Sathish Kumar       Apr 30, 2024

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ அறிமுகம்... விலை மற்றும் சிறப்புகளின் விபரம்!

டாடா நெக்ஸான்-க்கு போட்டியாக எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மாடலின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் இதுவாகும்.

ரூ. 7.49 லட்சம் - ரூ. 15.49 லட்சம் விலை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இரண்டு விதமான பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் மோட்டார் ஆப்ஷன் இதில் வழங்கப்படுகின்றது.

பாதுகாப்பான ரைடு அனுபவத்திற்காக லெவல் 2 அடாஸ் இதில் வழங்கப்பட்டுள்ளது.

6 ஏர் பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் 4 வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஒயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள் இந்த காரை அலங்கரிக்கும் வகையில் உள்ளன.

இந்த காருக்கான புக்கிங் பணிகள் வரும் மே 15 ஆம் தேதி தொடங்க இருக்கின்றது.

டெலிவரி பணிகள் மே 26இல் தொடங்கப்படும்.