ஓலா, ஏத்தரின் கொட்டத்தை அடக்கத் துவங்கப்பட்டது சிம்பிள் எனர்ஜி ஆலை! தமிழகத்திற்குக் கிடைத்த மற்றொரு மகுடம்

சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது முதல் ஆலையைத் தமிழ்நாட்டில் துவங்கியுள்ளது. சுமார் ரூ100 முதலீட்டில் துவங்கப்பட்ட இந்த ஆலையால் 700 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. ஓலா, எத்தருக்கு போட்டியாக இந்நிறுவனம் விரைவில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களம் இறக்கவுள்ளது. ஓலா, ஏத்தரை தொடர்ந்து சிம்பிள் எனர்ஜி நிறுவனமும் தமிழகத்தில் தனது ஆலையை உருவாக்கியுள்ளது.

பெங்களூருவை மையமாகக் கொண்டு துவங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனம் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் இந்நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றைத் தயாரித்து பொதுமக்கள் பார்வைக்காக அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டரின் லுக் மற்றும் அம்சங்கள் எல்லாம் மக்களை அதிகம் கவர்ந்தது, ஏராளமானோர் இந்த ஸ்கூட்டரை விரும்பி வாங்கினர். இது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் என்பதால் அந்த ஸ்கூட்டரை பெரிய அளவில் தயாரிப்பதில் சிக்கல் இருந்தது.

ஓலா, ஏத்தரின் கொட்டத்தை அடக்கத் துவங்கப்பட்டது சிம்பிள் எனர்ஜி ஆலை! தமிழகத்திற்குக் கிடைத்த மற்றொரு மகுடம்

இந்நிலையில் இந்த ஸ்கூட்டருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் இந்நிறுவனத்திற்கு ரூ100 கோடிக்கும் மேல் முதலீடு கிடைத்தது. இதையடுத்து இந்நிறுவனம் தனக்கென ஒரு தயாரிப்பு ஆலையை உருவாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூலகிரி என்ற இடத்தில் தனக்கான ஆலையை இன்று அதைத் திறந்துள்ளது. தனது ஆலைக்கு அந்நிறுவனம் சிம்பிள் விஷன் 1.0 எனப் பெயரிட்டுள்ளது.

இந்த ஆலையில் விரைவில் முழு வீச்சில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் முயற்சியில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பிள் விஷன் 1.0 ஆலை என்பது ஆண்டிற்கு 10 லட்சம் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் அளவிற்குக் கொள்ளளவு கொண்டது. இந்த ஆலையில் அந்நிறுவனம் அசெம்பிளி லைன், எலெக்டரிக் மோட்டார் தயாரிப்பு, பேட்டரி தயாரிப்பு, டெஸ்டிங் மையங்கள் என எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அத்தனை துறைகளையும் வைத்துள்ளது.

இந்த ஆலையில் மொத்தம் 700 பேர் பணியாற்றவுள்ளனர். இந்த ஆலை திறந்தது குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ சுகாஸ் ராஜ் குமார் கூறும்போது : "4 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பயணத்தைத் துவங்கினோம். தற்போது தயாரிப்பு ஆலையையே நிறுவிவிட்டோம். சூலகிரியில் எங்கள் முதல் ஆலையை நிறுவியுள்ளோம் தொடர்ந்து இதை விரிவுபடுத்தும் திட்டம் எங்களிடம் இருக்கிறது. எங்களிடம் உள்ள சரியான, திறமையான நபர்கள் எங்களைச் சரியான பாதையில் வழி நடத்துகின்றனர். தற்போது பல ஆய்வு மேம்பாட்டிற்குப் பிறகு எங்கள் சிம்பிள் எனர்ஜி சார்ஜில் ஸ்கூட்டர்களை தயாரிக்கப்போகிறோம். " எனக் கூறினார்.

இந்த ஸ்கூட்டர் தயாராகி விற்பனைக்கு வந்தால் ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாகக் களம் இறங்கும். இந்த ஸ்கூட்டருக்கான ப்ரீ புக்கிங் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது. இந்த ஸ்கூட்டரின் புரோடெக்ஷன் ஸ்பெக் கடந்தாண்டு வெளியானது. பல்வேறு காரணங்களுக்கான இதன் தயாரிப்பு தள்ளி போய்க்கொண்டே இருந்தது. தற்போது தனது ஆலையை இந்நிறுவனம் திறந்துவிட்டது.

இந்த சிம்பிள் எனர்ஜி ஆலையில் சிறப்பான ஜெனரல் அசெம்பிளி லைன் உருவாக்கப்பட்டுள்ளது. இது போக இந்தியாவிலேயே முதன் முறையாகத் தயாரிப்பு ஆலையிலேயே எலெக்டரிக் மோட்டார் தயாரிப்பு லைனும் உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல பேட்டரி தயாரிப்பிற்கான தனி லைன் உருவாக்கப்பட்டுள்ளது. இது போக வாடிக்கையாளர் ஏற்பு லைன் மற்றும் இன்ஹவுஸஅ டெஸ்டிங் மையங்கள் ஆகியன உருவாக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Simple energy inaugurated its first plant in Tamilnadu production starts soon
Story first published: Friday, January 20, 2023, 19:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X