Mohan Krishnamoorthy May 15, 2024
மஹிந்திரா காரின் தரமான உடலமைப்பால் உயிர்பிழைத்த தம்பதி!!
குமார் என்கிற மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் ஓனர் அவரது மனைவி உடன் விபத்தில் சிக்கி உள்ளார்
விபத்தில் கார் தலைக்கீழாக குப்புற கவிழ்ந்த போதிலும் பயணிகளுக்கு பெரியதாக காயமில்லை
குமாரின் கைகளிலும், கால்களிலும் சிறிய கீறல்கள்; அவரது மனைவிக்கு முதுகுத்தண்டில் காயம்
எக்ஸ்யூவி300 காரை தரமாக உருவாக்கியதற்காக ஆனந்த் மஹிந்திராவுக்கு குமார் நன்றி தெரிவிப்பு
மஹிந்திரா எக்ஸ்யூவி300, க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 ஸ்டார்களை பெற்ற கார்
6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், கார்னர் பிரேக்கிங் கண்ட்ரோல் உள்ளது
காரை முன் & பின்பக்கமாக பார்க் செய்வதற்கு உதவியாக சென்சார்கள் உள்ளன
நியூ ஜென்ரேஷன் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் இந்த மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது