வெறும் 1.05 லட்ச ரூபாய் ஹீரோ பைக்கில் மட்டுமே கிடைக்கும் வசதி! 125சிசி பைக்குகள் வேற எதிலும் இல்ல!

பைக்கில் ஏபிஎஸ் (ABS) இருந்தாலே ஒரு தனி தைரியம் கிடைக்கும். இதன் பயன் என்னவென்றால், அவசர நேரத்தில் மிக அதிகமாக பிரேக் மிதித்தால் பிரேக் தானாக லாக் ஆகிக் கொள்ளும். இன்றைய காலத்தில் பெரும்பாலான பைக்குகளில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. அதேநேரம், சில பைக்குகளில் ட்யூயல்-சேனல் (Dual-channel) ஏபிஎஸ் கிடைக்கிறது. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் (Hero Xtreme 125R): இந்தியாவில் பிரபலமான 125சிசி பைக்காக மாறிவரும் எக்ஸ்ட்ரீம் 125ஆர் அதன் கவர்ச்சிக்கரமான தோற்றத்தின் மூலமாக கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த பைக்கின் புதிய டாப் வேரியண்ட் சமீபத்தில்தான் ரூ.1.05 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

affordable dual-channel abs

பஜாஜ் பல்சர் என்160 (Bajaj Pulsar N160): மேலே கண்ட ஹீரோ பைக்கிற்கு அடுத்து குறைந்த விலையில் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் உடன் கிடைக்கும் பைக் இதுவாகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.17 லட்சமாக உள்ளது. இந்த லிஸ்ட்டில் இன்னும் சில பல்சர் பைக்குகளை பார்க்க போகிறோம். அவற்றில் விலை குறைவானது இதுவாகும்.

பஜாஜ் பல்சர் என்.எஸ்160 (Bajaj Pulsar NS160): இந்த லிஸ்ட்டில் உள்ள அடுத்த பல்சர் பைக்கான இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.20 லட்சம் ஆகும். ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் உடன் கிடைக்கும் இந்த பைக்கில் பெரிமீட்டர் ஃபிரேம், தலைக்கீழான சஸ்பென்ஷன் ஃபோர்க், நீளமான க்ளிப்-ஆன் ஹேண்டில்பார்கள் மற்றும் முரட்டுத்தனமான தோற்றம் கிடைக்கிறது.

affordable dual-channel abs

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 2வி (TVS Apache RTR160 2V): பல்சர் பைக்குகள் பார்த்தால் கண்டிப்பாக அந்த லிஸ்ட்டில் டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி பைக்குகளும் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில், குறைந்த விலையில் கிடைக்கும் இந்த 160சிசி அப்பாச்சி பைக் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் உடன் ரூ.1.23 லட்சத்தில் கிடைக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி (TVS Apache RTR160 4V): மேலே கண்ட அப்பாச்சி பைக்கின் 4 வால்வு வெர்சன் தான் இந்த பைக் ஆகும். அதாவது, இந்த பைக்கின் என்ஜின் சிஸ்டத்தில் நான்கு வால்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கிலும் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. ஆனால், இதன் விலை சற்று அதிகமாக ரூ.1.26 லட்சம் ஆகும்.

பஜாஜ் பல்சர் என்.எஸ்200 (Bajaj Pulsar NS200): 200சிசி பைக்குகளில் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ்-ஐ குறைந்த விலையில் வழங்கும் பைக் இதுவாகும். ரூ.1.32 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் இந்த பைக்கில் 200சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் மட்டுமின்றி, லிக்யுடு-கூல்டு என்ஜினும் இந்த பல்சர் பைக்கின் சிறப்பம்சம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக்கில் ஸ்டைல் மற்றும் செயல்திறனை தாண்டி பாதுகாப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் அவசியமானது ஆகும். இந்த பாதுகாப்பு அம்சத்துடன் குறைந்த விலையில் வாங்குவதற்கு மேற்கூறப்பட்ட பைக்குகள் ஏற்றவை ஆகும். ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் 125சிசி பைக்கிலேயே ட்யூயல்-சேனல் ஏபிஎஸ்-ஐ வழங்குவது சிறப்பான விஷயமாகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 12, 2026, 5:00 [IST]
English summary
Affordable dual channel abs motorcycles in india hero xtreme 125r to bajaj pulsar ns200
மேலும்... #abs #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+