விஜய் வந்து இறங்கிய காரை விடுங்க... த்ரிஷா நிகழ்ச்சிக்கு கொண்டுவந்த ரேஞ்ச் ரோவர் காரை கவனித்தீர்களா?
விஜய் (Vijay) முதலமைச்சராக பதவியேற்று உள்ள நிலையில் ஒட்டுமொத்த தமிழகமே விழா கோலம் பூண்டது போல் உள்ளது. சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஆயிரக்கணக்கிலான மக்கள் முன் தவெக தலைவர் விஜய்க்கு தமிழக கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலத்தரப்பட்ட மக்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
மேலும், நாம் எதிர்பார்த்ததை போல் முதல்வராக பதவியேற்கும் விஜய்யின் தோழியான நடிகை திரிஷாவும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளார். அழகான நீல நிற சேலையில் திரிஷா (Trisha) விழா நடைபெறும் இடத்திற்கு வந்தது அனைவரையும் கவர்ந்துள்ளது. நடிகை த்ரிஷா வீட்டில் இருந்து கிளம்பி நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வரும் வரையில் மீடியாக்களின் மொத்த கேமராக்களும் அவர் பக்கம் தான் இருந்தன.

சரியாக காலை 9 மணியளவில் த்ரிஷா தனது ரேஞ்ச் ரோவர் (Range Rover) காரில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்திறங்கினார். டிரைவர் இருக்கைக்கு அருகே முன் இருக்கையில் அமர்ந்து த்ரிஷா பயணம் செய்து வந்தார். இந்த பயணத்திற்கு த்ரிஷா பயன்படுத்தியது வெள்ளை நிறத்திலான ரேஞ்ச் ரோவர் ஆகும்.
ரேஞ்ச் ரோவர் கார்களை பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனம் உருவாக்குகிறது. இந்தியாவில் மட்டுமில்லாமல், ரேஞ்ச் ரோவர் கார்கள் அவற்றின் கம்பீரமான தோற்றத்திற்காகவும், பவர்ஃபுல்லான என்ஜின் ஆப்ஷன்களுக்காகவும் பிரபலமானவைகளாக விளங்குகின்றன. மேலும், ரேஞ்ச் ரோவர் கார்கள் பல்வேறு விதமான தோற்றங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தியாவிலும் கூட ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Sport), ரேஞ்ச் ரோவர் எவோக் (Evoque), ரேஞ்ச் ரோவர் வேலர் (Velar) என நான்கு விதமான ரேஞ்ச் ரோவர் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுள் விலையுயர்ந்தது முதலாவதாக குறிப்பிடப்பட்ட ரேஞ்ச் ரோவர் ஆகும். விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு வருவதற்கு நடிகை த்ரிஷா பயன்படுத்தியது இந்த விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் காரே ஆகும்.
ஃபுஜி வெள்ளை நிறத்தில் இந்த காரை த்ரிஷா வைத்துள்ளார். இது இல்லாமல், சாண்டோரினி கருப்பு, எகர் கிரே, போர்டோஃபினோ நீலம், லான்டாவு ப்ரோன்ஸ், ஹகுபா சில்வர், பெகிராவியா க்ரீன், அடர் கருப்பு, டீப் சாடின் நீலம் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் ரேஞ்ச் ரோவர் கார் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் எச்.எஸ்.இ (HSE), ஆட்டோபயோகிராபி (Autobiography), எஸ்வி (SV), எஸ்வி ரந்தம்போர் எடிஷன் (Ranthambore Edition) மற்றும் எஸ்வி மசாரா எடிஷன் (SV Masara Edition) உள்ளிட்ட வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த வேரியண்ட்டில் இந்த காரை த்ரிஷா வைத்துள்ளார் என்பது உறுதியாக தெரியவில்லை.
மேலும், 3 லிட்டர் டீசல் என்ஜின், 3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 4.4 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரீட் என்ஜின் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் இந்த கார் இந்தியாவில் விற்கப்படுகிறது. மேற்கூறப்பட்ட வேரியண்ட்களை பொறுத்து என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) தற்சமயம் ரூ.2.31 கோடியில் இருந்து ரூ.4.66 கோடி வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் கார்கள் உலகளவில் பிரபலமானவைகளாக உள்ளன. குறிப்பாக, நடிகை த்ரிஷாவிடம் உள்ள ரேஞ்ச் ரோவர் ஆனது உலக மக்கள் பலருக்கு ஃபேவரட் காராக விளங்குகிறது. தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் பங்கேற்க இவ்வாறான லக்சரி காரை த்ரிஷா பயன்படுத்தி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications