ரூ.53,000ல் புதிய பவர்ஃபுல் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

By Saravana

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலக்ட்ரிக் இருச்சக்கர வாகன பிரிவாக செயல்படும் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் சக்திவாய்ந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. போட்டான் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களை கவரும் பல விஷயங்களை கொண்டுள்ளது.

அனைத்து பெருநகரங்களிலும் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும் என ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் தகவல்களை காணலாம்.

மின் மோட்டார்

மின் மோட்டார்

புதிய ஹீரோ போட்டான் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1,500W BLDC மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. VRLA33 AH/48V பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

எகானாமி மற்றும் பவர் என்ற இருவித டிரைவிங் ஆப்ஷன்களில் ஓட்டலாம். எகானமி ஆப்ஷனில் ஓட்டும்போது ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 80 கிமீ தூரம் வரை செல்லாம். பவர் ஆப்ஷனில் இயக்கும்போது 50 கிமீ தூரம் வரை செல்லாம். மணிக்கு 45 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த சக்திவாய்ந்த ஸ்கூட்டரின் முன்புறத்தில் டிஸ்க் பிரேக், டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஹை டார்க் கன்ட்ரோலர் தொழில்நுட்பம், ஆன்ட்டி தெஃப்ட் அலாரம் போன்ற வசதிகள் கொண்டது. இதுதவிர, அதிக உறுதித்தன்மை வாய்ந்த ஸ்டீல் சேஸீ பொருத்தப்பட்டுள்ளது.

விலை

விலை

மஹாராஷ்டிராவில் ரூ.52,790 விலையில் புதிய ஹீரோ போட்டான் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிக சக்திவாய்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
India's largest two wheeler manufacturer Hero MotoCorp. has its electric vehicle division called Hero Electric. They have launched a new and trendy electric scooter. Hero Electric has christened its new electric scooter as the 'Photon'.
Story first published: Thursday, August 14, 2014, 11:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X