Mohan Krishnamoorthy May 02, 2024
புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு?
3எக்ஸ்.ஓ
(3XO), மஹிந்திராவின் புதிய மாடர்ன் எஸ்யூவி கார்
மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் நெக்ஸ்ட் ஜென்ரேஷன் மாடல்
எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் ஏ.எக்ஸ்7 எல் ஆட்டோமேட்டிக் வேரியண்டை நாங்கள் ஓட்டி பார்த்தோம்
1.2 லிட்டர் டிஜிடிஐ டர்போ-பெட்ரோல் என்ஜினை கொண்டிருந்தது
ஜிப், ஜாப் & ஸூம் என 3 விதமான டிரைவிங் மோட்கள் காரில் இருந்தன
டிரைவிங் மோட்-ஐ மாற்றும்போது காரின் த்ரோட்டல் பெடல் & ஸ்டேரிங் சக்கரத்தின் விரைப்பு மாற்றமடைகிறது
ஸூம் மோடில் காரின் எடை அதிகரித்த உணர்வு கிடைப்பதால், கண்ட்ரோல் செய்வது எளிதாகிறது
ஸூம் மோடில் அதிவேகமாக பயணித்தாலும் சாலையில் பாதையை மாற்றுவது எளிதாக உள்ளது
அதிவேகத்தில் ஓட்டினாலும் கார் எந்தவொரு அதிர்வுகளும் இன்றி சீரான வேகத்தில் செல்கிறது
காரின் 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளதால் காரை எளிதாக நிறுத்த முடிகிறது
சஸ்பென்ஷன் செட்-அப் சாலையில் உள்ள பள்ளம், மேடுகளை எளிதாக கையாள்கிறது
உடனடியாக காரை திருப்பும்போது சில தடுமாற்றங்களை நாங்கள் உணர்ந்தோம்