2கே கிட்டிகளை குறி வைக்கும் யமஹா! ஆர்எக்ஸ் 100 பைக்கை மீண்டும் களத்தில் இறக்கி பெரிய சம்பவத்தைப் பண்ண போறாங்க

யமஹா நிறுவனம் தனது ஆர்எக்ஸ் 100 பைக்கை மீண்டும் களம் இறக்கப்போவதாக உறுதி செய்துள்ளது. இந்த பைக் எப்பொழுது மார்கெட்டிற்கு வருகிறது. பழைய மாடல் பைக்கே வருகிறதா அல்லது மாற்றம் இருக்கிறதா? எந்த இன்ஜின் பொருத்தப்படுகிறது என்ன விலையில் வருகிறது உள்ளிட்ட விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

யமஹா ஆர்எக்ஸ் 100 இது வெறும் வார்த்தையில்லை, இது பல பைக் விரும்பிகளின் நாடி துடிப்பு என்றே சொல்ல வேண்டும். 2000வது ஆண்டிற்கு முன்னர் வரை விற்பனையிலிருந்த இந்தபைக்கின் இன்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த பைக்கை இன்றும் பத்திரமாக வைத்திருந்து பராமரித்துப் பயன்படுத்தி வரும் பலரையும் பார்க்க முடியும். இந்த பைக் ரோட்டில் சென்றாலே இன்று எல்லோரது கண்களும் இந்த பைக்கை பார்க்கத் திரும்பும்.

2கே கிட்டிகளை குறி வைக்கும் யமஹா! ஆர்எக்ஸ் 100 பைக்கை மீண்டும் களத்தில் இறக்கி பெரிய சம்பவத்தைப் பண்ண போறாங்க

இதற்கு இந்த பைக்கின் இன்ஜினிலிருந்து வரும் முக்கியமான சத்தமும் ஒன்று. தற்போது இந்த பைக்கை யமஹா நிறுவனம் தயாரிப்பதில்லை. முற்றிலும் நிறுத்திவிட்டது. மக்களிடம் இவ்வளவு வரவேற்பு இருந்தும் இந்த பைக்கை யமஹா நிறுவனம் நிறுத்தியதற்கு முக்கியமான காரணம் இதன் இன்ஜின்தான். இந்த பைக் ஒரு 2 ஸ்டோக் இன்ஜின் வகையைச் சேர்ந்தது.

இன்று இந்தியாவில் 4 ஸ்டோக் இன்ஜின் மற்றும் மாசுக் கட்டுப்பாடு குறித்துப் பல சட்டங்கள் இருப்பதால் அதே பைக்கை தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வர முடியாது. அதனால் யமஹா நிறுவனத்தின் இந்த ஆர்எக்ஸ் 100 பைக்குகளை யாராவது வைத்திருந்தால் அவர்களுக்கு நல்ல மவுசு இருக்கிறது.இந்த பைக்கை பலர் விரும்பி செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் வாங்கி வருகின்றனர்.

இந்த பைக்கை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனப் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவ்வளவு பெரிய மோகம் இந்த ஆர்எக்ஸ்100 என்ற பெயரில் இருப்பதால் யமஹா வேறு பைக்கை இந்த பெயரில் வெளியிடும் என்று கூட எதிர்பார்த்தனர். அதுவும் வெளியிடவில்லை. இந்நிலையில் யமஹா இந்தியாவின் தலைவர் இஷ்ஷின் சிஹானா என்பவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும் போது யமஹா நிறுவனம் வரும் காலத்தில் ஆர்எக்ஸ் 100 பைக்கையே வெளியிடும் அதனால் தான் அந்த பெயரை வேறு பைக்குகளுக்கு பயன்படுத்தாமல் இருக்கிறது எனக் கூறினார்.

இதன் மூலம் யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் மீண்டும் மார்கெட்டிற்கு வருது உறுதியாகியுள்ளது. யமஹா நிறுவனம் பழைய ஆர்எக்ஸ் 100 வடிவமைப்பில் அதே பைக்கை இந்தியாவில் களம் இறக்கவுள்ளது. ஆனால் இன்ஜின் மட்டும் பழைய 2 ஸ்டோக் இன்ஜின் இல்லாமல் யமஹா நிறுவனத்திடம் ஏற்கனவே உள்ள இன்ஜினை பயன்படுத்தி இந்த பைக்கை வடிவமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யமஹா நிறுவனத்திடம் ஏற்கனவே 125சிசி, 150 சிசி, மற்றும் 250 சிசி பைக் இன்ஜின்கள் இருக்கிறது. இதில் யமஹா நிறுவனம் 150 அல்லது 125 சிசி இன்ஜினை இதில் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் எப்பொழுது தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என்ற அதிகாரப்பூவர் தகவல்கள் வெளியாகவில்லை ஆனால் நமக்குக் கசிந்த தகவலின்படி இதற்காக மக்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.

இந்த பைக்கை யமஹா நிறுவனம் 2025ம் ஆண்டு இறுதி அல்லது 2026ம் ஆண்டில் தான் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பொழுது தான் யமஹா நிறுவனம் மார்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டிய சூழ்நிலை இருப்பதால் இந்த ஆர்எக்ஸ் 100 பைக்கை மூலதனமாக வைத்து யமஹா நிறுவனத்தை மார்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து நிலை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த பைக் விற்பனைக்கு வந்தால் பஜாஜ், டிவிஎஸ் மற்றும் ஹோண்டா நிறுவனங்களின் பல பைக்குகளுக்க போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பைக்கை குறைவான விலையில் தயாரித்து அதிகமாக மக்களைக் கவரவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் இந்த பைக் களம் இறங்கும் போது மற்ற பல நிறுவனங்களின் விற்பனையை இந்த பைக் பாதிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த பைக் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha RX 100 relaunch confirmed in India soon know the price and features
Story first published: Monday, January 23, 2023, 17:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X