1980, 90களில் உச்சத்தில் இருந்த நடிகர்... சினிமாவில் யார் கிட்டயும் இல்லாத போர்ஷே காருக்கு இந்த வயதில் ஓனரா?
நடிகர் கமலஹாசன் நடித்த பாபநாசம் படத்தை நம்மில் நிறைய பேர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். முதன்முதலாக 'திரிஷ்யம்' என்கிற பெயரில் மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் அதன்பின் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட படத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் தந்தை கதாபாத்திரத்தில் பிரபலமான தெலுங்கு நடிகர் விஜய் கிருஷ்ணா நரேஷ் நடித்திருந்தார்.
ஆந்திர பிரதேசத்தின் ஹிந்துபுர் பகுதியில் பிறந்தவரான 60 வயதான நடிகர் விஜய் கிருஷ்ணா நரேஷ், தெலுங்கு மொழியில் மட்டும் கிட்டத்தட்ட 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் நடிகர் சரத்குமாரின் 'சண்டமருதம்' உள்பட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், டிவி சீரியல் தொடர்கள் மற்றும் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

இவரை பற்றி ஏன் இப்போது பார்க்கிறோம் என்றால், நடிகர் விஜய் கிருஷ்ணா நரேஷ் புத்தம் புதியதாக விலையுயர்ந்த போர்ஷே கார் ஒன்றை வாங்கி உள்ளார். பளபளக்கும் நீல நிறத்திலான பிராண்ட்-நியூ போர்ஷே கார் நடிகர் விஜய் கிருஷ்ணா நரேஷின் இருப்பிடத்திற்கே லாரியில் கொண்டுவந்து டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.
இதனை வீடியோவாக காட்சிப்படுத்தி நடிகர் விஜய் கிருஷ்ணா நரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவில், "இந்த அழகிய 'மிருகம்' இறுதியாக என் வாகன கேரேஜை அலங்கரிக்கிறது. என் வாழ்வில் எனது புதிய போர்ஷே பனமேரா டர்போ ஜி3 ஸ்போர்ட் கார் இணைந்திருப்பதை உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி.

0-100கிமீ வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டது. 'உலக போர்ஷே குழு'-இல் இணைய வேண்டும் என்கிற எனது இளம் வயதுக் கனவு இன்று நிறைவேறியது" என நடிகர் விஜய் கிருஷ்ணா நரேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த தெலுங்கு நடிகர் புதியதாக வாங்கியிருப்பது போர்ஷே நிறுவனத்தின் பனமேரா ஜி3 என்கிற மாடல் கார் ஆகும்.
இந்தியாவில் போர்ஷே பனமேரா கார் ஆனது ஜி3 மற்றும் ஜிடிஎஸ் என்கிற இரு விதமான மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் விலை குறைவான ஜி3 மாடலை இந்த நடிகர் தேர்வு செய்து வாங்கியுள்ளார். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.1.71 கோடியாக உள்ளது.
இந்த காரில் பொருத்தப்படும் 2.9 லிட்டர் 6-சிலிண்டர், 4-வால்வு/சிலிண்டர் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 349 பிஎச்பி மற்றும் 500 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த ஸ்போர்ட்ஸ் கார் சுமார் 5 மீட்டர்களுக்கும் அதிகமான நீளம் கொண்டதாக உருவாக்கப்படுகிறது.
மேலும், நடிகர் விஜய் கிருஷ்ணா நரேஷின் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம், போர்ஷே பனமேரா ஜி3 காரை அவர் க்ரோனோ பேக்கேஜ் மற்றும் பர்ம்ஸ்டர் சவுண்ட் சிஸ்டத்துடன் வாங்கியிருப்பதை அறிய முடிகிறது. இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ள நீல நிறத்தை போர்ஷே நிறுவனம் 'லுசானோ நீலம்' என அழைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தெலுங்கு சினிமா வட்டாரத்தில் இந்த போர்ஷே காரை வாங்கிய முதல் நபர் நடிகர் விஜய் கிருஷ்ணா நரேஷ் என கூறப்படுகிறது. இவரிடம் ஏற்கனவே ரேஞ்ச் ரோவர் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் உள்ளதால் ரூ.1.71 கோடியில் போர்ஷே பனமேரா ஜி3 காரை வாங்குவது இவருக்கு ஒன்றும் பெரிய விஷயமாக இருக்காது. ரூ.1.71 கோடி என்பது காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே; ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் இன்னும் பல லட்ச ரூபாய் அதிகமாக வரும்.


Click it and Unblock the Notifications