Tap to Read ➤

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்

Jan 07, 2023
Sathish Kumar
பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்
இது நிறுவனத்தின் ஏழாம் தலைமுறை 7 சீரிஸ் சொகுசு கார் மாடல் ஆகும்.
ரகம் மற்றும் வேரியண்ட் விபரம்
இது ஓர் லிமோசைன் ரக சொகுசு காராகும். 740ஐ எம் ஸ்போர்ட் எனும் வேரியண்ட் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
விலை
அறிமுகமாக ரூ. 1.70 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்
பவர்டிரெயின்
ஒற்றை எஞ்ஜின் தேர்வில் மட்டுமே 7 சீரிஸ் விற்பனைக்குக் கிடைக்கும். 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் தேர்விலேயே கிடைக்கும்.
டிரான்ஸ்மிஷன் மற்றும் மைல்டு ஹைபிரிட் அம்சம்
8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் 7 சீரிஸில் வழங்கப்பட்டிருக்கிறது.
உச்சபட்ச வேகம்
இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். அதேவேளையில் வெறும் 5.4 செகண்டுகளில் 0-100 கிமீ வேகத்தை இந்த கார் எட்டிவிடும்.
சிறப்பம்சங்கள்
15 வண்ண ஆம்பியன்ட் லைட் 4 ஜோன் கன்ட்ரோல் வசதி கொண்ட ஆட்டோமேட்டிக் ஏசி ஆர்ம்ரெஸ்ட், ஒயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
கூடுதல் பிளஸ்கள்
வெண்டிலேட் & மசாஜ் வசதிக் கொண்ட இருக்கைகள் சீட் ஹீட்டிங் அம்சம், லவுட் ஸ்பீக்கர்கள், பார்க் அசிஸ்டன்ட், தியேட்டர் ரக திரை, டிஜிட்டல் சாவி, பிஎம்டபிள்யூ லைவ் காக்பிட் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன
போட்டி கார் மாடல்கள்
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் (விலை ரூ. 1.65 கோடி) லெக்சஸ் எல்எஸ் 500எச் (விலை ரூ. 1.96 கோடி) ஆடி ஏ8எல் (விலை ரூ. 1.34)