Tap to Read ➤

இந்த கார்களை அதன் ஸ்டைலான டேஷ்போர்டுக்காகவே வாங்கலாம்!

Jan 07, 2023
Sathish Kumar
2022ல் மட்டும் வந்தவை
2022ல் அட்டகாசமான டேஷ்போர்டு உடன் விற்பனைக்கு வந்த கார்களின் லிஸ்டையே இந்த ஸ்டோரியில் பார்க்க உள்ளோம்.
மஹிந்திரா எக்ஸ்யூவி 700
2022ல் மிகவும் ஸ்டைலான டேஷ்போர்டு உடன் விற்பனைக்கு வந்த கார் மாடலில் எக்ஸ்யூவி 700-ம் ஒன்று. இக்-காருக்கு இந்தியாவில் வரவேற்பு மிக அமோகம்.
டேஷ்போர்டில் இருக்கும் சிறப்பம்சம்
பென்ஸ் காரில் இடம் பெற்றிருப்பதைபோல் ட்வின் திரை, உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் வழங்கப்பட்டு உள்ளது.
ஹூண்டாய் டக்சன்
இந்தியாவின் விலை உயர்ந்த பிரீமியம் தர எஸ்யூவி ரக கார் இது ஆகும். மிகவும் ஹேண்ட்சமான தோற்றத்திலான டேஷ்போர்டு இதில் உள்ளது.
டேஷ்போர்டின் சிறப்பு
வண்ணம், தொடுதல் உணர்வு மற்றும் லுக் என அனைத்திலும் வேற லெவல் டேஷ்போர்டாக இது இருக்கின்றது. ஏசி வெண்ட் இருப்பதே தெரியாது என்பது இதன் சுவாரஷ்யம்.
ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ்
அழகான கார் தயாரிப்பிற்கு பெயர்போனதே ஃபோக்ஸ்வேகன். இதற்கு சான்றே விர்சுஸ். இக்காரின் டேஷ்போர்டு கருப்பு-சிவப்பு தீமில் அட்டகாசமாக காட்சியளிக்கும்.
டேஷ்போர்டின் ஸ்பெஷல்
வெளிப்புறத்தில் தெரியாத இன்டெக்ரேடட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான பெரிய திரை, எக்கசக்க கன்ட்ரோல்கள் என பல டேஷ்போர்டில் வழங்கப்பட்டிருக்கும்.
சிட்ரோன் சி5 ஏர்கிராஸ்
நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக விலை உயர்ந்த பிரீமியம் தர எஸ்யூவி இது. இதன் விலை ரூ. 36.67 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் விலை).
டேஷ்போர்டின் சிறப்புகள்
முழுக்க கருப்பு நிறத்தால் சி5 ஏர்கிராஸின் டேஷ்போர்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே லெதர் இன்செர்டுகளும் கவர்ச்சிக்காக சேர்க்கப்பட்டிருக்கும்.
எம்ஜி அஸ்டர்
இதன் டேஷ்போர்டு அழகு சேர்க்கும் விதமாக சங்கிரியா சிவப்பு நிறம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. லெதரும் கவர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
டேஷ்போர்டின் சிறப்பு
இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன், சிறிய திரை ஒன்று டேஷ்போர்டில் வழங்கப்பட்டு உள்ளது. சிறிய திரை இமோஜி போல் எமோஷன்களை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.