விஜய் சொல்லுற மாதிரி பைக்கே விற்பனையில் இல்லை! வேட்புமனுவில் எதுக்கு இப்படி பொய் சொல்லனும்?

நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் விரைவில் நடைபெறவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்ட பேரவை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்ததுதான் தற்சமயம் சமூக வலைத்தளங்களை திறந்தாலே எங்கு பார்த்தாலும் பேசுபொருளாக உள்ளது. குறிப்பாக, தன்னிடம் டிவிஎஸ் எக்ஸ்.எல் (TVS XL) பைக் உள்ளதாக விஜய் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டு இருப்பது பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் தன்னிடம் ரூ.7.52 கோடி மதிப்பிலான வாகனங்கள் உள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார். இதில், பி.எம்.டபிள்யூ 530 (BMW 530), டொயோட்டா லெக்ஸஸ் 350 (Toyota Lexus 350), டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire), பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7) உள்ளிட்ட சொகுசு கார்களுடன், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரும், டிவிஎஸ் எக்ஸ்.எல் பைக்கும் அடங்குகின்றன.

actor and tvk leader vijay owned tvs xl bike details

சென்னை பனையூரில் விஜய்யின் இல்லத்திற்கு வெளியே டிவிஎஸ் எக்ஸ்.எல் பைக் ஒன்று நிறுத்தப்பட்டு இருப்பதை பல செய்திகளிலும், வீடியோக்களிலும் பார்க்க முடியும். இது விஜய்யின் வீட்டில் வேலை செய்பவர்களில் யாரேனும் ஒருவரது பைக்காக இருக்கும் என நாம் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அது தனக்கு சொந்தமானது தான் என விஜய் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி, விஜய் இந்த டிவிஎஸ் எக்ஸ்.எல் பைக்கை கடந்த 2025ஆம் ஆண்டில் வாங்கியுள்ளார். அதன் மதிப்பாக அவர் குறிப்பிட்டு இருப்பது ரூ.67,400 ஆகும். மார்க்கெட்டில் தற்போது எக்ஸ்.எல்100 ஹெவி ட்யூட்டி (Heavy Duty), எக்ஸ்.எல்100 கம்ஃபர்ட் ஐ-டச் ஸ்டார்ட் (Comfort i-TOUCH Start), எக்ஸ்.எல்100 வின் எடிஷன் (Win Edition) என மூன்று விதமான வெர்சன்களில் எக்ஸ்.எல் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

actor and tvk leader vijay owned tvs xl bike details

இதில், எக்ஸ்.எல்100 ஹெவி ட்யூட்டி ஆனது அலாய் சக்கரங்கள், ஸ்போக் சக்கரங்கள் மற்றும் ஐ-டச் ஸ்டார்ட் என மூன்று விதமான ஆப்ஷன்களில் வெவ்வேறான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இவை எதுவும் இல்லாமல் விஜய் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டு இருப்பது டிவிஎஸ் எக்ஸ்.எல் சூப்பர் பைக்கின் பெயரை ஆகும்.

எக்ஸ்.எல் சூப்பர் பைக்கின் விற்பனை 2017ஆம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. அந்த சமயத்தில் அமலுக்குவர இருந்த பிஎஸ்4 (BS4) மாசு உமிழ்வு விதிமுறைக்கு இணக்கமாக அப்டேட் செய்ய முடியாமல் அதன் விற்பனையை டிவிஎஸ் மோட்டார் நிறுத்தியது. இந்த பைக்கை தான் கடந்த 2025ஆம் ஆண்டில் வாங்கியதாக விஜய் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

actor and tvk leader vijay owned tvs xl bike details

தனது எக்ஸ்.எல் பைக்கின் வாகன பதிவு எண்ணாக அவர் குறிப்பிட்ட எண்ணை வைத்து ஆராய்ந்து பார்த்ததில், உண்மையில் அது டிவிஎஸ் எக்ஸ்எல்100 ஹெவி ட்யூட்டி ஆகும். வாகனத்தின் உரிமையாளரின் பெயர் ஜோசப் விஜய் என்றே உள்ளதால், வேட்புமனுவில் பைக்கின் பெயரை தவறுதலாக குறிப்பிட்டுள்ளனர். காஞ்சிபுரம் ஆர்டிஓ (RTO)-இல் பதிவு செய்யப்பட்ட இந்த எக்ஸ்.எல்100 ஹெவி ட்யூட்டி பைக்கின் முதல் ஓனரே ஜோசப் விஜய் தான்.

டிவிஎஸ் எக்ஸ்.எல்100 ஹெவி ட்யூட்டி பைக்கை பற்றி கூற வேண்டுமென்றால், ஏற்கனவே கூறியதுபோல் இது அலாய் சக்கரங்கள், ஸ்போக் சக்கரங்கள் மற்றும் ஐ-டச் ஸ்டார்ட் என மூன்று விதமான ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த ஆப்ஷனில் இந்த பைக்கை விஜய் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. அதேபோல், இந்த விலை குறைவான எக்ஸ்.எல் பைக்கை யாருக்காக இவர் வாங்கியுள்ளார் என்பதும் தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் எக்ஸ்.எல்100 ஹெவி ட்யூட்டி ஆனது அதன் பெயருக்கு ஏற்ப கடினமான பணிகளை மேற்கொள்ளக்கூடிய 100சிசி டிவிஎஸ் பைக் ஆகும். ஆதலால், இவ்வளவு குறைந்த விலையிலான பைக்கை விஜய் போன்ற கோடிகளில் புரளும் நடிகர் வாங்கியுள்ளாரே என நாம் ஆச்சிரியப்பட்டாலும், விஜய் வாங்கும் அளவிற்கு எக்ஸ்.எல்100 பைக்கின் தரம் வேற லெவல் என்றே சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 31, 2026, 18:26 [IST]
English summary
Actor and tvk leader vijay owned tvs xl bike check all details here
மேலும்... #celebrity bikes #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X