Tap to Read ➤

2022 டூ-வீலர் விற்பனை: எந்தெந்த நிறுவனம் கெத்து காட்டி இருக்கு?

Jan 05, 2023
Sathish Kumar
பஜாஜ் ஆட்டோ
பஜாஜ் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் 2022 டிசம்பரில் ஒட்டுமொத்தமாக 2,47,024 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. இது 2021 டிசம்பரை காட்டிலும் 23 சதவீதம் குறைவான விற்பனை எண்ணிக்கை ஆகும்.
விற்பனை சரிவு
பஜாஜ் நிறுவனம் உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி என இரண்டிலும் சரிவைக் கண்டுள்ளது. உள்ளூர் சந்தையில் 2 சதவீதம் இழப்பையும், ஏற்றுமதியில் 36 சதவீத சரிவையும் நிறுவனம் சந்தித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
ஹீரோ மோட்டோகார்ப்:
ஒட்டுமொத்தமாக 2022 டிசம்பரில் ஹீரோ நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் 3,94,179 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. 2021 டிசம்பரை காட்டிலும் 0.15 சதவீதம் விற்பனை குறைவாகும்.
உள்ளூரில் விற்பனை அமோகம்
உள்ளூரில் சென்ற டிசம்பரில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கின்றது. அதேவேளையில் ஏற்றுமதி 37 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் விளைவாகவே 0.15 சதவீதம் விற்பனை சரிவை ஹீரோ சந்தித்து உள்ளது.
ஹோண்டா
ஹோண்டா நிறுவனம் 2022 டிசம்பரில் 11 சதவீதம் வரை விற்பனை வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.
விற்பன
ஒட்டுமொத்த நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் 2,50,171 யூனிட்டுகள் வரை விற்பனையாகி உள்ளன. இது டிசம்பர் 2021ஐக் காட்டிலும் 26,550 யூனிட்டுகள் அதிகம் ஆகும்
ராயல் என்பீல்டு
ராயல் என்பீல்டு 7.24 சதவீதம் விற்பனை சரிவை அது சந்தித்துள்ளது. அதேவேளையில், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியில் கணிசமான அளவு வளர்ச்சியை அது சந்தித்துள்ளது.
விற்பனை விபரம்
ஒட்டுமொத்தமாக 68,400 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. இதில், 59,821 யூனிட்டுகள் உள்நாட்டிலும், 8,579 யூனிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டவை. 2021 ஏற்றுமதியைக் காட்டிலும் 0.32 சதவீதம் அதிகம் ஆகும்.
சுஸுகி
2022 டிசம்பர் மிக அமோகமான மாதமாக சுஸுகிக்கு அமைந்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடு என இரண்டிலும் விற்பனை வளர்ச்சியையே அது சந்தித்துள்ளது.
விற்பனை விபரம்
ஒட்டுமொத்தமாக 63,912 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. இதில் உள்நாட்டில் 40,905 யூனிட்டுகளும், வெளிநாடுகளுக்கு 23,007 யூனிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
டிவிஎஸ்
2022 டிசம்பர் மாத விற்பனையில் லேசான முன்னேற்றத்தைச் சந்தித்துள்ளது. டிசம்பர் 2021ஐ காட்டிலும் 2022 டிசம்பரில் 9.95 சதவீதம் விற்பனை உயர்ந்துள்ளது. விற்பனை வளர்ச்சி உள்நாட்டு சந்தையில் மட்டுமே கிடைத்தது.
விற்பனை விபரம்
ஒட்டுமொத்தமாக 2.27 லட்சம் யூனிட் டிவிஎஸ் டூ-வீலர்கள் விற்பனையாகி உள்ளன. இதில் 1,61,369 யூனிட்டுகள் உள்ளூரிலும், 66,297 யூனிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டவை.