80 வயதில் மஹிந்திராவின் லேட்டஸ்ட் காரை வாங்கிய பழம்பெரும் நடிகர்! மனைவி உடன் ஷோரூமில்!

மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் வேகமாக முன்னேற்றத்தை கண்டு வருகிறது. குறிப்பாக, 2024ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட BE 6 மற்றும் XEV 9e எலெக்ட்ரிக் கார்களின் அறிமுகத்திற்கு பிறகு மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதிலிலும் குறிப்பாக, XEV 9e எலெக்ட்ரிக் காரின் விலை குறைவான வெர்சனாக கடந்த 2025ஆம் ஆண்டில் XEV 9S அறிமுகம் செய்யப்பட்ட பின், சாதாரணமான மக்களில் இருந்து அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் XEV 9S எலெக்ட்ரிக் காரை வாங்கி வருகின்றனர். அந்த வகையில், பழம்பெரும் இந்திய நடிகர் கபீர் பேடி பிராண்ட்-நியூ மஹிந்திரா XEV 9S காரை வாங்கியுள்ளார்.

actor kabir bedi bought mahindra xev 9s electric car

மனைவி உடன் மஹிந்திரா ஷோரூமுக்கு சென்று நடிகர் கபீர் பேடி புத்தம் புதிய XEV 9S எலெக்ட்ரிக் காரை டெலிவிரி பெறுவதை மஹிந்திரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களுக்கான அதிகாரப்பூர்வ X தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. புதியதாக வாங்கிய கார் மட்டுமின்றி, நடிகர் கபீர் பேடி மஹிந்திரா ஷோரூமுக்கு வந்த காரும் நமது கவனத்தை ஈர்க்கிறது.

சில்வர் நிறத்திலான சாங்யாங் ரெக்ஸ்டன் என்கிற சீன காரில் XEV 9S காரை டெலிவிரி பெற நடிகர் கபீர் பேடி மனைவி உடன் வருகை தந்துள்ளார். இந்தியாவில் விற்பனையில் இல்லாத சாங்யாங் ரெக்ஸ்டன் கார் ஆனது முழுவதும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் முழு காராக இறக்குமதி செய்யப்பட்டு, புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்படுகிறது.

actor kabir bedi bought mahindra xev 9s electric car

சீனாவின் சாங்யாங் ரெக்ஸ்டன் காரை இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பணிகளை மஹிந்திரா நிறுவனம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மஹிந்திரா நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் இரு வேறு விதமான கார்களை சொந்தமாக்கி இருக்கும் 80 வயதான நடிகர் கபீர் பேடி ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவின் பழம்பெரும் சினிமா நடிகர்களுள் ஒருவர் ஆவார்.

1970களில் வெளிவந்த 'சண்டோகன்' என்கிற இந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமாகிய நடிகர் கபீர் பேடி 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சில ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், சில ஐரோப்பிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 80 வயதை கடந்த போதிலும் இன்னமும் நடித்துவரும் கபீர் பேடியின் நடிப்பில் அடுத்ததாக 'கோராகஜ்ஜா' என்கிற திரைப்படம் திரைக்குவர உள்ளது.

இதற்கிடையில் டெசர்ட் மிஸ்ட் என்கிற பாலைவன தூசியின் நிறத்தில் இவர் வாங்கியுள்ள மஹிந்திரா XEV 9S காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது 7 இருக்கைகளை கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி காராகும். இந்த காரின் எந்த வேரியண்ட்டை நடிகர் கபீர் பேடி தேர்வு செய்து வாங்கியுள்ளார் என்பது உறுதியாக தெரியாவிட்டாலும், அநேகமாக விலையுயர்ந்த டாப் வேரியண்ட்டை தான் வாங்கி இருப்பார்.

XEV 9S காரின் விலைமிக்க பேக் த்ரீ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.30.20 லட்சமாக உள்ளது. இந்த வேரியண்ட்டில் அளவில் பெரியதான 79kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 679கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது மஹிந்திரா நிறுவனம். இந்த வேரியண்ட்டில் வழங்கப்படும் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 282 பிஎச்பி மற்றும் 380 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் கார்கள் இன்றைய கால இளம் நடிகர்,நடிகையரை தாண்டி, நடிகர் கபீர் பேடி போன்ற பழம்பெரும் நடிகர்கள் வரையில் சென்றிருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. அதிலிலும் இவர் வாங்கியிருப்பது, மஹிந்திரா XEV 9S என்கிற தற்சமயம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார்களுள் ஒன்றை ஆகும். இதில் இருந்து எலெக்ட்ரிக் கார்கள் எந்த அளவிற்கு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன என்பதை அறிய முடிகிறது.

Article Corrections

படத்திற்கான உரிமம் தவறுதலாக கொடுக்கப்படாமல் இருந்த நிலையில், உரிமத்தை கொண்ட எக்ஸ் பக்கத்தின் பெயர் கொடுக்கப்பட்டது.
Article Published On: Tuesday, June 16, 2026, 23:59 [IST]
English summary
Actor kabir bedi bought mahindra xev 9s electric car
மேலும்... #electric car #bollywood #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out