நடிகையாக இருந்து தொழிலதிபராக மாறிய ராசி... பலர் பார்த்திராத காரை வாங்கிய பூர்ணிமா!

மலையாள சினிமா உலகில் நடிகையாக இருந்து, பின்னர் பெண் தொழிலதிபராக மாறிய பூர்ணிமா இந்திரஜித் புதியதாக எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதுவும் இவர் வாங்கியிருப்பது, பலரும் அறிந்திராத வியட்நாம் நாட்டை சேர்ந்த எலெக்ட்ரிக் காரை ஆகும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பணக்காரர்களும், அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் புதுமையான முயற்சியாக எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதால், அவர்களை பார்த்து மற்றவர்களும் எலெக்ட்ரிக் கார்களை வாங்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தற்போது மலையாள நடிகை பூர்ணிமா இந்திரஜித் வாங்கியிருப்பது வின்ஃபாஸ்ட் VF7 எலெக்ட்ரிக் கார் ஆகும்.

malayalam actress poornima indrajith buys brand-new vinfast vf7 electric car

இந்த வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் காரை பற்றி பார்ப்பதற்கு முன்னர், நடிகை பூர்ணிமா இந்திரஜித்தை பற்றி பார்த்துவிடுவோம். இளம் வயதிலேயே சில ஹிட் அடித்த மலையாள திரைப்படங்கள் மூலமாக ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த பூர்ணிமா இந்திரஜித், நடிகர் இந்திரஜித் சுகுமாறன் உடனான திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து சிறிது ஓய்வெடுத்தார்.

அதன்பின், மீண்டும் 2019ஆம் ஆண்டில் 'வைரஸ்' திரைப்படம் மூலமாக வலுவாக கம்பேக் கொடுத்த பூர்ணிமா, அதன்பின் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி உடன் 'துறமுகம்' திரைப்படத்தில் நடித்தது மட்டுமின்றி, 'கால பானி' என்கிற இந்தி வெப் சீரிஸிலும் நடித்து மீண்டும் சினிமா துறையினரின் கவனத்தை ஈர்த்தார்.

malayalam actress poornima indrajith buys brand-new vinfast vf7 electric car

நடிப்பதை தாண்டி, ஃபேஷன் டிசைனிங்கிலும் பூர்ணிமா இந்திரஜித்துக்கு ஆர்வம் உள்ளது. இதற்காக 'பிரனா' என்கிற பிராண்டில் அலங்கார ஆடைகளை வடிவமைத்து அறிமுகம் செய்ய துவங்கினார். தென்னிந்தியாவின் பல முன்னணி நடிகைகளுக்கு இவர்தான் ஆடை அலங்கார நிபுணர் ஆவார். இதன் மூலமாக பெண் தொழிலதிபர் ஆகவும் பெரும் வருவாயை ஈட்ட ஆரம்பித்தார்.

இவ்வாறு, பல துறைகளில் கால் பதித்து சாதித்து இருக்கும் நடிகை பூர்ணிமா இந்திரஜித் புதியதாக வின்ஃபாஸ்ட் VF7 எலெக்ட்ரிக் காரை ஸ்கை இன்ஃபினிட்டி வேரியண்ட்டில் வாங்கியுள்ளார். இந்தியாவில் இந்த வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் கார் எர்த், விண்ட், விண்ட் இன்ஃபினிட்டி, ஸ்கை மற்றும் ஸ்கை இன்ஃபினிட்டி என மொத்தம் ஐந்து விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வகையில் பார்த்தால், நடிகை பூர்ணிமா இந்திரஜித் வாங்கி இருப்பது VF7 காரின் விலைமிக்க டாப் வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ.26.79 லட்சமாக உள்ளது. ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.28.50 லட்சத்தை தாண்டிவிடும். இவ்வளவு விலையுயர்ந்த இந்த எலெக்ட்ரிக் காரை பூர்ணிமா டெலிவிரி பெறுவதை சம்பந்தப்பட்ட வின்ஃபாஸ்ட் கார் ஷோரூமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்த நடிகை வாங்கியிருக்கும் VF7 கார் அர்பன் மிண்ட் நிறத்தில் உள்ளது. நிமிர்ந்த தோற்றம் கொண்ட SUV வகையைச் சேர்ந்த எலெக்ட்ரிக் காரான இதில் 75.3kWh பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த பேட்டரி காரில் ஆல்-வீல்-டிரைவ் மோட்டார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 348 பிஎச்பி மற்றும் 500 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சில வருடங்களுக்கு முன் நுழைந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக தனது மார்க்கெட்டை பெரியதாக்கி வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் மட்டுமே தற்போதைக்கு ஷோரூம்களை கொண்டிருக்கும் இந்த நிறுவனம், கேரளாவில் கொச்சியில் ஷோரூமை கொண்டுள்ளது. அந்த ஷோரூமில் இருந்துதான் நடிகை பூர்ணிமா இந்திரஜித் VF7 காரை டெலிவிரி பெற்றுள்ளார்.

Article Corrections

புதிய படம் சேர்க்கப்பட்டது.
Article Published On: Friday, July 10, 2026, 23:59 [IST]
English summary
Actress poornima indrajith takes delivery of brand new vinfast vf7 electric car
மேலும்... #celebrity cars #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out