மகனின் லேட்டஸ்ட் டிஃபெண்டர் காரில் சுற்றிக் கொண்டிருக்கும் பிரபல நடிகர்! க்ளோஸ்-அப்பில் படம் எடுத்து வெளியீடு!
நடிகர் அமிதாப் பச்சன், தனது மகனான நடிகர் அபிஷேக் பச்சனின் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் காட்சித் தந்துள்ளார். மாடர்ன் டிஃபெண்டர் காரை அமிதாப் பச்சன் ஓட்டிச் சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றியும், இந்த நிகழ்வில் அமிதாப் பச்சன் பயன்படுத்திய டிஃபெண்டர் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பிக் B என அழைக்கப்படும் பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சன் பாலிவுட்டை தாண்டி, தமிழ் மக்களிடமும் நன்கு பரீட்சையமானவர். உங்களுக்கு தெரிந்த இந்திய நடிகர்களின் பெயர்கள் என்று வெளிநாட்டினரிடம் கேட்டால், அவர்கள் கூறும் பெயர்களில் நிச்சயமாக அமிதாப் பச்சனின் பெயரும் இருக்கும். அந்த அளவிற்கு உலகளவில் பிரபலமான இந்திய நடிகராக விளங்கும் அமிதாப் பச்சன் ஓர் கார் பிரியர் என்பதை பல தருணங்களில் பார்த்துள்ளோம்.

கடந்த பல வருடங்களில், பல்வேறு விதமான சொகுசு கார்களில் நடிகர் அமிதாப் பச்சனை பார்த்துள்ளோம். 1970களில் இருந்து தற்போதைய மாடர்ன் கார்கள் வரையில் என பல தனித்துவமான கார்களை ஓட்டிய மற்றும் பயணம் செய்த பெருமை அமிதாப் பச்சனுக்கு உள்ளது. எல்லா கார்களையும் ஓட்டி அலுத்துவிட்ட இவர் தனது மகன் நடிகர் அபிஷேக் பச்சனின் டிஃபெண்டர் காரில் தற்போது காட்சித் தந்துள்ளார்.
காரில் காட்சித் தந்தது மட்டுமின்றி, காரை ஓட்டி சென்றதே அவர்தான். மும்பையில் உள்ள ஓர் விடுதியில் இருந்து நடிகர் அபிஷேக் பச்சனுக்கு சொந்தமான டிஃபெண்டர் காரில் நடிகர் அமிதாப் பச்சன் வெளியே வரும் காட்சிகள் 'வைரல்பயானி' என்கிற பிரபலமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. காரை ஓட்டியப்படி வெளியே வந்த அமிதாப் பச்சன் அங்கு கூடியிருந்த ரசிகர்களை நோக்கி கை அசைத்தவாறு சென்றார்.

நடிகர் அபிஷேக் பச்சனின் பெயரில் RTO-இல் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட டிஃபெண்டர் கார் ஆனது டிஃபெண்டர் ஆக்டா ஆகும். பெட்ரா காப்பர் நிறத்தில் இருக்கும் இந்த டிஃபெண்டர் ஆக்டா காரின் மேற்கூரை மற்றும் பின்பக்க கதவு ஆனது நர்விக் பிளாக் என்கிற பிரத்யேகமான கருப்பு நிறத்தில் உள்ளது.
டிஃபெண்டர் ஆக்டா காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், தற்போதுவரையில் உருவாக்கப்பட்ட மிகவும் பவர்ஃபுல்லான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்களில் டிஃபெண்டர் ஆக்டா ஒன்றாகும். பொதுவாகவே, டிஃபெண்டர் கார்கள் என்றாலே முரட்டுத்தனமான தோற்றம் கொண்டவையாகவும், ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றவையாக இருக்கும். இந்த விஷயங்களில் டிஃபெண்டர் ஆக்டா ஆனது ஒருபடி மேலே உள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட டிஃபெண்டர் ஆக்டா ஆனது விற்பனையில் மெர்சிடிஸ்-பென்ஸ் G63 AMG என்கிற பிரபலமான ஆஃப்-ரோடு SUV காருக்கு போட்டியாக உள்ளது. இந்த காரில் BMW நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட 4.4 லிட்டர் ட்வின்-டர்போ V8 பெட்ரோல் மைல்ட்-ஹைப்ரிட் என்ஜின் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 0-இல் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை வெறும் 3.8 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய காரை அசராமல் 83 வயதில் நடிகர் அமிதாப் பச்சன் ஓட்டியுள்ளார். இவருக்கு வயது நிச்சயமாக ஒரு எண் மட்டுமே ஆகும். பார்க்க பயங்கரமாக இருக்கும் டிஃபெண்டர் ஆக்டா காரில் பயணம் அனுபவம் மிகவும் சூப்பராக இருக்கும். அந்த அளவிற்கு தரமான 6D டைனாமிக்ஸ் சஸ்பென்ஷன் செட்-அப் இந்த காரில் வழங்கப்படுகிறது.
அமிதாப் பச்சன் குடும்பத்தில் டிஃபெண்டர் ஆக்டா மட்டுமின்றி, டிஃபெண்டர் 110 மற்றும் இரு டிஃபெண்டர் 130 கார்களும் உள்ளன. இதில், டிஃபெண்டர் 130 ஆனது மிகவும் நீளமான டிஃபெண்டர் கார் ஆகும். இதனை இந்திய சாலைகளில் காண்பதே அரிதான ஒன்று. ஆனால், இதனை அமிதாப் பச்சன் குடும்பத்தினர் இரண்டு வைத்துள்ளனர். அதில், செடோனா சிவப்பு நிறத்திலான டிஃபெண்டர் 130 காரில் ஒருமுறை நடிகர் அமிதாப் பச்சன் வெளியே காட்சித்தந்து இருந்தார்.


Click it and Unblock the Notifications