12 லட்ச ரூபாய்க்குள் இதில் ஒரு காரை வாங்கிடலாமா? மைலேஜ் அதிகமா கிடைத்தாலே பாதி பிரச்சனை இல்ல!
கார்களில் சிவிடி (Continuously Variable Transmission - CVT) கியர்பாக்ஸ் சிறந்த எரிபொருள் திறன் மற்றும் நம்பகத்தன்மைக்கு புகழ்பெற்றது. இது மென்மையான பவர் டெலிவரியுடன், நகரப் பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகிறது. இந்தியாவில், பல கார் பிராண்டுகள் சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட கார் மாடல்களை வழங்குகின்றன. அவ்வாறு, இந்தியாவில் மலிவான விலையில் கிடைக்கும், சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Gearbox) கொண்ட முதல் 5 கார்களின் பட்டியல் இதோ...
5. ரெனால்ட் கைகர்/ நிசான் மேக்னைட் (Nissan Kiger/ Nissan Magnite): ஒரே மாதிரியான பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் ரெனால்ட் கைகர், நிசான் மேக்னைட் எஸ்யூவி கார்கள் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் (100 பிஎஸ், 152 என்எம் டார்க்) வருகின்றன.

இவற்றின் சிவிடி கியர்பாக்ஸ் ஆனது மென்மையான டிரைவிங், சிறந்த எரிபொருள் திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட பயண வசதியை வழங்குகின்றன. ரெனால்ட் கைகர் சிவிடி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.33 லட்சத்தில் இருந்தும், நிசான் மேக்னைட் டர்போ சிவிடி ரூ.9.67 லட்சத்தில் இருந்தும் கிடைக்கின்றன.

4. ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): ஹூண்டாய் தனது 'ஐவிடி' (iVT) கியர்பாக்ஸ் தொழில்நுட்பத்தை பல கார் மாடல்களில், குறிப்பாக பிரீமியம் ஹேட்ச்பேக் காரான ஐ20-இல் பயன்படுத்துகிறது. ஐ20 காரின் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் (88 பிஎஸ், 114.7 என்எம் டார்க் திறன்), ஐவிடி கியர்பாக்ஸ் உடன் இணைந்து சிறந்த செயல்திறனை வழங்குகிறது. ஐ20 சிவிடி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.99 லட்சம் முதல் தொடங்குகின்றன.

3. ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta): இந்தியாவின் பிரபலமான எஸ்யூவி காரான ஹூண்டாய் கிரெட்டாவிலும் 1.5 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் என்ஜின் மற்றும் ஹூண்டாயின் ஐவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 115 பி.எஸ் ஆற்றலையும், 143.8 என்.எம் டார்க் திறனையும் வெளியிடுகிறது. இந்த என்ஜின்-கியர்பாக்ஸ் காம்பினேஷன் மென்மையான செயல்திறன் மற்றும் சிறந்த மைலேஜை வழங்குகிறது. கிரெட்டா சிவிடி காரின் விலைகள் ரூ.10.72 லட்சம் முதல் ஆரம்பமாகின்றன.

2. ஹோண்டா அமேஸ் (Honda Amaze): ஹோண்டாவின் மலிவு விலையிலான காம்பாக்ட் செடான் காரான அமேஸ், 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் (90 பிஎஸ், 110 என்எம்) கொண்டுள்ளது. தினசரி பயணம் மற்றும் நகரப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட இந்த கார், லிட்டருக்கு 19.46 கிமீ மைலேஜை உறுதியளிக்கிறது. ஹோண்டா அமேஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.47 லட்சம் முதல் தொடங்குகின்றன.

1. ஹோண்டா சிட்டி/ ஹோண்டா எலிவேட் (Honda City/ Honda Elevate): நீண்ட காலமாக இந்திய சந்தையில் உள்ள ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா எலிவேட் எஸ்யூவி கார்கள், இரண்டும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் (121 பிஎஸ், 145 என்எம் டார்க்) 6-ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உடன் வருகின்றன.
சிட்டி காரின் அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதால், எலிவேட் அதே என்ஜின் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனை பயன்படுத்துகிறது. சிட்டி சிவிடி கார் 18.4 கிமீ/லி மைலேஜும், எலிவேட் சிவிடி கார் 16.92 கிமீ/லி மைலேஜும் வழங்குகின்றன. ஹோண்டா சிட்டி ரூ.11.95 லட்சம் முதல், ஹோண்டா எலிவேட் ரூ.11.59 லட்சம் முதலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் கிடைக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெளிநாடுகளில் உள்ள அளவிற்கு இந்தியாவில் இன்னும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்களை வாங்குவோரின் சதவீதம் அதிகரிக்கவில்லை. இருப்பினும், புதுமையாகவும், சிறந்த மைலேஜ் உடனும் கார் வாங்க விரும்புபவர்களுக்கு சிவிடி கியர்பாக்ஸ் ஏற்றதாக இருக்கும். இத்தகைய தரமான கியர்பாக்ஸ் கொண்ட கார்கள் இவ்வளவு குறைவான விலைகளில் கிடைப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









