மியூசிக் டைரக்டர் வீட்டிற்கு இரவோடு இரவாக அனுப்பி வைக்கப்பட்ட கார்... விலை எவ்வளவு இருக்கும்னு நெனைக்குறீங்க?

நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், இந்த படத்திற்கு சிறப்பாக இசை அமைத்ததற்காக இசையமைப்பாளர் சாய் அபியங்கருக்கு பிராண்ட்-நியூ மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் காரை படத்தின் கதாநாயகன் சூர்யா பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் பிஇ 6 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் வாடிக்கையாளர்களை மேலும் கவரும் முயற்சியாக பிஇ 6 எலெக்ட்ரிக் காரில் 'பேட்மேன்' எடிஷனை மஹிந்திரா அறிமுகப்படுத்தியது.

actor suriya gifted mahindra car

இந்த பிஇ 6 பேட்மேன் எடிஷன் தான் தற்போது நடிகர் சூர்யாவால் இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய காருடன் எடுத்துக் கொண்ட படத்தை அபியங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த இன்ஸ்டா பதிவு இப்போது வரையில் மட்டும் சுமார் 3 லட்சம் லைக்குகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

நடிகர் சூர்யா சமீபத்தில் தான் கருப்பு திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜி.கே விஷ்ணுவுக்கு பிராண்ட்-நியூ மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் காரை பரிசாக வழங்கி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது படத்தின் இசையமைப்பாளருக்கும் நடிகர் சூர்யா பிஇ 6 எலெக்ட்ரிக் காரை பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளார்.

actor suriya gifted mahindra car

எஸ்.ஆர் பிரபு மற்றும் எஸ்.ஆர் பிரகாஷ் பாபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான கருப்பு திரைப்படம் திரைக்கு வந்து இதுவரையில் உலகளவில் சுமார் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாகவே நடிகர் சூர்யா படத்தில் பணியாற்றிய முக்கிய கலைஞர்களுக்கு மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் கார் பரிசை வழங்கியுள்ளார்.

மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிஷன் எலெக்ட்ரிக் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது முதல்முறையாக 2025 ஆகஸ்ட் மாத மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்பெஷல் எடிஷன் கார் குறுகிய எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அப்போதே தெரிவிக்கப்பட்டது. இதனால், பலரும் இந்த ஸ்பெஷல் எடிஷன் பிஇ 6 காரை வாங்குவதற்கு போட்டி போட்டு குவிய ஆரம்பித்தனர்.

இதனால், பிஇ 6 பேட்மேன் எடிஷன் காரை மஹிந்திரா நிறுவனம் மீண்டும் கடந்த 2026 மார்ச் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அப்போதும், இந்த ஸ்பெஷல் எடிஷன் கார் 999 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் இரு யூனிட்களை தான் நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளருக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

பிரபலமான ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் ப்ரோஸ் உடன் இணைந்து மஹிந்திரா உருவாக்கிய இந்த ஸ்பெஷல் எடிஷன் எலெக்ட்ரிக் காரில் பெயருக்கேற்ப பேட்மேன் ஸ்டைலில் ஒளிரக்கூடிய விளக்குகள் ஆங்காங்கே வழங்கப்பட்டுள்ளன. பிஇ 6 எலெக்ட்ரிக் காரின் வேரியண்ட்களிலேயே விலைமிக்கதாக விளங்கும் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.28.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலரது விருப்பமான எலெக்ட்ரிக் காராக மாறியுள்ள மஹிந்திரா பிஇ 6, பரிசாக கிடைக்கிறது எனும்போது எவரொருவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கும். அதுவும், பேட்மேன் எடிஷன் போன்ற ஸ்பெஷல் எடிஷன் கிடைக்கிறது எனும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். இந்த வகையில், கருப்பு திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் என இருவருமே கொடுத்து வைத்தவர்கள்.

Article Published On: Sunday, May 31, 2026, 23:07 [IST]
English summary
Actor suriya gifted mahindra be 6 batman edition electric car to music director sai abhyankkar
மேலும்... #celebrity cars #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out