தவெக தலைவர் விஜய் கிட்ட கூட இல்லை.. ஆனால் ஆதவ் அர்ஜூனா வச்சிருக்காரு.. என்ன தெரியுமா?
தமிழக தேர்தல் முடிவுகள் இன்று சூடுபிடித்திருக்கின்றன. தமிழகத்தின் பழைமையான இரண்டு கட்சிகளை விட புதிதாக உருவெடுத்த, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தற்போதேய நிலவரப்படி முன்னிலையில் இருந்து வருகிறது. விஜய்க்கு அடுத்தபடியாக தவெக கட்சியில் அதிக செல்வாக்கு மிக்க நபர்களுள் ஒருவராக ஆதவ் அர்ஜூனா இருந்து வருகிறார்.
வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வரும் அவர் தற்போதைய நிலவரப்படி திமுகவின் கார்த்திக் மோகனை விட 3,420 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். தற்போது அவர் தொடர்பான தகவல்களை மக்கள் இணையத்தில் அதிகம் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் அவர் வைத்திருக்கும் வாகனங்கள் தொடர்பான தகவல் தற்போது கிடைத்திருக்கிறது.

கொளத்தூர் தொகுதியில் தமிழக முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் மற்றும் அவரை எதிரித்துப் போட்டியிட்டு முன்னிலையில் இருந்து வரும் தவெக-வின் வி.எஸ்.பாபு ஆகியோரிடம் எந்த வாகனங்களும் இல்லை என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது மக்களை ஆச்சரியமளிக்கச் செய்தது. ஆனால் ஆதவ் அர்ஜூனா தன்னிடம் ஒரு ஸ்போர்ட் சைக்கிள் உட்பட நான்கு வாகனங்கள் இருப்பதாக தன்னுடைய வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அவரிடம், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, மாருதி XL6 ஆகிய எம்பிவி கார்களும், ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்றும் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இது தவிர மேலே கூறியது போல ஒரு ஸ்போர்ட் சைக்கிளும் அவரிடம் உள்ளது. இந்த ஸ்போர்ட் சைக்கிளானது 63,332 ரூபாய் விலையைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தவெக தலைவரின் விஜய்யிடமும் ஒரு இருசக்கர வாகனம் இருக்கிறது. அதனை விட ஆதவ் அர்ஜூனாவின் ஸ்போர்ட் சைக்கிள் விலை உயர்ந்தது. தவெக தலைவர் விஜய் பல்வேறு சொகுசு கார்களுடன் தன்னிடம் டிவிஎஸ் XL மொபெட் பைக்கும் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார். அதன் விடை ரூ.44,000 ஆகும். அதனை விட விலை உயர்ந்த ஸ்போர்ட் சைக்கிளை ஆதவ் அர்ஜூனா வைத்திருக்கிறார்.
அவரிடம் உள்ள இன்னோவா கிரிஸ்டா காரானது 8 பேர் வரை அமர்ந்து செல்லக்கூடிய வகையிலான சீட்டிங் லேஅவுட்டைக் கொண்டது. அதில் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கார் ரூ.20 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அவரிடம் உள்ள மற்றொரு எம்பிவி மாடல் காராக மாருதி XL6, 6 பேர் அமரும் வகையிலான சீட்டிங் லேஅவுட்டைக் கொண்டது. இந்தக் காரானது ரூ.14 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. இத்துடன் மேலே கூறியது போல ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்றும் அவரிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வாகனங்களைத் தவிர்த்து தன்னிடம் ரூ.180.03 கோடி மதிப்புடைய சொத்துகளும், மனைவிடம் ரூ.162.14 கோடி மதிப்புடைய சொத்துக்களும் இருப்பதாக வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் அவருடைய பெயரில் இருக்கும் ரூ.17.49 கோடி மதிப்புடை சொத்துக்கள், மனைவியின் பெயரில் இருக்கும் ரூ.83 கோடி மதிப்புடைய சொத்துக்களும் அடக்கம். இதுதவிர இருவரும் பங்குச்சந்தையிலும் பல்வேறு பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், தங்கள் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் குறித்த முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையிலேயே ஆதவ் அர்ஜூனா குறித்த தகவல்களையும் இணையத்தில் அதிகளவில் தேடி வருகிறார்கள். தமிழக தேர்தல் களத்தில் ஆதவ் அர்ஜூனாவும் ஸ்டார் வேட்பாளராக அறியப்படுகிறார். தற்போதைய நிலவரப்படி அவர் முன்னிலையே வகித்து வருகிறார். வெற்றி பெறுவாரா இல்லையா என்பது ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் இன்று மாலை தெரியவரும்.


Click it and Unblock the Notifications