் வசூல் செய்யப்படவில்லை. அதேவேளையில், தனியாக ரூ. 118 வசூல் செய்யப்பட்டு உள்ளது. கன்ஸ்யூமபிள் சார்ஜ் எனும் பெயரில் இந்த கட்டணத்தை சர்வீஸ் மையம் வாங்கி இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை ஃபர்ஸ்ட் சர்வீஸ் செய்ததற்கு 2 ஆயிரத்து 836 ரூபாய் செலவாகி இருக்கின்றது.

மீட்டியோர் 650

648 சிசி மோட்டார்

இந்த தொகையை பலர் குறைவானது என்றும், ஒரு சிலர் இந்த கட்டணம் சற்று அதிகம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை லாங் டிரைவ் செல்வதற்கு ஏற்ற பைக்காகவே உருவாக்கி இருக்கின்றது. இந்த பைக்கில் 648 சிசி பேரல்லல் ட்வின் எஞ்ஜினே பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 46.7 பிஎச்பி பவரையும், 52.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

நவீன கால அம்சங்கள்

இதனுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மோட்டாரில் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர நவீன கால சிறப்பம்சங்கள் பல இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், டிரிப்பர் நேவிகேஷன் பாட், டிஜிட்டல் டிஸ்பிளே உடன் கூடிய அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட், யூஎஸ்டி ஃபோர்க் (முன் பக்கத்தில்), டூயல் ஷாக் அப்சார்பர்கள் (பின் பக்கம்), அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய லிவர்கள், அலாய் வீல்கள் மற்றும் எல்இடி லைட்டுகள் ஆகியவை சூப்பர் மீட்டியோர் 650 இல் வழங்கப்பட்டு உள்ளன.

விலை விபரம்

இத்துடன், சிறந்த பிரேக்கிங் வசதிக்காக இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்த பைக்கை மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அஸ்ட்ரல், இன்டர்ஸ்டெல்லர் மற்றும் செலஸ்டியல் ஆகிய தேர்வுகளிலேயே கிடைக்கும். இதற்கு ரூ. 3.48 லட்சம் தொடங்கி ரூ. 3.78 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Most Read Articles
English summary
Royal enfield super meteor 650 bike first service bill
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X