சென்னைக்கு வந்தவரை கொஞ்ச நேரம் சும்மா விட மாட்றாங்களே! கூப்பிட்டு கொடுக்கப்பட்ட காரின் விலை எவ்வளவு தெரியுமா?

அஜித் குமார் (Ajith Kumar), இவருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு பிரபலமான கோலிவுட் நடிகர் (Kollywood Actor) ஆக இருந்து, தற்சமயம் கார் பந்தயங்களிலும் கலக்கிக் கொண்டிருப்பவர். கார் பந்தயங்களில் கலந்துக் கொள்ள ஆரம்பித்த பிறகு அஜித்குமாருக்கும், மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனத்திற்கும் இடையேயான பிணைப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் ஸ்பெயின் நாட்டில் மஹிந்திரா உருவாக்கிய ஃபார்முலா இ ஜென் 2 (Formula E Gen 2) என்கிற பந்தய காரை ரேஸ் டிராக்கில் அஜித் ஓட்டி பார்த்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். அப்போது, மஹிந்திராவின் ஃபார்முலா இ குழு உடன் கலந்துரையாடிய நடிகர் அஜித்குமார், தொழில்முறை பந்தய டிரைவரான நிக் டி விரிஸ் அவர்களிடம் சில நுட்பங்களையும் கேட்டு அறிந்துக் கொண்டார்.

actor ajithkumar gifted mahindra be6 formula e edition

அந்த சோதனை ஓட்டத்திற்கு பிறகு, அஜித்தை பாராட்டி மஹிந்திரா & மஹிந்திராவின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட எக்ஸ் (X) பதிவு அந்த சமயத்தில் வைரலானது. இவ்வாறு, அஜித் மற்றும் மஹிந்திரா நிறுவனத்திற்கு இடையேயான நெருக்கம் அதிகரித்துவரும் சூழலில், நடிகர் மற்றும் கார் பந்தய வீரர் அஜித்குமாருக்கு பிராண்ட்-நியூ மஹிந்திரா பிஇ 6 ஃபார்முலா இ எடிஷன் (BE 6 Formula E Edition) காரை பரிசளித்து மஹிந்திரா சிறப்பித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுவரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு சமீபத்தில் சென்னையை வந்தடைந்த நடிகர் அஜித்குமாரை சந்தித்து மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமொபைல் தொழிற்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு பிரிவின் தலைவர் ஆர் வேலுசாமி புதிய பிஇ 6 ஃபார்முலா இ எடிஷன் காரின் சாவியை வழங்கியுள்ளார்.

actor ajithkumar gifted mahindra be6 formula e edition

அஜித்குமாருக்கு டாங்கோ சிவப்பு (Tango Red) நிறத்தில் இந்த ஸ்பெஷல் எடிஷன் பிஇ 6 எலெக்ட்ரிக் கார் பரிசளிக்கப்பட்டுள்ளது. பிஇ 6 ஃபார்முலா இ எடிஷன் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மஹிந்திராவின் ஃபார்முலா இ ரேசிங் அனுபவத்தை பிரதிபலிக்கக் கூடியதாக உள்ளது.

இன்னும் சொல்லப்போனால், பந்தய எலெக்ட்ரிக் கார்களில் வழங்குவதை போன்று கஸ்டம் டீகால்கள், தனித்துவமான உட்புற ஹைலைட்கள் மற்றும் ரேசிங் கார்களுக்கே உண்டான கிராஃபிக்ஸ் உள்ளிட்டவற்றுடன் பிஇ 6 ஃபார்முலா இ எடிஷன் உருவாக்கப்படுகிறது. வழக்கமான மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் காருக்கும் இந்த ஸ்பெஷல் எடிஷனுக்கும் இடையேயான வித்தியாசங்களில் முக்கியமானது, இதில் புதிய புரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபார்முலா இ-பிராண்டட் இருக்கைகள் பொருத்தப்படுகின்றன.

அத்துடன் பந்தய எலெக்ட்ரிக் கார்களுக்கே உண்டான பம்பர்கள், பிரேக் காலிபர்கள், ஸ்பெஷல் லோகோ மற்றும் தனித்துவமான ஃபிளிப் கேப் உடன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச் உள்ளிட்டவையும் பிஇ 6 ஃபார்முலா இ எடிஷனில் வழங்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் எவரொருவராலும் இந்த ஸ்பெஷல் எடிஷன் பிஇ 6 எலெக்ட்ரிக் காரை வாங்க முடியும்.

பேக் எஃப்.இ2 (FE2) மற்றும் எஃப்.இ3 என இரு விதமான வேரியண்ட்களில் இந்த ஸ்பெஷல் எடிஷன் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) முறையே ரூ.23.69 லட்சம் மற்றும் ரூ.24.49 லட்சம் ஆக உள்ளது. இவை இரண்டிலுமே 79kWh பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் 683கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என மஹிந்திரா தெரிவித்தாலும், நிஜ உலகில் குறைந்தது 550கிமீ தொலைவிற்காவது பயணிக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் கார் பந்தயமான ஃபார்முலா இ -இல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட நடிகர் அஜித்குமார் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா என இருவருமே முயற்சிக்கின்றனர். ஆகையால் இவர்கள் இருவருக்கு இடையேயான பிணைப்பு அவர்களது உறவை இன்னும் பல ஆண்டுகளுக்கு கொண்டு செல்லலாம். இதற்கிடையில், அஜித்குமாரின் கேரேஜில் உள்ள மெக்லாரன் சென்னா, ஃபெராரி எஸ்எஃப்90 ஸ்ட்ராடேல் மற்றும் போர்ஷே 911 ஜிடி3 ஆர்.எஸ் போன்ற உலகளவில் பிரபலமான விலையுயர்ந்த கார்களுடன் புதிய மஹிந்திரா பிஇ 6 ஃபார்முலா இ எடிஷனும் இணைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 14, 2026, 10:59 [IST]
English summary
Actor and racer ajithkumar received as gift mahindra be6 formula e edition details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+