பிரபல நடிகரின் சகோதரியை திருமணம் செய்த ராசி... மீண்டும் ஒரு புது பென்ஸ் கார் உடன் காமெடி நடிகர்!
இந்தியாவின் பிரபலமான நடிகர்களுள் ஒருவரான குணால் கேமு புதியதாக மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கி உள்ளார். டெலிவிரி பெற்ற புதிய ஜி-கிளாஸ் வாகனத்துடன் நடிகர் குணால் கேமு காட்சித்தரும் படத்தை ஆட்டோஹேங்கர் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்தும், ஜி-கிளாஸ் எலெக்ட்ரிக் வாகனத்தை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
1990களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான குணால் கேமு அதன்பின் தனது நகைச்சுவையான நடிப்பு மூலமாகவும், டைமிங் காமெடி உணர்வு மூலமாகவும் பாலிவுட் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதன் மூலமாக, பிரபலமான 'கோல்மால்' திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு நடிகர் குணால் கேமுவுக்கு கிடைத்தது.

அதன்பின் நகைச்சுவை கதாபாத்திரங்களை தாண்டி குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்த குணால் கேமு சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவர் இயக்கி முதல் திரைப்படமான 'மட்கான் எக்ஸ்பிரஸ்' என்கிற காமெடி த்ரில்லர் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் பெரும் வசூலை ஈட்டியது. இதன் மூலமாக, சிறந்த இயக்குனருக்கான ஃலிம்ஃபேர் விருது குணால் கேமுவுக்கு கிடைத்தது.
இவரது மனைவி சோஹா அலி கான் வேறு யாருமில்லை, பிரபல நடிகர் சயிஃப் அலி கானின் சகோதரி ஆவார். சினிமாவை கடந்து நடிகர் குணால் கேமு புது, புது கார் & பைக்குகளை வாங்குவதிலும் ஆர்வமிக்கவர் ஆவார். புதியதாக இந்த காரை வாங்கினார், மார்க்கெட்டிற்கு புதியதாக வந்த இந்த பைக்கை வாங்கினார் என இவரை பற்றி அவ்வப்போது செய்திகளை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், பிராண்ட்-நியூ மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் எலெக்ட்ரிக் வாகனத்தை இந்த பாலிவுட் நடிகர் சமீபத்தில் டெலிவிரி பெற்றுள்ளார். இதனை, மும்பையை சேர்ந்த பிரபலமான பென்ஸ் கார் டீலர்ஷிப் ஷோரூமான ஆட்டோஹேங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளது. இந்த படத்தில், பிராண்ட்-நியூ ஜி-கிளாஸ் எலெக்ட்ரிக் காரின் டிரைவர்-பக்க கதவை திறந்து குணால் கேமு ஏறி நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் எலெக்ட்ரிக் வாகனத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்களை கொண்ட எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இதனால், எலெக்ட்ரிக் மோட்டார்களின் இயக்க ஆற்றல் ஆனது இந்த வாகனத்தில் அனைத்து நான்கு சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்கிறது. இதன் மூலமாக அன்றாட நகர்புற பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி, தொலைத்தூர நெடுஞ்சாலை பயணங்கள் மற்றும் கரடுமுரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் ஏற்றதாக ஜி-கிளாஸ் எலெக்ட்ரிக் வாகனம் விளங்குகிறது.
இந்த வாகனத்தின் நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்கள் மொத்தமாக 579 எச்பி மற்றும் சுமார் 1,164 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வழங்கக் கூடியவைகளாக உள்ளன. டார்க் திறன் உடனடியாக அதிகமாக கிடைப்பதால் இந்த எலெக்ட்ரிக் வாகனத்தில் செங்குத்தான ஏற்றங்களிலும் எளிதாக ஏறலாம் என மெர்சிடிஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்த வாகனத்தில் அனைத்து நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்களுக்கும் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 116kWh திறன் கொண்ட லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பேட்டரி தொகுப்பை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 473கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது மெர்சிடிஸ் நிறுவனம். ஆஃப்-ரோடு பயணங்களுக்காக ஜி-டர்ன் மற்றும் ஜி-கிரவ்ல் போன்ற தொழிற்நுட்ப வசதிகள் இந்த வாகனத்தில் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் வாகனம் ஒன்றை வாங்க வேண்டும் என்பது பணக்காரர்களுக்கு கூட ஆசையாக உள்ளது. அப்படியிருக்க இந்த வாகனத்தை எலெக்ட்ரிக் வெர்சனில் நடிகர் குணால் கேமு வாங்கி அசத்தியுள்ளார். இந்த எலெக்ட்ரிக் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ.3 கோடிக்கும் அதிகமாகும். ஆன்-ரோடு விலை இன்னும் பல இலட்ச ரூபாய் அதிகமாக வரும்.


Click it and Unblock the Notifications