ஓடி வந்து ஆட்டோவில் ஏறிய இளம்பெண்! யார்னு தெரிஞ்சிருந்தா டிரைவர் ஷாக் ஆகி இருப்பாரு!
இந்தியாவில் பிரபல நடிகர், நடிகைகள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் (Luxury Cars) பயணம் செய்வதைதான் வழக்கமாக வைத்துள்ளனர். பொதுவாக பிரபலமான நடிகர், நடிகைகளை எல்லாம், ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்களில்தான் பார்க்க முடியும்.
அத்துடன் வால்வோ (Volvo) மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) நிறுவனங்களின் சொகுசு கார்களையும், இந்தியாவை சேர்ந்த நடிகர், நடிகைகள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். உச்ச நட்சத்திரங்கள் என்றால், ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார்களே சாதாரணமான ஒரு விஷயம்தான்.

இந்தியாவை பொறுத்தவரையில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் (Shah Rukh Khan), ஹிருத்திக் ரோஷன் (Hrithik Roshan), அக்ஸய் குமார் (Akshay Kumar) மற்றும் பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) போன்ற பிரபலமான நடிகர், நடிகைகளிடம் எல்லாம் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருக்கின்றன. தமிழக முதலமைச்சர் விஜய்யிடமும் (Tamil Nadu CM Vijay) கூட ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் இருந்தது.
ஆனால் அவர் அதை விற்பனை செய்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் கூட ரோல்ஸ் ராய்ஸ் காரை விஜய் குறிப்பிடவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். சரி, விஷயத்திற்கு வருவோம். இந்தியாவை பொறுத்தவரை பிரபலங்கள் சாதாரண கார்களில் பயணம் செய்வது என்பது அரிதான ஒரு விஷயம் ஆகும்.

ஆனால் ஒரு பிரபலமான இளம் நடிகை சாதாரண காரில் கூட பயணம் செய்யாமல் ஆட்டோவில் பயணித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஆஹ்ஸாஸ் சென்னா (Ahsaas Channa) பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம்.
26 வயதான இவரை இன்ஸ்டாகிராம் தளத்தில் மட்டும் சுமார் 36 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இருப்பினும் இவர் தற்போது மிகவும் எளிமையான முறையில் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோ பாலிவுட் ஹெல்ப்லைன் இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
சாலையோரமாக நிறைய ஆட்டோக்கள் நின்று கொண்டிருந்த சூழலில், ஆஹ்ஸாஸ் சென்னா ஓடி சென்று, அதில் ஒரு ஆட்டோவில் ஏறி பயணம் செய்தை இந்த வைரல் வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. ஆஹ்ஸாஸ் சென்னாவின் சொத்து மதிப்பு (Net Worth) சுமார் 10 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் அவர் எளிமையான முறையில் ஆட்டோவில் பயணம் செய்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் நடிகர், நடிகைகள் ஆட்டோவில் பயணம் செய்வது ஆச்சரியமான ஒரு விஷயம்தான் என்றாலும், ஒரு சில சமயங்களில் இந்த நிகழ்வு நடைபெறவே செய்துள்ளது. முன்னதாக தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ், சக நடிகர் வருண் தவானுடன் (Varun Dhawan) ஒரு முறை ஆட்டோவில் பயணம் செய்துள்ளார்.
அதேபோல் பிரபல நடிகையும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினியும் (Hema Malini) கூட ஒரு முறை ஆட்டோவில் பயணம் செய்ததை நம்மால் பார்க்க முடிந்துள்ளது. அவர் பயணம் செய்தது எலெக்ட்ரிக் ஆட்டோ ஆகும். எலெக்ட்ரிக் வாகனங்களை (Electric Vehicles) பிரபலமாக்குவதற்காக அவர் எலெக்ட்ரிக் ஆட்டோவில் பயணம் செய்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications