நூற்றாண்டை தாண்டி மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தியில் கொடி கட்டி பறந்து வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய அத்தியாயத்தில் காலடி பதிக்கும் விதத்தில் இந்த இன்டர்செப்டார் 650 மாடலை உருவாக்கி இருக்கிறது. யல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளில் 648சிசி இரட்டை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஏர்- ஆயில் கூல்டு சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் 7,250ஆர்பிஎம் என்ற எஞ்சின் சுழல் வேகத்தில் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 5,250 ஆர்பிஎம் என்ற எஞ்சின் சுழல் வேகத்தில் 52 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.